Friday, 20 December 2013

ஸஃபர் மாதம் – பீடை மாதமா?

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர்மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.

அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர். உதாரணமாக முஹர்ரம் மாதம் பாஞ்சாவென்றும், ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும், ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டமென்றும், ரஜப் மாதத்தில் பூரியான், பாயாசம் சகிதம் பாத்திஹாவென்றும், ஷாஃபான் மாதத்தில் ஷபே பராஅத் இவைகள் போன்ற பித்அத்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

Wednesday, 11 December 2013

JESUS is/was a Muslim...Ya Allah , Let The Ummah Rise Again !!!

Quran 4:157 And [for] their saying, "Indeed, we have killed the Messiah, Jesus, the son of Mary, the messenger of Allah ." And they did not kill him, nor did they crucify him; but [another] was made to resemble him to them. And indeed, those who differ over it are in doubt about it. They have no knowledge of it except the following of assumption. And they did not kill him, for certain.Quran 4: 158 Rather, Allah raised him to Himself. And ever is Allah Exalted in Might and Wise. Quran 4:159 And there is none from the People of the Scripture but that he will surely believe in Jesus before his death. And on the Day of Resurrection he will be against them a witness.4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. 4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். Quran 5:116 And [beware the Day] when Allah will say, "O Jesus, Son of Mary, did you say to the people, 'Take me and my mother as deities besides Allah ?'" He will say, "Exalted are You! It was not for me to say that to which I have no right. If I had said it, You would have known it. You know what is within myself, and I do not know what is within Yourself. Indeed, it is You who is Knower of the unseen. Quran 5:117 I said not to them except what You commanded me - to worship Allah , my Lord and your Lord. And I was a witness over them as long as I was among them; but when You took me up, You were the Observer over them, and You are, over all things, Witness. Quran 5:118 If You should punish them - indeed they are Your servants; but if You forgive them - indeed it is You who is the Exalted in Might, the Wise. 5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். 5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்); 5:118. (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

நெஞ்சோடு... பாகம் 1-2

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
நெஞ்சோடு... பாகம் 1-2  Download - நெஞ்சோடு... பாகம் 1-2

இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்.. 

* அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை? 

* மனிதன் தெய்வம் ஆக முடியுமா? 

* பாவம் பெருக மதம் காரணமா? 

* கன்வர்ட் எனும் சொல்லே குர்ஆனில் இல்லை..

எங்கே அமைதி..?

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
எங்கே அமைதி..? Download - எங்கே அமைதி..?


இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* அமைதி இன்றைய நிலை 

* உணர்வுகளைக் காயப்படுத்தினால்... 

* இறைவனுடன் அமைதி பெற 

* அநீதியான ஆட்சி 

* இனங்கள் மோதல் இரத்தக்களறி தீர்வு என்ன?

இதுதான் இஸ்லாம் பாகம் 1-2

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
இதுதான் இஸ்லாம் பாகம்-1-2 Download - இதுதான் இஸ்லாம் பாகம் 1-2
இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* இதுதான் இஸ்லாம்

* நம்பிக்கையும் கீழ்ப்படிதலும்

* வழிபாடுகள்

* ஷரீஅத்தின் கட்டளைகள்

* இறைத்தூது

சிந்தனை செய் மனமே!

Publihser: ஜீரோ பப்ளிகேஷன்ஸ்
சிந்தனை செய் மனமே! Download - சிந்தனை செய் மனமே! 

சிந்தனை செய் மனமே!

* உன்னால் என்ன செய்ய முடியும்! 

* அவரென்ன தத்துவ ஞானியா! 

* ஆன்மிகவாதிகளின் வாழ்க்கை நிலை! 

* இறைவனை ஏன் வழிபட வேண்டும்! 

* தலைவர்களும் தொண்டர்களும்! 

* வழி தவறி விடாதே

கண்ணாடியாய் இருங்கள்

Publihser: ஜீரோ பப்ளிகேஷன்ஸ்கண்ணாடியாய் இருங்கள்
Download - கண்ணாடியாய் இருங்கள்

கண்ணாடியாய் இருங்கள்... 

* உண்மையாளராய் இருங்கள்! 

* பிறர் குறையை மறைத்திடுங்கள்! 

* இரட்டை வேடம் போடாதீர்கள்!

* தன்மையாகப் பேசுங்கள்! 

* பெருமையடிக்காதீர்கள்! 

* வசைபாடாதீர்கள்!

மாற்றுமத சகோதரர்களுடன் ஒரு கலந்துரையாடல் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

மாற்றுமத சகோதரர்களுடன் ஒரு கலந்துரையாடல் வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மற்றும் K.L.M. இப்ராஹீம் மதனீ அவர்கள். இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா நாள்: மார்ச் 7, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா

மனிதவழிமுறைகளும் இறைக்கட்டளையும் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள். இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா நாள்: மார்ச் 7, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா

இஸ்லாத்தின்-கடவுள்-கொள்கை - டாக்டர் அப்துல்லாஹ் {பெரியார்தாசன் }

மறைந்த பெரியார்தாசன் என அறியப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள். இடம்: அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா நாள்: 17 May, 2012

Monday, 9 December 2013

வரதட்சிணை - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

சுயமரியாதை - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

How to use Summer Holidays - Dr KVS Habeeb Muhamed

கோடை விடுமுறையை பயனுள்ள வழியில் செலவிட - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

விதியை நம்புதல் - மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

வழங்குபவர்: K.L.M.இப்ராஹீம் மதனீ (இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா)

நாள்: 06.12.2013

இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

“சுவனத்தை நோக்கி” - மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

17-05-2013 அன்று ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் “சுவனத்தை நோக்கி” என்ற தலைப்பில் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஆற்றிய உரை

Thursday, 21 November 2013

பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தையாக வளர்ப்போம்


இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.



1. நிலையான தர்மம்.

2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி.

3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.

முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.


திக்ர் என்ற பெயரால்...

Post image for திக்ர் என்ற பெயரால்…..
திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அணாச்சாரங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மா பரிசுத்தப்பட வேண்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் தீமை, பாவங்களின் கரைகள் கழுவப்பட்டு அதிலிருந்து பாதுகாப்பும் பெறவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. மிகக் கெட்டவனாக இருந்தபோதிலும் எப்போதாவது அவன் உள்ளம் இப்படி சிந்திப்பதுண்டு. இறைநினைவு ஒன்று மட்டுமே இத்தீய நிலைகளிலிருந்து காப்பாற்றி… தன்னை மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழச்செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால் இறைநினைவு வரவேண்டும் என்று சொல்லி தம்மைத்தாமே வருந்தித் கொள்வதும் இயல்புக்கு மாற்றமாக செயல்படுவதும் நாம் காண்கிறோம். துறவரம் தானே வகுத்துக்கொண்டு அதை தாமே மீறுபவர்களை பற்றி ”குர்ஆன்” குறிப்பிடும்போது அவர்களாகவே தங்களை கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது. இவை இறை நினைவா? உண்மையில் இறைநினைவு என்றால் என்ன, என்பதை இரத்தின சுருக்கமாக இங்கு நாம் காண்போம்.
இறைவனை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் திருப்தி அடையவில்லையா? (13:28) என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்.

Home Remedies To Remove Skin Tags

Home Remedies To Remove Skin Tags 1. Ginger Take raw ginger and make it into pieces and rub it on skin tags daily up to 2-weeks automatically tags will fall down slowly. 2.Apple cider vinegar Apple cider vinegar is a best preferable remedy for removing skin tags.Apply a dab of cider vinegar on cotton ball and apply it on the affected area it cause some pain for few minutes.Repeat this process 25 to 45 days to vanish your skin tags permanently. 3.pineapple Take pineapple juice and apply it on affected area 3-times in a day.do this 7 to 10 days without rinse it off . 4.Onion juice Take onion and make it into slices keep it in a container with added salt 8-10 hours.morning make juice with that mixture and in the evening apply this juice on tags leave it overnight and wash it in the morning.do this process every night for 10 days. 5.banana peel Take banana peel and apply it on affected area and cover up with bandages overnight, in the morning remove the bandage and rinse it off with water and repeat this every night until the skin tag will cut off from skin.

Tuesday, 5 November 2013

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?

Photo: குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?  

சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.

ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.

"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.]

குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும்.

அதற்கு பல காரணங்கள் உண்டு.

1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:

நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,

முறை.1: பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், "அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்" என்று சொல்லுங்கள்.

காரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

முறை.2. சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.

முறை.3. வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.

சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.

ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.

"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

பதில் தெரியாத இடத்தில் "தெரியாது" என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.

முறை.1. "அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்" என்று கூறலாம்.

பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.

முறை. 2. "இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்" என்று சொல்லலாம்.

பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.

பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.

பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.

முறை.3. குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், "நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்" எனலாம்.

பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.

முறை.4.

மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து "இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது" எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தய
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.

ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.

"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.]

குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும்.

அதற்கு பல காரணங்கள் உண்டு.

Saturday, 2 November 2013

THE MESSAGE (1977) in Tamil - Full Movie

'' THE MESSAGE'' IN TAMIL தி மெசேஜ் தமிழில் The film follows Muhammad starting with Islam's beginnings in Mecca in which the Muslims are persecuted for their beliefs, the exodus to Medina, and ending with the Muslims' triumphant return to Mecca. A number of crucial events, such as the Battle of Badr and Battle of Uhud are depicted, and the majority of the story is told from the point-of-view of peripheral individuals such as Hamza ibn `Abd al-Muttalib (Muhammad's uncle), Bilal and Zaid (Two of the Prophet's close companions), and on the other side Abu Sufyan (the leader of Mecca) and his wife Hind bint Utbah (enemies of Islam who later become Muslims themselves).

Friday, 1 November 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 03

தொடர்ச்சி…..

4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனை விடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்

சமூகத்திலிருந்து ஒரு பித்அத்தைக்களையும் வேளையில் அதற்குப் பிரதியீடாக ஷரீஅத் கூறும் ஒன்றை முன்வைக்க முயல வேண்டும். ஒரு பித்அத்தில் ஏதாவது நன்மை இருப்பின் அதனை ஒழிக்கும்போது அதற்குப் பகரமாக முடியுமானவரை ஷரீஆ அனுமதிக்கும் ஒரு நற்கரு மத்தை முன்வைக்க முயல வேண்டும். உள்ளங்கள் எப்பொழுதும் ஒன்றைப் பிரதியீடாகப் பெறாமல் ஒன்றை விடாது. ஒருவர் ஒரு நன்மையை விடுவதாயின் அதை ஒத்த ஒன்றையோ அல்லது அதனைவிடச் சிறந்த ஒன்றையோ பெற்ற பின்னரே அதனை விட வேண்டும், என்று கூறும் இமாம் இப்னு தைமிய்யா, தொடர்ந்து பித்அத்களைச் செய்வோர் குறைகூறப்பட வேண்டியவர்களாகவும் குற்றம் காணப்பட வேண்டியவர்களாகவும் இருப்பது போலவே நபிகளாரின் ஸுன்னாக்களை விடுவோரும் செயற்படுத்தாதோரும் கண்டிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

Thursday, 31 October 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 02

தொடர்ச்சி…..
3. பித்அத்துகளை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்

ஒரு பித்அத்தை ஒழிப்பதன் மூலம் மிக மோசமான விளைவு ஏற்படும் என்றிருப்பின் அந்த பித்அத்தை எதிர்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதற்கெதிரான போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். இக்கருத்துக்கு ஆதாரமாகக் கீழ்வரும்; நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக தூர்ஸினா மலைக்குச் சென்றிருந்தபோது, சாமிரி என்பவன் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தவர்களை ஒரு காளை மாட்டை வணங்கும் முஷ்ரிக்குகளாக ஆக்கிவிட்டான். இவ்வேளையில் அச்சமூகத்தில் மூஸா(அலை) அவர்களின் பிரதிநிதியாக இருந்த ஹாரூன் (அலை) அவர்கள் அப் பெரும் பாவச் செயலைக் கண்டும்கூட, அதனை உடன் தடுக்காது மௌனம் சாதித்து விட்டார்கள்.
தன் சமூகத்தவர்கள் வழிகெட்டு விட்டதைக் கேள்விப்பட்ட மூஸா (அலை) அவர்கள் கோபாவேசத்துடன் திரும்பிவந்து ஹாரூன் (அலை) அவர்களை நோக்கி கீழ்வருமாறு வினவினார்கள்:

Tuesday, 29 October 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 01

Photo: பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 01
Anñisa | முஸ்லிம் பெண்கள்

நடைமுறையில் பித்அத்களுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? அவற்றை ஒழிக்க முற்படும்போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அணுகு முறைகள் யாவை, என்பன பற்றி ஒரு தாஈ அறிந்திருப்பது அவசியமாகும்.

அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு சாதாரண பித்அத்கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு இடமற்ற உண்மையாகும். ஒருமுறை ஒருவர் தும்மிவிட்டு, 'அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்' எனக் கூறினார். இதனைச் செவிமடுத்த அப்துல்லாஹ் பின் உமர்(றழி) அம்மனிதரை நோக்கி 'அல்லாஹ்வின் தூதர் தும்மினால் இவ்வாறு சொல்வதற்கு எமக்குக் கற்றுத்தரவில்லையே. 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மாத்திரமே கூறுமாறு போதித்தார்கள்' எனக் கூறினார். 
இச்சம்பவத்தைக் குறிப்பிடும் ஷெய்க் கஸ்ஸாலி 'சிலரைப் பொறுத்தவரையில் ஓர் அற்ப விடயமாகக் கருதப்படுகின்ற இந்த நூதனத்தைக் கண்டும் கண்டிக்காமலிருப்பதை இப்னு உமர் (றழி) சரிகாணவில்லை. அம்மனிதர் ஸுன்னாவின் வரம்பை மீறாமல், அதில் எத்தகைய கூடுதலும் குறைத்தலும் செய்யாமலிருக்க வேண்டும், அதற்கு வழிகாட்டுவது தனது கடமையாகும் எனக் கருதினார். அன்று இப்னு உமர் (றழி) இந்த நூதனத்துக்கு இடம் கொடுத்திருந்தால் 
இன்று பித்அத் வாதிகள் தும்மிவிட்டுச் சொல்வதற்கு பல கட்டுரைகளையும் அதற்குப் பதில் சொல்வதற்கு அதைவிட நீளமான கட்டுரைகளையும் கூட உருவாக்கியிருக்கக்கூடும். இத்தகைய சிறிய விவகாரங்களில் ஏற்படும் நூதனங்கள்தான் படிப்படியாகப் பெரிய விடயங்களிலும் நூதனங்களை ஏற்படுத்தத் தூண்டுகோலாய் அமைகின்றன' எனக் குறிப்பிடுகிறார்.

ஆயினும் இஸ்லாமியப் பிரசாரத்தின்போது பித்அத்களை ஒழிப்பதில் கவனத்திற்கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உண்டு. இஸ்லாம், 'இல்ம்' எனும் அறிவாகவும் 'தஃவா' எனும் அழைப்பாகவும் 'தர்பிய்யா' எனும் பயிற்சியாகவும் 'மஃரகா' எனும் போராட்டமாகவும் மனித சமூகத்திற்கு முன்னால் வைக்கப்படுகின்றது. இஸ்லாத்தை எந்த அடிப்படையில் சமூகத்திற்கு முன்வைக்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கான அணுகுமுறைகள் வித்தியாசப்படும்.

இஸ்லாத்தை 'இல்ம்' ஆக வழங்குகின்ற பொழுது கைக்கொள்ளும் வழிமுறைகளைத்தான் அதனை தஃவாவாக வழங்கும் பொழுதும் கைக்கொள்ள வேண்டுமென்பதில்லை. தஃவாவின்போது கைக்கொள்ளும் அணுகுமுறைகளை விட்டும் வித்தியாசமாக 'தர்பிய்யா'வின்போது கைக்கொள்ளும் வழிமுறைகள் அமைய வேண்டி ஏற்படும். தஃவா, தர்பிய்யா, இல்ம் ஆகிய நிலைகளின் பொழுது கருத்திற்கொள்ளாத விடயங்களை, வித்தியாசமான வழிமுறைகளை 'மஃரகா' எனும் போராட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டி ஏற்படும்.

தஃவாவின்போது கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சங்களை - தஃவாவுக்கான முறைகளை இஸ்லாமிய ஷரீஅத் ஒரு தனித் தலைப்பின் கீழ் விளக்குகிறது. இஸ்லாமிய 'பிக்ஹ்'இல் (சட்டத்தில்) இது, 'அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா பித்தஃவா' என்றும் 'அல் ஹிஸ்பா' என்றும் வழங்கப்படுகின்றன. இஸ்லாமிய பிக்ஹ் நூல்கள் இபாதாத், முஆமலாத், ஜியானாத் போன்ற அம்சங்களைத் தனியான தலைப்புக்களின் கீழ் ஆராய்வது போலவே மேலே குறிப்பிட்ட தலைப்புக்களின் கீழ் தஃவா முறை பற்றியும் ஆழமாக விளக்குகின்றன.


இவ்வகையில் தஃவாக் களத்தில் பித்அத்களை ஒழிக்க முற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

   1. நிதானம்
   2. முக்கியமானவற்றிற்க்கு முன்னுரிமை வழங்கல்.
   3. பித்அத்களை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்.
   4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனைவிடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்.
   5. பித்அத்களை ஒழிப்பதைவிட ஸுன்னத்துக்களை உயிர்ப்பிப்பதில் கூடிய கவனம் செலுத்துதல்.
   6. பித்அத்துக்களை ஒழிப்பதுவே முழு இஸ்லாமிய தஃவாவாகும் என்ற கருத்தைக் கொள்ளாதிருத்தல்.
   7. ஹிக்மா எனும் ஞானத்தையும் 'அல்-மவ்இழதுல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கடைப்பிடித்தல்.


   1. நிதானம்

பித்அத் ஒழிப்பின் பொழுது நிதானத்தைக் கைக்கொள்வது முக்கியமான ஓர் அம்சமாகும். பித்ஆ ஹகீகிய்யா குல்லிய்யா எனும் பிரிவில் அடங்குகின்ற மிகப் பாரதூரமான பித்அத்துகளை எதிர்ப்பதிலும்கூட நிதானம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 
ஹஸ்ரத் மூஸா(அலை) அவர்கள் மீகாத்திற்காக (அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக) தன் சமூகத்தைச் சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு செலநடைமுறையில் பித்அத்களுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? அவற்றை ஒழிக்க முற்படும்போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அணுகு முறைகள் யாவை, என்பன பற்றி ஒரு தாஈ அறிந்திருப்பது அவசியமாகும்.

அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு சாதாரண பித்அத்கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு இடமற்ற உண்மையாகும். ஒருமுறை ஒருவர் தும்மிவிட்டு, 'அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்' எனக் கூறினார். இதனைச் செவிமடுத்த அப்துல்லாஹ் பின் உமர்(றழி) அம்மனிதரை நோக்கி 'அல்லாஹ்வின் தூதர் தும்மினால் இவ்வாறு சொல்வதற்கு எமக்குக் கற்றுத்தரவில்லையே. 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மாத்திரமே கூறுமாறு போதித்தார்கள்' எனக் கூறினார்.

Saturday, 26 October 2013

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 03

தொடர்ச்சி…..

5. பாவங்கள், தவறுகள், பிழைகள் ஆகியவற்றைச் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெறாதோரை முற்றாக ஏற்றுப் பின்பற்றுதல்.

ஷீயாக்கள் தங்களது இமாம்களைப் பாவங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகக் கருதி அவர்களை முற்று முழுதாக ஏற்றுப் பின்பற்றியதனால், தங்களுடைய இமாம்களின் சொல், செயல் அனைத்தையும் மார்க்கமாகக் அவர்கள் கருதினர். இதனால் உருவான பித்அத்கள் எண்ணிலடங்காதவை. ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்த பலரும்கூட தங்களது ஆன்மீக வழிகாட்டிகளையும் இமாம்களையும் மேற்குறித்த நிலையில் வைத்து நோக்க முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாகின என்பதை மறுப்பதற்கில்லை.


ஏனெனில், இத்தகையோர் தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முரணாக அமைந்த அனைத்தையும் வழிகேடாகக் கருதியது மாத்திரமல்ல, இஸ்லாத்தில் மூலாதாரங்களுக்கு அக்கருத்துக்கள் முரணாக அமைந்தாலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயங்கவில்லை. 'தக்லீத்' எனும் இமாம்களைப் பின்பற்றும் நிலையை இஸ்லாம் அனுமதித்தாலும், இத்தகைய போக்கை அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் அனுமதிக்கும் 'தக்லீத்' அமைப்பை விளக்கவந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி, ஒருவர் தான் பின்பற்றுகின்ற முஜ்தஹிதான இமாம், சரியான முடிவுகளைப் பெறும் ஆற்றல் படைத்தவராக இருப்பது போலவே பிழையான முடிவுகளுக்கும் வரக்கூடியவர் என்பதை அறிந்த நிலையில் அவரைப் பின்பற்றுவதை இஸ்லாம் அனுமதித்துள்ள 'தக்லீத்'என்றும், தனது இமாமின் கருத்துக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கின்ற நேரத்தில் தக்லீதை விட்டுவிட்டு ஹதீஸை ஏற்றுப் பின்பற்றுவோராகவும் அவர் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனால்தான் எல்லா இமாம்களும் தங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கின்றனர்.

Friday, 25 October 2013

பாவங்கள் சூழ்ந்த நிலை!

இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலனம் செய்து வரும் அல்லாஹ் மனித சமுதாயத்தை பலவீனமான நிலையிலேயே படைத்துள்ளான்.

அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (திருகுர்ஆன் 4:28)


இப்படி பலவீனமான மனித சமுதாயம் நித்தமும் பாவம் எனும் ஆற்றில் நீந்திக் கரைசேர இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நன்மை, தீமைகளை பிரித்தறியக் கூடிய ஆற்றலை மனிதனுக்கு இறைவன் வழங்கியும் பாவ காரியங்களை மிகச் சர்வ சாதாரணமாக, நாம் பாவம் செய்கிறோம் என்ற நாணம் கூட ஏன் எண்ணம் கூட இல்லாமல் செய்து வருவதை நம்மைச் சுற்றியிருப்பவர்களை நோக்கினாலே தெளிவாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நேரான வழியில் நடக்க வேண்டும், பாவங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று முயலும் மனிதன்கூட தன் அரைகுறை ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு எங்கு நோக்கினும் பாவத்தின் ஊற்றுக் கண்களே தென்படுகின்றன.

Thursday, 24 October 2013

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 02


தொடர்ச்சி…..

2. பகுத்தறிவுக்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்தல்

இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் கூறுகின்ற முடிவுகளுக்கு முரணாக, பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனடிப்படையில் முடிவுகளைப் பெற்றபோது பல பித்அத்கள் தோன்றுவதற்கு முஃதஸிலாக்களே பெரிதும் காரணமாக அமைந்தனர். இவர்கள் தமது பகுத்தறிவுக்கு முரணாகத் தெரிகின்ற ஹதீஸ்களை மறுத்தனர். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் காணப்படும் பல அடிப்படைகளையே நிராகரித்தனர். அவற்றிற்கு வலிந்து பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். இவர்களால் உருவான சில பித்அத்தான கருத்துக்கள் கீழ்வருமாறு:-


1 மறுமையில் அல்லாஹ்வைக் கண்களால் காணமுடியாது.
2 ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் உலகிற்கு வரப்போவதில்லை.
3 கப்றில்; வேதனை கொடுக்கப்படுவதில்லை.


மேலும், ஸிராத், மீஸான் போன்ற பகுத்தறிவினால் புரிந்துகொள்ள முடியாத, அகீதா தொடர்பான ஆதாரபூர்வமான பல அம்சங்களுக்கு பகுத்தறிவினடிப்படையில் பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர்.

இத்தகையோர் பற்றி ஷாஹ்; வலியுல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறார்: 'இந்த பித்அத்வாதிகள் பல இஸ்லாமிய சட்டங்களில், அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்று கூறி சந்தேகத்தை ஏற்படுத்தினர். பகுத்தறிவுக்கு முரணான அனைத்தும் மறுக்கப்பட வேண்டும் அல்லது அவற்றிற்குரிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

வீட்டை கட்டுவதற்கு முன்பு அண்டை அயலார்கள் பற்றி அறிதல்

இந்தத் தலைப்பினைத் தேர்வு செய்வதற்கான முக்கியத்துவம் இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில், அண்டை அயலார்கள் ஒருவரது பழக்க வழக்கங்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், ஏனென்றால் வீடுகள் நெருக்கமாக அமைக்கப்படுகின்றன, மக்கள் நெருங்கி வாழும் சூழ்நிலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவை மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவைகளாக இருக்கின்றன.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான்கு விதமான சந்தோஷங்கள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று நேர்மையான அண்டை வீட்டார், இன்னும் நான்கு வகையான கேடுகள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று கெட்ட அண்டை வீட்டார்.
(அபூ நயீம் - அல் ஹில்யா, 8-388, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 887).

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 01

பித்அத்கள் தோன்றுவதற்குக் காரணங்களாக அமைபவை பல. அவற்றைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சிரமமானதாகும். அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது: ''நிச்சயமாக இது தான் நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்றவைகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும்.

 நீங்கள் பரிசுத்தவான்களாவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு நல்லுபதேசம் செய்தான்.''(6:153) இத்திருவசனத்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கும் நபிமொழி மேலும் விளக்குகிறது. 'ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் எமக்கு ஒரு கோட்டைக் கீறிக் காட்டி, 'இதுதான் அல்லாஹ்வின் வழி' எனக் குறிப்பிட்டார்கள். பின்னர் அதன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இன்னும் பல கோடுகளைக் கீறிக் காண்பித்து, 'இவைகள் பல வழிகளாகும்; இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஷைத்தான் இருந்துகொண்டு அதன்பால் அழைத்துக்கொண்டிருக்கின்றான்.' எனக் கூறிவிட்டு மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதினார்கள். இவ்விளக்கத்திலிருந்து அல்லாஹ்வின் வழி - நேர்வழி - ஒன்றாக இருப்பினும், வழிகேட்டினதும் பித்அத்களினதும் வழிகள் பலவாக, வரையறைகளுக்கு உட்படாதவைகளாக இருக்கின்றன என்பதனைப் புரிந்துகொள்ளலாம். ஆயினும், இதுபற்றி ஆழமாக ஆராய்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், பித்அத்கள் உருவாவதற்குரிய பிரதான காரணங்களை விளக்கியுள்ளனர்.

Thursday, 10 October 2013

பழைய சாதத்தின் மகிமை

முதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

 

கூடவே 2 சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்புசக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை நெருங்காது !


பழைய சாதத்தின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியவற்றில் இருந்து சில:

Monday, 7 October 2013

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்.


குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

· பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

· புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.

விதி பற்றிய நம்பிக்கை / ஒரு வரைவிலக்கணம்



இஸ்லாம் என்ற மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களும் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகிவிட முடியாது என்று அதில் ஆழமான நம்பிக்கையையும் வைத்துள்ளோம். அல்லாஹ், மலக்குமார்கள், நபிமார்கள், வேதங்கள், இறுதி நாள், விதி ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவதுதான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றைக்கூட நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும் என்பதும் நாம் அறிந்ததே.

எந்த 6 அம்சம் நம்மை முஸ்லிம் என்று பறைசாற்றுகிறதோ, எந்த 6 அம்சத்தை ஆழமாக நாம் நம்ப வேண்டுமோ, அதில் ஓரம்சம் மிகுதி 5 அம்சங்களையும் பொய் என்று பறைசாற்றுவதுபோன்று மேலோட்டமாகப் பார்த்தால் விளங்கும்.
அதுதான் விதி பற்றிய நம்பிக்கை.

வேதங்கள்

மக்களை நேர்வழியின் பால் அழைப்பதற்காக இறை தூதர்களுக்கு வேதங்களும் ஸுஹ்ஃபுகளும் அவ்வப்போது இறைவனால் அருளப்பட்டு வந்தன.அவற்றுள் சிலவற்றை அருள் மறை அல்குர்ஆன் அறிவித்துள்ளது.
1. தவ்ராத் வேதம் நபி மூஸா (அலை) அவர்களுக்கும், (5:44)
2. ஸபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கும், (17:55,21:105,)
3. இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும், (27:57,5:46)
4. குர்ஆன் வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், (3:4,5:44,5:48,12:2)
(நான்கு வேதங்கள்) அருளப்பட்டுள்ளன. அது போல,

5. நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும்
6. நபி மூஸா (அலை) அவர்களுக்கும் (தவ்ராத் வேதம் அருளப்படுமுன்) ஸுஹ்ஃபுகள் அருளப்பட்டதாகவும். 87: 18-19. 53:36-.37 வசனங்கள் தெரிவிக்கின்றன.

நபிமார்கள்

உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு முஹம்மது நபி (ஸல்) வரை இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வல்ல இறைவன் அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளான். 
இவர்கள் அனைவரும் ஆண்களாவர்.பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இறைவன் ஒருவனே! அவனையே வழிபட்டு வரவேண்டும். அவனுக்கு எந்த வகையிலும் இணைவைத்தல் கூடாது.அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்படவும், விலக்கியவற்றை தவிர்;ந்து நடக்கவும் மக்களை போதித்து அவர்களை இறைன் பால் அழைப்பதுவே இவர்களின் கடமையாகும்.
‘உலகில் ஒரு இலட்சத்து இருபத்திநாலாயிரம் நபிமார்கள் அனுப்பபட்டுள்ளன.அவர்களில் 313 இரசூல்மார்கள் ஆவார்கள்’ என அஹ்மது, இப்னு ஹிப்பான்,பிதாயா வந்நிஹாயா போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கருத்து வேறுபாடு உள்ளதால் இத்தனைபேர் தான் என வரையறுக்காது ‘ இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை இறைவன் உலகிற்கு அனுப்பியுள்ளான’; என நம்புவதே நம்மீது கடமையாகும்.
இவர்களில் முதல் இறைதூதர் ஆதம் (அலை) அவர்களும், இறுதியானவர் முஹம்மது (ஸல்) அவர்களுமாவர்கள்.இவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை இறைமறை நெடுகிலும் கூறப்பட்டுள்ளன.

மறுமை நாள்/இறுதி நாள்

மறுமை நாள்/இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வதன் பொருள்
இந்த உலகிற்கும் உலகிலுள்ள அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.        அந்த தவணை வரும்போது அனைத்தும் அழிந்து விடும். பின்னர் இறந்தவர் யாவரையும் உயிர் கொடுத்து எழுப்பி விசாரணை செய்து அவரவர் நன்மை தீமைகளுக்கேற்ப நீதி வழங்குவான். நன்மை செய்தோருக்கு சுவாக்கமும், பாவம் செய்தோருக்கு நரகமும் கூலியாக வழங்கப்படும். அந்த நியாயத் தீர்ப்பு நாளை நம்புவதற்கே ‘ கியாமத்து நாள்’ இறுதி நாள் எனப்படும்.
பலபெயர்கள்
இறுதி நாள் வரும்போது வானம்,பூமி,சூரியன்,விண்கோள்கள்,பூமியில் வாழும் மனிதர்கள்,உயிரினங்கள்,தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.அந்நாளில் அல்லாஹ் ஒருவன் மடடுமே நிலைத்திருப்பான்.
கியாமத் நாள்,மறுமை நாள்,நியாயத் தீர்ப்பு நாள், யுக முடிவு நாள்,இறுதி நாள், சூர் ஊதப்படும் நாள் என பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. பின்னர் மீண்டும் மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர்.

அல்லாஹ் என்றால் யார்...??? -அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்-

அல்லாஹ் என்றால் யார்...???
-அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்-

நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்காவிட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
நீங்கள்அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும்,இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!

கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமிஉட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம்,வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது
இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?
நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம்,அமர்கிறோம், ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப் படுத்தியவன்

ஈமானின் அடிப்படைகள்

    ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்தாவது: நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும்.
    இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும்.
    எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது நாம் இவ்வுலகில் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.

மலக்குமார்கள்

மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன.

1.வானவர்கள் என்றால் யார் ?
மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்
வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)
இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்.

மருத்துவத்திற்கு பயன்படும் முட்டைகோஸ்

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

Saturday, 21 September 2013

Deathbed of ABDULLAH ibn MASÚD

Islam gives great importance to rights of Parents


[♥] ISLAM is not Just a religion but its a complete way of life. It guides us about all matters of life. Islam gives great importance to rights of Parents.
Our Parents faces so much difficulties for us when we where small. So when they grow old and we are Young its our duty to look after them. treat them respectfully, Obey them, don,t harm them,make dua (Prayer) for them [♥] ....(nida)

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?

Photo: குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?
Anñisa | முஸ்லிம் பெண்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!

1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.

ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவைகளை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.

5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.

8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும்.

-இன்று ஒரு தகவல்
Winyarl

உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
~MP~
பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!


Wednesday, 11 September 2013

இரண்டு வயது உள்ள குழந்தையின் மார்க்க அறிவை பாருங்கள்!

இந்த குழந்தை போன்று எல்லா குழந்தைகளும் மார்க்கத்தில் ஆர்வம் வருவதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் தன் பிள்ளைகளின் மீது .
எல்லா பிள்ளைகளும் பிறக்கும் பொது நல்ல பிள்ளைகள் தான் ,ஆனால் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்குது அவர்களின் எதிர்காலாம்
!

பெற்றோரை பேணுவோம்! நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்!

ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி “அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா
தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி
ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல்குர்ஆன் 31:14

பெற்றோர்களுக்கு பணிவிடை

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்
(رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ )
அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவன் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4628)

( الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ)
சொர்க்க வாயில்களில் சிறந்த வாயில் தந்தை ஆவார். நீ விரும்பினால் அந்த வாயிலை பாதுகாத்துக்கொள்! அல்லது வீணாக்கிவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1822, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான்)

( عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا)
அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்;. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)

தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்

ஒரு வீடு என்பது மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும் பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
பெற்றோர் அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது. ‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ சில இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் – தந்தை உறவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

தாய்க்கு முதலிடம்:
‘மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா. ‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’ என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க ‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)
ஒரு குழந்iயின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது: ‘அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.’ ( அல் குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!
குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!