Monday, 7 October 2013

மறுமை நாள்/இறுதி நாள்

மறுமை நாள்/இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வதன் பொருள்
இந்த உலகிற்கும் உலகிலுள்ள அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.        அந்த தவணை வரும்போது அனைத்தும் அழிந்து விடும். பின்னர் இறந்தவர் யாவரையும் உயிர் கொடுத்து எழுப்பி விசாரணை செய்து அவரவர் நன்மை தீமைகளுக்கேற்ப நீதி வழங்குவான். நன்மை செய்தோருக்கு சுவாக்கமும், பாவம் செய்தோருக்கு நரகமும் கூலியாக வழங்கப்படும். அந்த நியாயத் தீர்ப்பு நாளை நம்புவதற்கே ‘ கியாமத்து நாள்’ இறுதி நாள் எனப்படும்.
பலபெயர்கள்
இறுதி நாள் வரும்போது வானம்,பூமி,சூரியன்,விண்கோள்கள்,பூமியில் வாழும் மனிதர்கள்,உயிரினங்கள்,தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.அந்நாளில் அல்லாஹ் ஒருவன் மடடுமே நிலைத்திருப்பான்.
கியாமத் நாள்,மறுமை நாள்,நியாயத் தீர்ப்பு நாள், யுக முடிவு நாள்,இறுதி நாள், சூர் ஊதப்படும் நாள் என பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. பின்னர் மீண்டும் மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர்.
நல்லவர்கள் பேரின்பம் நிறைந்த பெருவாழ்வைப் பெற்று சுவர்க்கத்திலே இருப்பர். தீயவர்கள் துன்பம் நிறைந்த பல்வேறு தண்டனைகளை நரகில் பெறுவர். இவ்வாழ்விற்கு அழிவே கிடையாது.
இந்நாளிற்கு மேலும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவமுடியாத நாள்,திரும்பச் செல்லும் நாள்,கூலிவழங்கும் நாள்,விசாரிக்கப்படும் நாள்,பயன் தரும் நாள்,உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனை சந்திக்கும் நாள், இறைவன் முன் நிறுத்தப்படும் நாள், அவ்வுலகம் கைசேதப்படும் நாள், தப்பிக்க  இயலாத நாள்,எழுப்பப்படும் நாள் என்பனவாகும்.
சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள், போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவாகக் குறிக்கப்படுகின்றன.
அழிக்கப்படும் நாள் ,மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாள் ஆகிய இருநாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் வரை எந்த மனிதரும், வானவரும் கூடஅறியமுடியாத நாள். .
எப்போது வரும்?
அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே தெரிந்த இரகசியமாகும்
இறைவன் ஒருவனுக்கே தெரிந்த இரகசியமாயினும் அது எப்போது  ஏறபடும் என்பதற்குரிய அடையாளங்களை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களின் முன்னறிவிப்புகளில் சில நடந்து முடிந்துவிட்டன.அவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நடந்ததன் மூலம் அவர்கள்”ஓர் இறைதூததர்”  தான் என்பது நிரூபணமாயிற்று்.
நடந்தது போக, இனியும் நடக்கும் என அவர்கள் அறிவித்த அடையா ளங்கள் யாவும் நிச்சயம் நடந்தே தீரும்.இதில் எவ்வித சந்தேகமுமே இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறுமை நாள் வந்து விடும்.
மறுமை நாள் என்பது கிடையாது அது வராது என்போரும், வரும் ஆனால் இப்போது வராது என சந்தேகப்படுவோரும் நம்மில் உள்ளனர். சந்தேகிப்பவர்களுக்கும் வராது என்போருக்கும் நபி(ஸல்) அவர்கள்  கூறிய பல அடையாளங்கள் இப்போதும் நிகழந்த வண்ணமுள்ளன.
இனி நிகழும் அடையாள காலங்களில் நாம் வாழலாம்.அல்லது வாழாமலும் போகலாம்.அந்த அடையாள நிகழ்வு காலங்களில் (ஈமானிய) இறை விசுவாசத்தில் குழப்பங்கள் பல ஏற்படும்.அப்போது வாழும் முஸலிமகள் முழுமையான ஈமானுடன் மரணிக்க நாம் பிரார்த்திப்போமாக!
முக்கிய அடையாளங்கள்                                                                                            நபி(ஸல்) பல சிறிய அடையாளங்களும், பல பெரிய அடையாளங்களும் உலகம் அழியுமுன் தோன்றும் என்று முன்னறிவிப்பு   செய்துள்ளார்கள். அவற்றுள் சில முக்கிய அடையாளங்களாவன:-
1. முஸ்லிமகள் சிலை வணக்கம் புரிவர்.2.அறியாமை பெருகும். 3.விபச்சாரம் பெருகும்.4 குடி அதிகரிக்கும். 5.கொலை குற்றங்கள் அதிகமாக நிகழும். 6. காலம் சுருங்கும். 7. குழப்பங்கள் மலியும்.8. தனிமையை மனிதன் விரும்புவான்.9. வாழவேண்டுமென்ற ஆசையே இல்லாது போய்விடும். 10. தகுதியற்றவனிடம் ஆட்சி அதிகாரங்கள் வரும்.11.  மிகவும் மோசமானவர்கள் ஆட்சிக்கு வருவர். 12.எங்கு பார்த்தாலும் போர் நடைபெறும். 13. ஆண்களின் எண்ணிக்கை குறையும்.14.தாய்க்கு எஜமானியாக மகள் இருப்பாள். 15. சாமானிய மனிதன் உயர்ந்த நிலையை அடைவான். 16.செல்வம் பெருகும்.17. கருமித்தனம் ஏற்படும். 
”(மறுமை  நாள் நெருங்கும் போது )   காலம் சுருங்கும். செயல்கள் குறையும்.மக்களின் உள்ளங்களில் கருமித்தனம் உருவாகும்.குழப்பம் தோன்றும். கொலை பெருகும். என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி),நூல்: புகாரி 7061)
கருமித்தனம் உருவாகும் என்பதன் பொருள் செல்வம் பெருகி தர்மம் செய்யப் பொருளை எடுத்துச் சென்றால் வாங்குவதற்கு எவருமே இருக்கமாட்டார்கள்.அப்போது செல்வந்தர் விரக்தியடைந்து கொடுக்கும் வாய்ப்பே இல்லாது போய் கருமியாகிவிடுவான் என்பதையே இந்த நபி மொழி அறிவிக்கிறது.
18. மாட மாளிகைகள் கட்டுவதில் போட்டி உருவாகும். ” மேலும் மக்கள் (போட்டிபோட்டுக்கொண்டு உயரமாக கட்டாத வரை மறுமை வராது. என்று நபி (ஸல்) கூறியிருப்பது மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். (அறிவிப்பவர்: அபூஹரைரா(ரலி) நூல்: புகாரி-ஹதீஸின் ஒரு பகுதி) இன்று உலகில் எங்கு பார்த்தாலும் பலமாடிக்கட்டிடிங்களை போட்டியிட்டுக் கொண்டு கட்டிவருவதை பார்க்கிறோம்
19.நபியென கூறுவோர் வருவர். (இன்று இறையருள் பெற்றவர் எனவும்,தெய்வீகத்தன்மை பெற்றவர் எனவும் உலா வரும் பலரை காணமுடிகிறது.
20.பூகம்பம் அதிகரிக்கும். 21. தவறான தொழில்களை நல்லது எனச் செய்வர்.
 ” ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டதா? அனுமதிக்கப் படாததா? என்பதைப் பொருட்படுத்தமாட்டார்கள். (அபூஹரைரா(ரலி)நூல்:புகாரி) 
21. பள்ளிவாசல்கள் பெருமைக்காக (பிரமாண்டமாக)க் கட்டப்படும்.  மக்கள் பெருமைபாராட்டவே (தேவைக்கதிகமாக) பள்ளிவாசல்களை கட்டுவர்.இது மறுமை நாளின் அடையாளஙளில் என்றாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அனஸ்(ரலி),நூல்: புகாரி) 22. இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்படும்.23. முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள். (முஸ்லிமகள் இஸ்லாத்தைவிட்டுவிட்டு சிலை வணக்கங்களின் பக்கம் திரும்புவர்)
பத்து பெரிய அடையாளங்கள்
1. புகை மூட்டம் ஏறபடும். 
2. தஜ்ஜால் என்னும் என்னும் கொடியோன் தோன்றுவான்.
3. தாப்பத்துல் அர்ள் என்னும் அதிசயப்பிராணி தோன்றும்.
4.சூரியன் மேற்கே உதிக்கும்.
5. நபி ஈஸா(அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி வருவார்கள்.
6. யஃஜ்உஜ், மஃஜ்உஜ் (Ya’jooj & Ma’jooj)  வருகை (குர்ஆன் 21:96) 
7.கிழக்கே ஒரு பூகம்பம்.
8. மேற்கே ஒரு பூகம்பம் 
9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்.
10. இறுதியாக எமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச்   சென்று ஒன்று சேர்த்தல்.
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்நாள் ஏற்படாது. (அறிவிப்பவர்: ஹ{தைபா(ரலி),நூல்: முஸ்லிம்)

No comments:

Post a Comment