Thursday, 24 October 2013

வீட்டை கட்டுவதற்கு முன்பு அண்டை அயலார்கள் பற்றி அறிதல்

இந்தத் தலைப்பினைத் தேர்வு செய்வதற்கான முக்கியத்துவம் இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில், அண்டை அயலார்கள் ஒருவரது பழக்க வழக்கங்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், ஏனென்றால் வீடுகள் நெருக்கமாக அமைக்கப்படுகின்றன, மக்கள் நெருங்கி வாழும் சூழ்நிலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவை மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவைகளாக இருக்கின்றன.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான்கு விதமான சந்தோஷங்கள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று நேர்மையான அண்டை வீட்டார், இன்னும் நான்கு வகையான கேடுகள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று கெட்ட அண்டை வீட்டார்.
(அபூ நயீம் - அல் ஹில்யா, 8-388, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 887).
இந்த விஷயத்தின் பாரதூரமான விளைவுகளின் காரணமாகவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கெட்ட அண்டை அயலாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துள்ளார்கள். அதாவது, ''அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ஜார் அல் ஸுஃ ஃபீ தார் அல்-முகாமஹ் ஃப இன்ன ஜார் அல் பாதியா யாதஹாவ்வில்'' (யா அல்லாஹ், எனது நிரந்தரமான இல்லத்தின் (அருகில் உள்ள) அண்டை அயலார்களின் தீங்குகளை விட்டும், (இன்னும்) பாலைவனத்தில் (பயணத்தின் பொழுது என்னுடன்) அருகாமையில் உள்ள அண்டை அயலாரிடமிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்''.


உங்களது நிலையான இல்லங்களுக்கு மிக அருகாமையில் உள்ள கெட்ட அண்டை அயலார்கள், இவர் (களின் தீங்கு)களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளுங்கள், ஏனென்றால் பாலைவன (பயணத்தில் உங்களுடன் பயணமாகக் கூடியவர்) உங்களுடனேயே (இறுதி வரை தொடர்ந்து) வரக் கூடியவராகவும் உள்ளார்.
(புகாரீ - அல் அதப் அல் முஃப்ரத் 117, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 2967).

பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களது குழந்தைகள் கெட்ட நடத்தையுள்ளவர்களாக இருப்பின் அவர்களால் விளையக் கூடிய தீங்குகள், துன்பங்கள் பற்றி நாம் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. எனவே மேற்கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைப்படி அண்டை அயலார்களைத் தேர்வு செய்து அதன் பின் நமது இல்லங்களை அமைத்துக் கொள்வது மிகச் சிறந்த இஸ்லாமிய வாழ்வுக்கு வழிவகுக்கும். இன்னும் வாடகைக்குத் தங்களது இல்லங்களை விடக் கூடியவர்களும் நல்ல இஸ்லாமியப் பற்றுள்ள குடும்பங்களுக்கு வாடகைக்கு விடுவது சிறந்தது. அல்லது தனக்கு அருகில் உள்ள வீட்டார்களுக்கு இஸ்லாமியச் சூழ்நிலையை அறிமுகப்படுத்துவதும், அவர்களால் எழக் கூடிய பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடிய வழிமுறையாகவும் அமையும். நல்ல அயலார்கள் விலைமதிப்பற்ற செல்வத்தைப் போன்றவர்கள்

No comments:

Post a Comment