Post by A Samad Khan.
Showing posts with label இஸ்லாம்-பிறர் பார்வையில். Show all posts
Showing posts with label இஸ்லாம்-பிறர் பார்வையில். Show all posts
Wednesday, 11 December 2013
JESUS is/was a Muslim...Ya Allah , Let The Ummah Rise Again !!!
Labels:
அழைப்புப்பணி,
இஸ்லாம்-பிறர் பார்வையில்,
வீடியோ
Friday, 3 May 2013
அதான் சொல்லும் போது மலர்கள் எவ்வாறு செயற்படுகின்றன - CNN ஆய்வு
அதான் (இஸ்லாமியர்களின் தொழுவதற்கான அழைப்பு) கூறும்போது மலர்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதனை சி.என்.என். தொலைக்காட்சி ஆய்வு நடத்தியுள்ளது
17:44 تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا
17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
24:41 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ ۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
24:41. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
25:58 وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ ۚ وَكَفَىٰ بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا
25:58. எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
32:15 إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ۩
32:15. நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
Labels:
இஸ்லாம்-பிறர் பார்வையில்,
செய்திகள்,
வீடியோ
Monday, 1 April 2013
குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் கண்ட அதிசயங்கள்
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார்.
அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

யுவான் ரிட்லி:- புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்…
“நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ‘கெட்ட பெண்’ என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை – நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
Sunday, 17 March 2013
ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!திருமதி. சகுந்தலா நரசிம்ஹன்
'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.
சவூதி
அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும்
பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச்
சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி
அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின்
அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய
கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது
என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!
சவூதிக்குக்
கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி
அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன்.
என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான
வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை
அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.
மறுநாள்
காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய
கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை
சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை
நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக
இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.
"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.
எனது
தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு
சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே
சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!.
Thursday, 15 November 2012
இஸ்லாத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள்
இஸ்லாத்தை பற்றி உலக அறிஞர்கள் , வரலாறு படைத்தவர்கள் என்ன
கூறியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வது உலக வரலாறு பற்றிய எமது பார்வையை
விரிவாக்க உதவும் என்பதுடன் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மனிதம்
கொண்ட கோட்பாடு என்பதை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் என்ற
காரணத்தால் இந்த வீடியோவை இங்கு பதிவு செய்கிறோம்.
இஸ்லாம் பற்றி பேரறிஞர் அண்ணா
இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.
இஸ்லாம் பற்றி பெருமையாக அண்ணாவும் சொல்றாங்க கேளுங்க...

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு - உரை: ஈ.வெ.ரா. பெரியார்
இஸ்லாம் பற்றி பெருமையாக பெரியாரும் சொல்றாங்க கேளுங்க...
இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.
இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.
Labels:
இஸ்லாம்-பிறர் பார்வையில்,
வீடியோ
Subscribe to:
Posts (Atom)