பித்அத்கள் தோன்றுவதற்குக் காரணங்களாக அமைபவை பல. அவற்றைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சிரமமானதாகும். அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது: ''நிச்சயமாக இது தான் நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்றவைகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும்.
நீங்கள் பரிசுத்தவான்களாவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு நல்லுபதேசம் செய்தான்.''(6:153) இத்திருவசனத்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கும் நபிமொழி மேலும் விளக்குகிறது. 'ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் எமக்கு ஒரு கோட்டைக் கீறிக் காட்டி, 'இதுதான் அல்லாஹ்வின் வழி' எனக் குறிப்பிட்டார்கள். பின்னர் அதன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இன்னும் பல கோடுகளைக் கீறிக் காண்பித்து, 'இவைகள் பல வழிகளாகும்; இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஷைத்தான் இருந்துகொண்டு அதன்பால் அழைத்துக்கொண்டிருக்கின்றான்.' எனக் கூறிவிட்டு மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதினார்கள். இவ்விளக்கத்திலிருந்து அல்லாஹ்வின் வழி - நேர்வழி - ஒன்றாக இருப்பினும், வழிகேட்டினதும் பித்அத்களினதும் வழிகள் பலவாக, வரையறைகளுக்கு உட்படாதவைகளாக இருக்கின்றன என்பதனைப் புரிந்துகொள்ளலாம். ஆயினும், இதுபற்றி ஆழமாக ஆராய்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், பித்அத்கள் உருவாவதற்குரிய பிரதான காரணங்களை விளக்கியுள்ளனர்.
இவ்வகையில் இமாம் ஷாதிபீ (றஹ்) தனது அல் இஃதிஸாம் எனும் நூலில் பல காரணங்களைக் குறிப்பிட்டு, அவைபற்றி அழகாக விளக்கியுமுள்ளார். அவ்வாறே பித்அத் பற்றி நீண்டதோர் ஆய்வை மேற்கொண்டு, அத்துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட கலாநிதி இஸ்ஸத் அலி அதிய்யாவும் தனது அல் - பித்ஆ எனும் ஆய்வு நூலில் மேலும் சில காரணங்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். நவீன இஸ்லாமிய உலகின் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்ற முஹம்மத் அல்- கஸ்ஸாலியும், பித்அத்களின் தோற்றத்திற்கான இரு அடிப்படைக் காரணங்களை விளக்கியுள்ளார். காரணங்களைக் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம். 1. அறியாமை 2. பகுத்தறிவின் மீதுள்ள நம்பிக்கையும் நல்லெண்ணமும் 3. சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடுத்தல் (மனோ இச்சையைப் பின்பற்றல்) 4. அல்முதஷாபிஹ் எனும் புலனுறுப்புக்களால் புரிய முடியாதவற்றை ஆராய்ந்து பின்பற்ற முயலல். 5. பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாப்புப்; பெறாதோரை ஏற்று அங்கீகரித்துப் பின்பற்றுதல். 6. ஷரீஅத்தில் சட்ட மூலாதாரமாகக் கொள்ள முடியாத ஒன்றை ஏற்றுச் செயற்படல். 7. சில ஹதீஸ்களை தவறாக விளங்கிக்கொள்ளல். 8. தீனைப் பின்பற்றுவதில் வரம்பு மீறிய தீவிரப் போக்கைக் கடைப்பிடித்தல். இக்காரணங்கள் ஒவ்வொன்றும் சுருக்கமாகக் கீழே ஆராயப்படுகின்றன. 1.அறியாமை: மார்க்கத்தைப் பற்றித் தெளிவில்லாதவர் அது பற்றிப் பேசுவதனாலும் அதனைக் கற்பிப்பதனாலும், அது தொடர்பான தீர்ப்புக்களை வழங்குவதனாலும் பித்அத்கள் தோன்ற ஏதுவாகிறது. அறியாமை எனும்போது கீழ்வரும் விடயங்கள் பற்றிய தெளிவின்மையையே குறிக்கும். 1. மொழியின் போக்கு அதன் பிரயோகங்கள் பற்றிய தெளிவின்மை 2. ஸுன்னா பற்றிய அறியாமை அல்குர்ஆன் தூய்மையான அறபு மொழியில் உள்ள வேத நூலாகும். வேறெந்த மொழிக்கும் இல்லாத தனித்துவமான பண்புகளையும் நுணுக்கங்களையும் தன்னகத்தே கொண்ட அம்மொழி, இம் மொழிக்கே உரிய பண்புகள், நுணுக்கங்கள் பற்றி அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர். குறிப்பாக, இமாம் அஷ்ஷாபிஈ தனது அர்ரிஸாலா எனும் நூலில் இது பற்றி விளக்கியுள்ளார். ஓர் இடத்தில் கீழ்வருமாறு அவர் குறிப்பிடுகிறார்: 'அறபிகளின் மொழி, மொழிகளிலே மிக விரிவானதாகவும் அதிகமான சொற்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. நாம் அறிந்தவரையில் இம்மொழி பற்றிய முழுமையான ஞானத்தை நபிமார்களைத்தவிர ஏனைய மனிதர்களால் பெற்றுக்கொள்வதென்பது சிரமமானது.' அறபு மொழியின் நுணுக்கங்களை விளக்கவந்த இமாம் இப்னு குதைபா இரு காரணங்களை எடுத்துக் காட்டுகிறார். - ஹாதா காதிலுன் அகீ - ஹாதா காதிலு அகீ இவ்விரு வாக்கியங்களும் குறியீட்டால் மாத்திரமே வேறுபடுகின்றன. முதல் வாக்கியத்தில் 'காதிலுன்' என்றும் இரண்டாம் வாக்கியத்தில் 'காதிலு' என்றும் வந்திருப்பதனை அவதானிக்கலாம். இச்சிறிய மாற்றம் வசனத்தின் பொருளையே மாற்றி விடுகிறது. முதலாவது வசனத்தின்படி, 'இவன் எனது சகோதரனை இன்னும் கொலை செய்யவில்லை' என்ற பொருளும், இரண்டாம் வாக்கியத்தின்படி 'இவன் எனது சகோதரனைக் கொலைசெய்துவிட்டான்' எனும் பொருளும் பெறப்படுகின்றன. இமாம் இப்னு குதைபா குறிப்பிடும் அடுத்த உதாரணம் கீழ்வருமாறு: 'பலா யஹ்சுன்க கவ்லுஹும் இன்னா நஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்' இது ஒரு குர்ஆன் வசனமாகும். இதன் பொருள், 'நபியே அவர்களது பேச்சு உமக்குக் கவலையைத் தர வேண்டாம், நிச்சயமாக நாம் அவர்கள் இரகசியமாகக் கூறுபவற்றையும் பகிரங்கமாகக் கூறுபவற்றையும் அறிந்தே வைத்திருக்கிறோம்' என்பதாகும். இவ்வசனத்தில் 'இன்ன' என வரும் சொல்லை 'அன்ன' என்று வாசித்துவிட்டால் வசனத்தின் பொருளே தலைகீழாக மாறிவிடும். இந்த நிலையில் வசனத்தின் பொருள் 'நாங்கள் அவர்கள் ரகசியமாகக் கூறுபவற்றையும் அறிந்தே இருக்கிறோம் என்று அவர்கள் கூறுவது உங்களுக்குக் கவலைதராமல் இருக்கட்டும்' என மாறிவிடும். இவ்வுதாரணத்தைக் கூறும் இமாம், வேண்டுமென்றே ஒருவர் மேற்குறிப்பிட்டவாறு 'இன்ன' என்பதை 'அன்ன' என்று வாசித்தால் (மிகப் பெரியதொரு பொருள் மாற்றம் ஏற்படுவதனால்) காபிராகிவிடுகிறார் என்ற கருத்தையும் கூறுகிறார். இத்தகைய காரணங்களினால்தான், ஷரீஅத் பற்றிப் பேசுபவர் அறபு மொழியை துறைபோகக் கற்றிருத்தல் வேண்டும் என அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் வலியுறுத்துகின்றனர். இது பற்றி இமாம் ஷாதிபீ குறிப்பிடும் போது, 'ஷரீஆ சார்ந்த எவ்விடயம் பற்றி ஒருவர் பேசுவதாயினும், அவர் அறபியாகவோ அல்லது அறபு மொழியை அறபிகளின் தரத்தை அடையும் அளவுக்கோ அல்லது அறபு மொழி மேதைகளான கலீல், ஸீபவைஹி, அல்கிஸாஈ, அல் பர்ராஃ போன்றோர்களின் தரத்தை அடையுமளவுக்கோ கற்றறிந்து அறபியை ஒத்தவராகவோ இருத்தல் வேண்டுமெனக் கூறுகிறார். அறபு மொழிப் பாண்டித்தியம் இல்லாத நிலையில் மார்க்கத் தீர்ப்புக்களை வழங்க முன்வந்த பலர், பித்அத்கள் பல உருவாவதற்குக் காரணமாக அமைந்தனர். அறபு இலக்கணம் பற்றிய போதிய அறிவில்லாததன் காரணத்தினால் பலதார மணம் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் வசனத்தைப் பிழையாக விளங்கி, ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒன்பது பெண்களை மனைவியராக வைத்துக்கொள்ள முடியும் என்ற பித்அத்தான கருத்தை வெளியிட்டனர். அறபுப் பதங்களுக்குச் சரியான பொருளை விளங்கிக்கொள்ளாத சிலர் ஹராமாக்கப்பட்ட சில உணவுகளைக் குறிப்பிடும் அல்குர்ஆன் வசனத்தில் வரும் 'லஹ்ம்' எனும் பதத்தைப் பிழையாக விளங்கி, பன்றி இறைச்சி மாத்திரமே புசிப்பதற்கு ஹராமானதென்றும், அதன் கொழுப்பு ஹராமானதல்ல என்றும் கூறினர். 'லஹ்ம்' என்ற பதம் இறைச்சி, கொழுப்பு எனும் இரு பொருளையும் கொடுக்கும்) 'வஜ்ஹ்' என்ற அறபுப் பதத்திற்கு முகம் என்ற பொருளை மாத்திரம் அறிந்திருந்த சிலர், அல்லாஹ் உட்பட அனைவரும், அனைத்துப் பொருட்களும் அழிந்துவிடும் என்றும் அல்லாஹ்வின் முகம் மாத்திரம் இறுதியில் எஞ்சியிருக்கும் என்றும் கூறினர். (வஜ்ஹ் என்ற பதம் ஒன்றை - ஒருவரை மொத்தமாகக் குறிக்கவும் பிரயோகிக்கப்படுகின்றது.) அறபுமொழிப் புலமை இன்மையால் தோன்றிய பித்அத்களுக்குச் சிறந்த உதாரணங்களாக ஸுன்னாவை மறுத்தல், அனைத்திறைக் கொள்கையை ஏற்றல் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். அறபு மொழி பற்றிய அறிவில்லாதபோது தீனில் பேரழிவும் பெரும் குழப்பமும் ஏற்படும் என்ற கருத்தை விளக்குகின்ற இமாம் ஹஸனுல் பஸரி, பித்அத்களை உருவாக்குவோர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 'அஜமித் தன்மைதான் அவர்களை அழித்தது' என்கிறார். ஸுன்னா பற்றிய அறியாமையும் பித்அத்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இஸ்லாமிய சட்டவாக்கத்தில் ஸுன்னா வகிக்கும் பங்கு பற்றித் தெளிவில்லாதபோதும், ஹதீஸின் பிரிவுகள், தராதரங்கள் பற்றிய விளக்கம் இல்லாதபோதும் பித்அத்கள் தோன்றுகின்றன. இந்த வகையில் தோன்றிய ஒரு பித்அத்தான பிரிவினரே கராமிய்யாக்கள். இவர்கள் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையில், அதற்குச் சார்பான ஹதீஸ்களைப் புனைந்துரைப்பதைத் தமக்கு ஆகுமாக்கிக் கொண்டனர். 'அஹ்லுல் குர்ஆன்' எனும் குர்ஆனை ஏற்று, ஸுன்னாவை ஓர் இஸ்லாமிய சட்ட மூலாதாரமாக ஏற்;க மறுக்கின்ற பித்அத்தான பிரிவினரையும் இங்கு குறிப்பிட முடியும். முதவாதிர் அல்லாத அனைத்து நபிமொழிகளையும் மறுக்கின்ற பித்அத்தான பிரிவும் ஸுன்னா பற்றிய தெளிவின்மையால் உருவான ஒன்றேயாகும். இன்ஷா அல்லாஹ் தொடரும்..... உசாத்துணைகள் 1. அல்-இஃதிஸாம்-இமாம் அஷ்ஷாதிபி- பாகம் 2, பக் 293-362 2. அல்-முவாபகாத்- இமாம் அஷ்ஷாதிபி- பாகம் 3, பக். 54-56 3. அல்-பித்ஆ-தஹ்தீதுஹா-வ- மௌகிபுல் இஸ்லாம்-மின்ஹா-கலாநிதி இஸ்ஸத் அலி அதிய்யா பக்;. 189-245 4. இக்திழாஉஷ்ஸிராதில் முஸ்தகீம்- இமாம் இப்னு தைமியா, பக். 296-298 5. லய்ஸ மினல் இஸ்லாம்- அஷ்ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, பக். 64-71 6. ஹுஜ்ஜதுல்லாஹில் பாலிகா- ஷாஹ் வலியுல்லாஹ் அத்திஹ்லவீ, பாகம் 1, பக் 17, 255 7. மஜ்முஃ பதாவா இப்னு தைமியா- இமாம் இப்னு தைமியா- பாகம் 13, பக்; 58 8. அர்ரிஸாலா- இமாம் அஷ்ஷாபிஈ- பக் 27 9. அல்- இஹ்வானுல் முஸ்லிமூன்- அஹ்தாஸுன் ஸனஅதித்தாரீஹ் - கலாநிதி மஹ்மூத் அப்துல் ஹலீம், பாகம்-2, பக் 356 10. அய்னல் கலல்- கலாநிதி யூஸுப் அல்- கர்ளாவி 11. பீ ஆபாகித் தஆலிம்- ஸஈத் ஹவ்வா, பக் 100 12. புஸுலுன் மினஸ்ஸியாஸதிஷ் ஷரஇய்யா பீ அத்தஃவதி இலல்லாஹ் - அப்துர் ரஹ்மான் அப்துல் ஹாலிக், பக் 107, 199-228 Jazzakallah - Sheikhagar.org உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:
Post a Comment