Showing posts with label வழிகேடு பித்அத். Show all posts
Showing posts with label வழிகேடு பித்அத். Show all posts

Thursday, 27 February 2014

கலாச்சார ஊடுருவல்

உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.


இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.
சிலை வணக்கக் கலாச்சாரம் போன்ற, “பாவம்” என்று பார்வையில் கண்காணத் தெரிந்த சில கலாச்சாரங்கள் நம்மிடம் நுழைய முடியவில்லையே தவிர, நல்லவைதாமே என்ற போர்வையில் நுழைந்த கலாச்சாரங்களைப் பாமர முஸ்லிம்கள் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு பல சீர்கெட்டக் கலாச்சாரங்களின் ஊடுருவல் நம் இஸ்லாமியச் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் கலாச்சார ஊடுருவல்களில் பல, ஷிர்க் என்னும் இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நம் சமுதாயத்தில் பலர் இன்னமும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான் – (திருக்குர்ஆன் 4;:48)
இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும். “எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத். என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். “அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.
நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும்.
பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், “மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே” என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

Friday, 20 December 2013

ஸஃபர் மாதம் – பீடை மாதமா?

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர்மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.

அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர். உதாரணமாக முஹர்ரம் மாதம் பாஞ்சாவென்றும், ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும், ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டமென்றும், ரஜப் மாதத்தில் பூரியான், பாயாசம் சகிதம் பாத்திஹாவென்றும், ஷாஃபான் மாதத்தில் ஷபே பராஅத் இவைகள் போன்ற பித்அத்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

Thursday, 21 November 2013

திக்ர் என்ற பெயரால்...

Post image for திக்ர் என்ற பெயரால்…..
திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அணாச்சாரங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மா பரிசுத்தப்பட வேண்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் தீமை, பாவங்களின் கரைகள் கழுவப்பட்டு அதிலிருந்து பாதுகாப்பும் பெறவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. மிகக் கெட்டவனாக இருந்தபோதிலும் எப்போதாவது அவன் உள்ளம் இப்படி சிந்திப்பதுண்டு. இறைநினைவு ஒன்று மட்டுமே இத்தீய நிலைகளிலிருந்து காப்பாற்றி… தன்னை மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழச்செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால் இறைநினைவு வரவேண்டும் என்று சொல்லி தம்மைத்தாமே வருந்தித் கொள்வதும் இயல்புக்கு மாற்றமாக செயல்படுவதும் நாம் காண்கிறோம். துறவரம் தானே வகுத்துக்கொண்டு அதை தாமே மீறுபவர்களை பற்றி ”குர்ஆன்” குறிப்பிடும்போது அவர்களாகவே தங்களை கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது. இவை இறை நினைவா? உண்மையில் இறைநினைவு என்றால் என்ன, என்பதை இரத்தின சுருக்கமாக இங்கு நாம் காண்போம்.
இறைவனை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் திருப்தி அடையவில்லையா? (13:28) என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்.

Friday, 1 November 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 03

தொடர்ச்சி…..

4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனை விடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்

சமூகத்திலிருந்து ஒரு பித்அத்தைக்களையும் வேளையில் அதற்குப் பிரதியீடாக ஷரீஅத் கூறும் ஒன்றை முன்வைக்க முயல வேண்டும். ஒரு பித்அத்தில் ஏதாவது நன்மை இருப்பின் அதனை ஒழிக்கும்போது அதற்குப் பகரமாக முடியுமானவரை ஷரீஆ அனுமதிக்கும் ஒரு நற்கரு மத்தை முன்வைக்க முயல வேண்டும். உள்ளங்கள் எப்பொழுதும் ஒன்றைப் பிரதியீடாகப் பெறாமல் ஒன்றை விடாது. ஒருவர் ஒரு நன்மையை விடுவதாயின் அதை ஒத்த ஒன்றையோ அல்லது அதனைவிடச் சிறந்த ஒன்றையோ பெற்ற பின்னரே அதனை விட வேண்டும், என்று கூறும் இமாம் இப்னு தைமிய்யா, தொடர்ந்து பித்அத்களைச் செய்வோர் குறைகூறப்பட வேண்டியவர்களாகவும் குற்றம் காணப்பட வேண்டியவர்களாகவும் இருப்பது போலவே நபிகளாரின் ஸுன்னாக்களை விடுவோரும் செயற்படுத்தாதோரும் கண்டிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

Thursday, 31 October 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 02

தொடர்ச்சி…..
3. பித்அத்துகளை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்

ஒரு பித்அத்தை ஒழிப்பதன் மூலம் மிக மோசமான விளைவு ஏற்படும் என்றிருப்பின் அந்த பித்அத்தை எதிர்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதற்கெதிரான போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். இக்கருத்துக்கு ஆதாரமாகக் கீழ்வரும்; நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக தூர்ஸினா மலைக்குச் சென்றிருந்தபோது, சாமிரி என்பவன் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தவர்களை ஒரு காளை மாட்டை வணங்கும் முஷ்ரிக்குகளாக ஆக்கிவிட்டான். இவ்வேளையில் அச்சமூகத்தில் மூஸா(அலை) அவர்களின் பிரதிநிதியாக இருந்த ஹாரூன் (அலை) அவர்கள் அப் பெரும் பாவச் செயலைக் கண்டும்கூட, அதனை உடன் தடுக்காது மௌனம் சாதித்து விட்டார்கள்.
தன் சமூகத்தவர்கள் வழிகெட்டு விட்டதைக் கேள்விப்பட்ட மூஸா (அலை) அவர்கள் கோபாவேசத்துடன் திரும்பிவந்து ஹாரூன் (அலை) அவர்களை நோக்கி கீழ்வருமாறு வினவினார்கள்:

Tuesday, 29 October 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 01

Photo: பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 01
Anñisa | முஸ்லிம் பெண்கள்

நடைமுறையில் பித்அத்களுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? அவற்றை ஒழிக்க முற்படும்போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அணுகு முறைகள் யாவை, என்பன பற்றி ஒரு தாஈ அறிந்திருப்பது அவசியமாகும்.

அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு சாதாரண பித்அத்கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு இடமற்ற உண்மையாகும். ஒருமுறை ஒருவர் தும்மிவிட்டு, 'அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்' எனக் கூறினார். இதனைச் செவிமடுத்த அப்துல்லாஹ் பின் உமர்(றழி) அம்மனிதரை நோக்கி 'அல்லாஹ்வின் தூதர் தும்மினால் இவ்வாறு சொல்வதற்கு எமக்குக் கற்றுத்தரவில்லையே. 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மாத்திரமே கூறுமாறு போதித்தார்கள்' எனக் கூறினார். 
இச்சம்பவத்தைக் குறிப்பிடும் ஷெய்க் கஸ்ஸாலி 'சிலரைப் பொறுத்தவரையில் ஓர் அற்ப விடயமாகக் கருதப்படுகின்ற இந்த நூதனத்தைக் கண்டும் கண்டிக்காமலிருப்பதை இப்னு உமர் (றழி) சரிகாணவில்லை. அம்மனிதர் ஸுன்னாவின் வரம்பை மீறாமல், அதில் எத்தகைய கூடுதலும் குறைத்தலும் செய்யாமலிருக்க வேண்டும், அதற்கு வழிகாட்டுவது தனது கடமையாகும் எனக் கருதினார். அன்று இப்னு உமர் (றழி) இந்த நூதனத்துக்கு இடம் கொடுத்திருந்தால் 
இன்று பித்அத் வாதிகள் தும்மிவிட்டுச் சொல்வதற்கு பல கட்டுரைகளையும் அதற்குப் பதில் சொல்வதற்கு அதைவிட நீளமான கட்டுரைகளையும் கூட உருவாக்கியிருக்கக்கூடும். இத்தகைய சிறிய விவகாரங்களில் ஏற்படும் நூதனங்கள்தான் படிப்படியாகப் பெரிய விடயங்களிலும் நூதனங்களை ஏற்படுத்தத் தூண்டுகோலாய் அமைகின்றன' எனக் குறிப்பிடுகிறார்.

ஆயினும் இஸ்லாமியப் பிரசாரத்தின்போது பித்அத்களை ஒழிப்பதில் கவனத்திற்கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உண்டு. இஸ்லாம், 'இல்ம்' எனும் அறிவாகவும் 'தஃவா' எனும் அழைப்பாகவும் 'தர்பிய்யா' எனும் பயிற்சியாகவும் 'மஃரகா' எனும் போராட்டமாகவும் மனித சமூகத்திற்கு முன்னால் வைக்கப்படுகின்றது. இஸ்லாத்தை எந்த அடிப்படையில் சமூகத்திற்கு முன்வைக்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கான அணுகுமுறைகள் வித்தியாசப்படும்.

இஸ்லாத்தை 'இல்ம்' ஆக வழங்குகின்ற பொழுது கைக்கொள்ளும் வழிமுறைகளைத்தான் அதனை தஃவாவாக வழங்கும் பொழுதும் கைக்கொள்ள வேண்டுமென்பதில்லை. தஃவாவின்போது கைக்கொள்ளும் அணுகுமுறைகளை விட்டும் வித்தியாசமாக 'தர்பிய்யா'வின்போது கைக்கொள்ளும் வழிமுறைகள் அமைய வேண்டி ஏற்படும். தஃவா, தர்பிய்யா, இல்ம் ஆகிய நிலைகளின் பொழுது கருத்திற்கொள்ளாத விடயங்களை, வித்தியாசமான வழிமுறைகளை 'மஃரகா' எனும் போராட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டி ஏற்படும்.

தஃவாவின்போது கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சங்களை - தஃவாவுக்கான முறைகளை இஸ்லாமிய ஷரீஅத் ஒரு தனித் தலைப்பின் கீழ் விளக்குகிறது. இஸ்லாமிய 'பிக்ஹ்'இல் (சட்டத்தில்) இது, 'அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா பித்தஃவா' என்றும் 'அல் ஹிஸ்பா' என்றும் வழங்கப்படுகின்றன. இஸ்லாமிய பிக்ஹ் நூல்கள் இபாதாத், முஆமலாத், ஜியானாத் போன்ற அம்சங்களைத் தனியான தலைப்புக்களின் கீழ் ஆராய்வது போலவே மேலே குறிப்பிட்ட தலைப்புக்களின் கீழ் தஃவா முறை பற்றியும் ஆழமாக விளக்குகின்றன.


இவ்வகையில் தஃவாக் களத்தில் பித்அத்களை ஒழிக்க முற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

   1. நிதானம்
   2. முக்கியமானவற்றிற்க்கு முன்னுரிமை வழங்கல்.
   3. பித்அத்களை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்.
   4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனைவிடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்.
   5. பித்அத்களை ஒழிப்பதைவிட ஸுன்னத்துக்களை உயிர்ப்பிப்பதில் கூடிய கவனம் செலுத்துதல்.
   6. பித்அத்துக்களை ஒழிப்பதுவே முழு இஸ்லாமிய தஃவாவாகும் என்ற கருத்தைக் கொள்ளாதிருத்தல்.
   7. ஹிக்மா எனும் ஞானத்தையும் 'அல்-மவ்இழதுல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கடைப்பிடித்தல்.


   1. நிதானம்

பித்அத் ஒழிப்பின் பொழுது நிதானத்தைக் கைக்கொள்வது முக்கியமான ஓர் அம்சமாகும். பித்ஆ ஹகீகிய்யா குல்லிய்யா எனும் பிரிவில் அடங்குகின்ற மிகப் பாரதூரமான பித்அத்துகளை எதிர்ப்பதிலும்கூட நிதானம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 
ஹஸ்ரத் மூஸா(அலை) அவர்கள் மீகாத்திற்காக (அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக) தன் சமூகத்தைச் சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு செலநடைமுறையில் பித்அத்களுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? அவற்றை ஒழிக்க முற்படும்போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அணுகு முறைகள் யாவை, என்பன பற்றி ஒரு தாஈ அறிந்திருப்பது அவசியமாகும்.

அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு சாதாரண பித்அத்கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு இடமற்ற உண்மையாகும். ஒருமுறை ஒருவர் தும்மிவிட்டு, 'அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்' எனக் கூறினார். இதனைச் செவிமடுத்த அப்துல்லாஹ் பின் உமர்(றழி) அம்மனிதரை நோக்கி 'அல்லாஹ்வின் தூதர் தும்மினால் இவ்வாறு சொல்வதற்கு எமக்குக் கற்றுத்தரவில்லையே. 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மாத்திரமே கூறுமாறு போதித்தார்கள்' எனக் கூறினார்.

Saturday, 26 October 2013

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 03

தொடர்ச்சி…..

5. பாவங்கள், தவறுகள், பிழைகள் ஆகியவற்றைச் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெறாதோரை முற்றாக ஏற்றுப் பின்பற்றுதல்.

ஷீயாக்கள் தங்களது இமாம்களைப் பாவங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகக் கருதி அவர்களை முற்று முழுதாக ஏற்றுப் பின்பற்றியதனால், தங்களுடைய இமாம்களின் சொல், செயல் அனைத்தையும் மார்க்கமாகக் அவர்கள் கருதினர். இதனால் உருவான பித்அத்கள் எண்ணிலடங்காதவை. ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்த பலரும்கூட தங்களது ஆன்மீக வழிகாட்டிகளையும் இமாம்களையும் மேற்குறித்த நிலையில் வைத்து நோக்க முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாகின என்பதை மறுப்பதற்கில்லை.


ஏனெனில், இத்தகையோர் தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முரணாக அமைந்த அனைத்தையும் வழிகேடாகக் கருதியது மாத்திரமல்ல, இஸ்லாத்தில் மூலாதாரங்களுக்கு அக்கருத்துக்கள் முரணாக அமைந்தாலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயங்கவில்லை. 'தக்லீத்' எனும் இமாம்களைப் பின்பற்றும் நிலையை இஸ்லாம் அனுமதித்தாலும், இத்தகைய போக்கை அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் அனுமதிக்கும் 'தக்லீத்' அமைப்பை விளக்கவந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி, ஒருவர் தான் பின்பற்றுகின்ற முஜ்தஹிதான இமாம், சரியான முடிவுகளைப் பெறும் ஆற்றல் படைத்தவராக இருப்பது போலவே பிழையான முடிவுகளுக்கும் வரக்கூடியவர் என்பதை அறிந்த நிலையில் அவரைப் பின்பற்றுவதை இஸ்லாம் அனுமதித்துள்ள 'தக்லீத்'என்றும், தனது இமாமின் கருத்துக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கின்ற நேரத்தில் தக்லீதை விட்டுவிட்டு ஹதீஸை ஏற்றுப் பின்பற்றுவோராகவும் அவர் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனால்தான் எல்லா இமாம்களும் தங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கின்றனர்.

Thursday, 24 October 2013

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 02


தொடர்ச்சி…..

2. பகுத்தறிவுக்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்தல்

இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் கூறுகின்ற முடிவுகளுக்கு முரணாக, பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனடிப்படையில் முடிவுகளைப் பெற்றபோது பல பித்அத்கள் தோன்றுவதற்கு முஃதஸிலாக்களே பெரிதும் காரணமாக அமைந்தனர். இவர்கள் தமது பகுத்தறிவுக்கு முரணாகத் தெரிகின்ற ஹதீஸ்களை மறுத்தனர். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் காணப்படும் பல அடிப்படைகளையே நிராகரித்தனர். அவற்றிற்கு வலிந்து பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். இவர்களால் உருவான சில பித்அத்தான கருத்துக்கள் கீழ்வருமாறு:-


1 மறுமையில் அல்லாஹ்வைக் கண்களால் காணமுடியாது.
2 ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் உலகிற்கு வரப்போவதில்லை.
3 கப்றில்; வேதனை கொடுக்கப்படுவதில்லை.


மேலும், ஸிராத், மீஸான் போன்ற பகுத்தறிவினால் புரிந்துகொள்ள முடியாத, அகீதா தொடர்பான ஆதாரபூர்வமான பல அம்சங்களுக்கு பகுத்தறிவினடிப்படையில் பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர்.

இத்தகையோர் பற்றி ஷாஹ்; வலியுல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறார்: 'இந்த பித்அத்வாதிகள் பல இஸ்லாமிய சட்டங்களில், அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்று கூறி சந்தேகத்தை ஏற்படுத்தினர். பகுத்தறிவுக்கு முரணான அனைத்தும் மறுக்கப்பட வேண்டும் அல்லது அவற்றிற்குரிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 01

பித்அத்கள் தோன்றுவதற்குக் காரணங்களாக அமைபவை பல. அவற்றைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சிரமமானதாகும். அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது: ''நிச்சயமாக இது தான் நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்றவைகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும்.

 நீங்கள் பரிசுத்தவான்களாவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு நல்லுபதேசம் செய்தான்.''(6:153) இத்திருவசனத்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கும் நபிமொழி மேலும் விளக்குகிறது. 'ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் எமக்கு ஒரு கோட்டைக் கீறிக் காட்டி, 'இதுதான் அல்லாஹ்வின் வழி' எனக் குறிப்பிட்டார்கள். பின்னர் அதன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இன்னும் பல கோடுகளைக் கீறிக் காண்பித்து, 'இவைகள் பல வழிகளாகும்; இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஷைத்தான் இருந்துகொண்டு அதன்பால் அழைத்துக்கொண்டிருக்கின்றான்.' எனக் கூறிவிட்டு மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதினார்கள். இவ்விளக்கத்திலிருந்து அல்லாஹ்வின் வழி - நேர்வழி - ஒன்றாக இருப்பினும், வழிகேட்டினதும் பித்அத்களினதும் வழிகள் பலவாக, வரையறைகளுக்கு உட்படாதவைகளாக இருக்கின்றன என்பதனைப் புரிந்துகொள்ளலாம். ஆயினும், இதுபற்றி ஆழமாக ஆராய்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், பித்அத்கள் உருவாவதற்குரிய பிரதான காரணங்களை விளக்கியுள்ளனர்.

Wednesday, 11 September 2013

How many Muslim's are like this ?

அன்பிர்க்கினியவர்களே!
அங்கம்,தெரியா,உடையும்,
குனிந்த,பார்வையும்,
சலங்கையில்லா,காலும்,
தரை,அதிராத,நடையும்,
சப்தமில்லா,சிரிப்பும்,
சலனமில்லா,பார்வையும்,
பேச்சில்,குளைவின்மையும்,
புறம்பேசா,நாவன்மையும்,
அவதுறு,கூறா,அறிவும்,
ஆபாசம்,கண்டால்,அக்கினிப்,
பார்வையும்,
பெண்களுக்கழகுதான்!




Wednesday, 8 May 2013

வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன...

ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!
வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.  
 ஹிந்து வழிகேட்டை பாருங்கள்
இந்து சகோதரர்கள் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)
இந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல் உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த ஹிந்து மட்டைகள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா?
இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

Sunday, 28 April 2013

இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Muslim-wearஉடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். ‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.
p23காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.

Monday, 25 February 2013

ஜோதிடம் , நல்ல நேரம் & கெட்ட நேரம் பற்றி இஸ்லாம்

நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.
மார்க்கத்தில் போதிய தெளிவு இல்லாமை, சினிமா மற்றும் கேபிள் டி.வி.க்கள் இவற்றின் முலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது, ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடித்து வருவது மிகவும் வருத்தத்தற்குரிய விஷயமாகும். இன்று இத்தகைய தீய செயல்கள் பிரபலமான பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள் போன்ற மீடியாக்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நம்மை நோக்கி வருகின்றன.
மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர முஸ்லிம்கள் ஏன் கல்லூரிகளுக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு அவற்றை உண்மை என நம்பி உயிரினும் மேலான தங்கள் ஈமானை இழந்து விடுகின்றனர். இவ்வகையான ஜோதிடங்கள் நம்மிடையே பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் சில: -

நல்ல(!) நேரம்

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.
உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.
ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், “காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?” என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

Friday, 11 January 2013

மீலாதும் மவ்லூதும்

ரபியுல் அவ்வல் மாதம் ஊர் எல்லாம் ஒரே விழாக்கோலம் தான்! தெருவெங்கும் மீலாது விழா! (இறை) இல்லங்களில் மவ்லீதுகள்….. கொண்டாட்டங்களுக்கு குறையே இருக்காது. மீலாதுகளையும் மவ்லீதுகளையும் செயல்படுத்தினால் இறை திருப்தியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பரிந்துரையும் கிட்டும் என்பது இன்றைய பல முஸ்ம்களின் நம்பிக்கை.
இவை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தராத புதிய கலாச்சாரம், (பித்அத்) இறைத்தூதரும், அவர் தம் தோழர்களும் நடைமுறைப் படுத்தாத இந்த மீலாது – மவ்லீது ஹிஜ்ரி 600-ல் எகிப்து அரசன் இர்பல்’ என்பவரால் சில மூட முஸ்ம்களின் கோரிக்கை மூலம் உருவானது.
இயேசு நாதருக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது, நமது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது? என்ற எண்ணத்தில் பிறந்ததே இந்த மீலாத் விழா! மவ்லீது பாடல்கள்!!!
நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்!
திருக்குர்ஆன் 94:4
இப்னு மர்யம் (இயேசு)வை கிறித்தவர்கள் மிகைபடப் புகழ்ந்தது போல் நீங்கள் என்னை மிகைப் பட புகழாதீர்கள்! எனினும் (என்னை) இறைவனுடைய அடியார் என்றும் இறைவனின் தூதர் என்றும் கூறுங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை உமர்(ர) அவர்கள் கேட்டதாக கூறியதை நான் கேட்டேன்!
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ர)

ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும் (கட்டுரை)

ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது (வாஜிபாகும்) கட்டாயமாகும்
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். யார் தன் பிள்ளை பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

Thursday, 13 December 2012

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

முன்னுரை
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!

ஆதம் நபியின் நற்குணம்
முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள் இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும் பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)

இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம் நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில் ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)

இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்
அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்
நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும் நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத் குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.

இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!

யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?

Thursday, 28 June 2012

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்

  எழுதியவர்/பதிந்தவர்/உரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.
ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:

عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).

நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).

ஷஅபான் மாதமும் முஸ்லீம்களும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
- தொகுப்பு : மௌலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி
நம்மீது அருட்கொடைகளை பூர்த்தியாக்கி மார்க்கத்தை பரிபூரணபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! சாந்தியும் சமாதானமும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக!
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;. (5:3)
அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த்தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? (42:21)
அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; (28:50)