Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

Thursday, 5 June 2014

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்புவிதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)

மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.

1- உடல் இச்சை.
2- கோபம்.
3- தவறான உணவு முறை.
4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.

Saturday, 27 July 2013

“பத்ரு” களம்…! தரும் படிப்பினை!

Post image for “பத்ரு” களம்…! தரும் படிப்பினை! இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.

Friday, 24 August 2012

ரமழானுக்குப் பின் நாம்


ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க வழிபாடு -களை தொடர்வோம். அவனை சந்திக்கின்ற வரை இம்மார்க்கத்தில் உறுதியோடு இருக்க அவனிடம் பிரார்த்தனை செய்வோம். வணக்க வழிபாடுகளும், அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் பெருநாளோடு முடிந்து விடாது.

Saturday, 21 July 2012

ரமலானும் ஈமானும்……



அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்: ”யார் ரமலானில் நம்பிக்கையுடனும்  நன்மையை எதிர் பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” நூல் : புகாரி 1901

இன்று நம்மில் ஒவ்வொருவரும் வருடந்தோறும் நோன்பு வைக்கிறோம். ஸஹர் நேரத்தில் உணவு உண்கிறோம். பகலில் ஒரு மிடரு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு வைக்கிறோம். ஆனால் நம்பிக்கையோடு நோன்பு வைக்க வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்களே; எந்த மாதிரி நம்பிக்கையை ஒரு விசுவாசி வைக்க வேண்டும்? அந்த நம்பிக்கை நம்மிடம் உண்டா?ஷஅபான் மாதம் நம்மைவிட்டு விடைபெறும் போது நம்முடைய உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சிஊடுருவுகிறது. நோன்பு முடிந்தால் பெருநாள் அப்பொழுது புத்தம் புதிய ஆடைகளில் நாம் வலம் வரலாம். நாவிற்கு சுவையூட்டும் ஆகாரங்கள் உண்ணலாம் என்ற ஆனந்தம் தோன்றக்கூடாது. மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

”ரமலான் மாதம் வந்து விட்டால்சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். நூல் : புகாரி 1898இ 1899

இந்த நம்பிக்கை நம்மிடம் வேண்டும்இ நமது குழந்தைகளிடம் நாம் ”சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் வருகிறது. அந்த சுவனத்தில் பூஞ்சோலைகள்இ நீரருவிகள்இ வித விதமான மலர்களுடன் கூடிய பழங்கள்இ முத்துக்களும் பவழங்களும் பதிக்கப்பட்ட இருக்கைகள் போன்றவற்றை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான். அவனுக்கு பிரியமானவர்களாக நாம் மாறினால் அவற்றை அல்லாஹ் நமக்கு பரிசாக வழங்குவான்” என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

சதா கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்,காலத்தை வீணடிக்கும் இளைஞர், இளைஞிகளிடம் ”ஷைத்தான்கள் விலங்கிடப்படும் ஒரு மாதம் நமக்கு வர உள்ளது. வீணாய்ப்போகும் காரியங்களில் நேரத்தை வீணடிக்காமல் அல்லாஹ் ஷைத்தான்களுக்கு விலங்கிடும் போது இந்த ரமலானிலிருந்து ஷைத்தானியத்தனமான காரியங்களிலிருந்து நீங்களும் விலகியிருங்கள்” என்று நாம் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அதே போல் இல்லங்களில் தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் நல் இல்லத்து மங்கையரிடம் ரமலானின் சங்கையை எடுத்துரைத்து அவர்களின் ஈமானை நாம் வலுப்படுத்த வேண்டும். இதெல்லாம் செய்வதற்கு முன்னால் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினராகிய நாம் அவருடைய பொன்மொழிகள் மீது அதீத நம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது நாம் ஈமானிய வலுவுள்ளோராக ஆவோம். இவ்வாறான நம்பிக்கை ஈமான் நமக்குள் தோன்றும் போது அதன்பிரதிபலிப்பாக நம்மிடம் நல்லமாற்றங்கள் நிகழ வேண்டும்.