Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Saturday, 26 July 2014

"எளிய இயற்கை வைத்தியம்"


1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

Sunday, 6 July 2014

ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!

இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.

ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்துக்கு இந்த பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வச்சோ, தீயில சுட்டோ சாப்பிட்டு வரலாம் ஹைபிரஷர் குறையுறதோட இதயத்துக்கு நல்லது. ரத்தக்குழாய்ல படியக்கூடிய கொழுப்பையும் வெளியேத்திரும். சிலபேர் பச்சையா சாப்பிடுவாங்க. அது நல்லதில்ல. பச்சையா சாப்பிட்டா அதிக பலன் கிடைக்கும்னு நினைக்காதீங்க. அதுல உள்ள ஆசிட் நேரடியா வயித்துக்குள்ள போனா வயித்துல பிரச்சினையை உண்டுபண்ணும். எதை எப்பிடி சாப்பிடணும்னு ஒரு வரைமுறை இருக்கு.

பூண்டுச்சாறோட தண்ணி சேர்த்து சாப்பிடலாம். காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தா பூண்டுச்சாறோட தண்ணி கலந்து குடிச்சிட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயித்துவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்தாகும்.

Sunday, 4 May 2014

தேனின் மருத்துவ குணங்கள்

தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

பித்தம் தணிக்கும் பழைய சோறு!

டிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடிபெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல... 100 சதவிகிதம் உண்மை. 'ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு 'பழைய சாதம்’.
'நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது. அப்படி என்னதான் அந்த உணவில்  என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினேன்' என்ற உஷா, தொடர்ந்து அதன் நன்மைகளைக் கூறினார்.
'சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.

Thursday, 21 November 2013

Home Remedies To Remove Skin Tags

Home Remedies To Remove Skin Tags 1. Ginger Take raw ginger and make it into pieces and rub it on skin tags daily up to 2-weeks automatically tags will fall down slowly. 2.Apple cider vinegar Apple cider vinegar is a best preferable remedy for removing skin tags.Apply a dab of cider vinegar on cotton ball and apply it on the affected area it cause some pain for few minutes.Repeat this process 25 to 45 days to vanish your skin tags permanently. 3.pineapple Take pineapple juice and apply it on affected area 3-times in a day.do this 7 to 10 days without rinse it off . 4.Onion juice Take onion and make it into slices keep it in a container with added salt 8-10 hours.morning make juice with that mixture and in the evening apply this juice on tags leave it overnight and wash it in the morning.do this process every night for 10 days. 5.banana peel Take banana peel and apply it on affected area and cover up with bandages overnight, in the morning remove the bandage and rinse it off with water and repeat this every night until the skin tag will cut off from skin.

Thursday, 10 October 2013

பழைய சாதத்தின் மகிமை

முதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

 

கூடவே 2 சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்புசக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை நெருங்காது !


பழைய சாதத்தின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியவற்றில் இருந்து சில:

Monday, 7 October 2013

மருத்துவத்திற்கு பயன்படும் முட்டைகோஸ்

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

Sunday, 24 February 2013

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் 
மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிறுநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை 
குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்

கண்டங்கத்திரி.
1. மூலிகையின் பெயர் -: 
கண்டங்கத்திரி.
2. தாவரப் பெயர் -:
 SOLANUM SURATTENSE.
3. தாவரக்குடும்பம் -:
 SOLANACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -:
 இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.
5. வளரியல்பு -: 
கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் வளர்கிறது.

Wednesday, 9 January 2013

நாயுருவி-மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்


மூலிகையின் பெயர் :- நாயுருவி.
2. தாவரப்பெயர் :- ACHYRANTHES ASPERA.
3. தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை.
5. வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.
6. வளரியல்பு :- நாயுருவியின் பிறப்பிடம் சைனா. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள் இருக்கும். விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்களின் துணிகள் மீது ஒட்டிக்கொண்டு சென்று வேறு இடங்களில் விழுந்து முழைக்கும். எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

வெற்றிலை-மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்


1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.
2. தாவரப் பெயர் -: PIPER BETEL.
3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.
4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.
5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.
6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.
7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள்
மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருதாணி - மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்

1) மூலிகையின் பெயர் -: மருதாணி.
2) தாவரப்பெயர் -: LAWSONIA INERMIS.
3) தாவரக்குடும்பம் -: LYTHRACEAE.
4) வேறு பெயர்கள் -: மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.
5) தாவர அமைப்பு -: மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும்,
இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதை வாசனைப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள். பாக்கீஸ்தானில் அதிகம் உபயோகிக்கிறார்கள். இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் இலைகளை 5 நாட்கள் நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள். இதை விதை மூலமும், கட்டிங் மூலமூம் இனப் பெருக்கம் செய்வார்கள்.

வேம்பு _ மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்

மூலிகையின் பெயர் -: வேம்பு.
தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA.தாவரக்குடும்பம் -: MELIACEAE.வேறு பெயர்கள் -:  அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன.வேதியல் சத்துக்கள் -: NIMBDIN, AZADIRACHTINE.வளரியல்பு -: வேம்பு என்பது வேப்ப மரம் தான்.  மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

Monday, 15 October 2012

வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற


வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக “கண்டதையும்” சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். “கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்” என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.
வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, “பழங்கள் சாப்பிடுகிறேன்” என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி நேரத்தில் செரிமானம் ஆகி விடும். இதையடுத்து, அடிவயிற்றில் உள்ள தசைகளும், குடல் தசைகளும் இயங்கி, மலத்தை வெளியேற்றுகின்றன.

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்


துளசி:-
  • 1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
  • 2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
வில்வம்:-
  • 1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
  • 2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
அருகம்புல்:-
  • 1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.

Friday, 24 August 2012

தண்ணீர் சிறந்த மருந்து

தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்
*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட

“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.
“நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.



நூலகப் புத்தகங்களை அகர வரிசைப்படி தொகுக்காவிட்டால், தனியொரு புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமோ; அதே போன்று நினைவு அடுக்குகளில் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்கவில்லை எனில் தேவையான போது வெளியே எடுப்பது கடினம்.
சரியான முறையில் படித்தால் தகவல்கள் பிசிறில்லாமல் நேரடியாக மூளையின் நினைவகத்தில் தொகுக்கப்பட்டு விடுகிறது. எனவே, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பாடங்களைப் படித்தால் அவர்களின் நினைவாற்றல் திறன் மேம்படும் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

இதயத்தை பாதுகாப்பது எப்படி?


2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.
உணவுக் கட்டுப்பாடு
முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்


உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளை நிற உணவுகள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.

பெருகிவரும் மனஅழுத்த மரணங்கள்!

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பி.பீ.ஓ, கே.பி.ஓ என்று நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் புதுப்புது நோய்களும் மனிதர்களை தாக்கத்தான் செய்கின்றன.
இந்த சின்ன விஷயம் கூட மனிதர்களை இந்த அளவுக்குப் பாதிக்குமா என்று சொல்லும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளுடனே மனிதர்கள் பயணம் செய்வதால் மன அழுத்தம் மனிதர்களை வெகுவாகப் பாதித்து வருகிறது.
இதிலும், இவ்வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
மன அழுத்தம் நோய் பாதிக்கப்பட்ட சிலரை சோதனைக்கு உள்ளாக்கியபோது அவர்களில் 90 சதவீதம் பேர் வாகனங்களில் நெடுந்தொலைவு சென்று பணிபுரிபவர்களாகவே இருக்கின்றனர்.