Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Saturday, 26 July 2014

"எளிய இயற்கை வைத்தியம்"


1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

Sunday, 6 July 2014

ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!

இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.

ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்துக்கு இந்த பூண்டு நல்ல மருந்து. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வச்சோ, தீயில சுட்டோ சாப்பிட்டு வரலாம் ஹைபிரஷர் குறையுறதோட இதயத்துக்கு நல்லது. ரத்தக்குழாய்ல படியக்கூடிய கொழுப்பையும் வெளியேத்திரும். சிலபேர் பச்சையா சாப்பிடுவாங்க. அது நல்லதில்ல. பச்சையா சாப்பிட்டா அதிக பலன் கிடைக்கும்னு நினைக்காதீங்க. அதுல உள்ள ஆசிட் நேரடியா வயித்துக்குள்ள போனா வயித்துல பிரச்சினையை உண்டுபண்ணும். எதை எப்பிடி சாப்பிடணும்னு ஒரு வரைமுறை இருக்கு.

பூண்டுச்சாறோட தண்ணி சேர்த்து சாப்பிடலாம். காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தா பூண்டுச்சாறோட தண்ணி கலந்து குடிச்சிட்டு வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயித்துவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்தாகும்.

Sunday, 4 May 2014

தேனின் மருத்துவ குணங்கள்

தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

பித்தம் தணிக்கும் பழைய சோறு!

டிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடிபெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல... 100 சதவிகிதம் உண்மை. 'ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு 'பழைய சாதம்’.
'நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது. அப்படி என்னதான் அந்த உணவில்  என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினேன்' என்ற உஷா, தொடர்ந்து அதன் நன்மைகளைக் கூறினார்.
'சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.

Wednesday, 19 March 2014

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:


சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

Sunday, 16 March 2014

அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது

அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம் : இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பையும் போக்கவல்லது

ஆப்பிளைக்கூட வெறுக்கும் பெண்கள் சிலர் உண்டு ஆனால் கொய்யாப்பழத்தை வெறுப்பவர் யாரும் இருக்கமாட்டார் இதை படித்த பிறகாவது இதுவரை நாம் அறியாத ஒரு அபரீத மருத்துவ சக்தி கொய்யாபழத்தில் உள்ளது, பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது உடலில் ஏற்படும் அசதி, சோர்வு, மற்றும் உடல்வலிகளை போக்கும் அருமருந்து, பல நாட்டு மருத்துவர்கள் இந்த கொய்யாபழத்தின் அபரீத மருத்துவ குணத்தை தெரிந்தும் பொதுவாக சொல்ல மறுக்கிறார்கள், அல்லது முக்கியமானவர்களிடம் மட்டும் சொல்லி அதை வெளியே சொல்லாமல் இருக்கவும் சொல்கிறார்கள்,

திரைப்படங்களில் வெந்தயம் போன்றவற்றை தருவது போல் காட்டி வெந்தயம் மாதவிடாய காலங்களில் நல்ல மருந்து என்று நம்பவைக்கிறார்கள், வெந்தயமும் நல்ல மருந்துதான் ஆனால் வெந்தயம் கூழ்மாகி உடலுக்குள் சென்று அதன் வேதிவினைகள் உயிற்சக்திகளாக மாறி உடலுக்கு நலம் தரும் மருந்தாக மாறுகிறது, ஆனால் கொய்யாப்பழம் அப்படி அல்ல. சாப்பிட்ட சில மணித்துளிகளில் இருந்தே தனது பணியை ஆரம்பிக்கிறது.

மாதவிடாய் காலங்களில் ஏன் அசதி, சோர்வு, உடல் வலி போன்றவைகள் வருகிறது?

Tuesday, 14 January 2014

Removing Gallbladder stones - பித்தப்பை கல் நீங்க



கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Thursday, 10 October 2013

பழைய சாதத்தின் மகிமை

முதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

 

கூடவே 2 சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்புசக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை நெருங்காது !


பழைய சாதத்தின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியவற்றில் இருந்து சில:

Monday, 7 October 2013

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்.


குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

· பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

· புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.

Sunday, 31 March 2013

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்க ு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்...!

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...!

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

Tuesday, 13 November 2012

காபி மற்றும் தேநீர்

காபி என்பது எல்லோராலும் மிகவும் விரும்பிக் குடிக்கப்படும் பானம். இதில் கலந்திருக்கும் இரசாயனப் பொருள் கஃபின் (Caffeine) இதனால் ஏற்படும் சீர்கேடுகள் பலப்பல. காலையில் கண் விழித்த உடனேயே காபி, தேநீர் போன்றவைகள் மூலம் இரசாயன ஆபத்துக்களை நாம் மனம் விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்.

புகை பிடிப்பதால் என்னதான் ஆகி விடப்போகிறது! – கொஞ்சம் பார்ப்போமா?

பல்வேறு நோய்களை உருவாக்கி, உயிருக்கே உலை வைக்கும் புகையைப் பற்றிய சில உண்மைகள் :
1. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும், உங்கள் வாழ்நாளில் இருந்து 1 மணி நேரத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் (உதாரணமாக, ஒரு நாளைக்கு 5 சிகரெட் வீதம் ஒரு வாரத்திற்கு பிடிக்கும் புகை, உங்கள் மொத்த வாழ்நாளில் இருந்து 1 நாளை குறைத்து விடுகிறது).
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்களும் அடங்கும்.

சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள்!

காலை உணவை தவிர்க்காதீர்கள்!
வேலைப்பளு அது இதுவென்று காலையில் சாப்பிடாமல் இருந்து விடுகிற வழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் காலைச் சாப்பாட்டை இப்படி தவற விடுவது நல்லதல்ல என்பது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பொது மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 30 ஆயிரம் ஆண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
காலையில் சாப்பிடுபவர்களை விட சாப்பிடாதவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகம் என்று இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட 29 ஆயிரத்து 206 ஆண்களில் ஒருவருக்குகூட ஆரம்பத்தில் நீரிழிவு தாக்கவில்லை. நீரிழிவு வரக்கூடாது என நினைக்கிற ஆண்கள் காலை சாப்பாட்டை தவற விடாமல் இருப்பது நல்லது.

வேப்பிலைக்கு நிகரான கறிவேப்பிலை!

வேம்பின் உரிமைக்கு வெள்ளைக்காரன் காப்புரிமை கோரிய பிறகுதான், அடடா.. இது எங்க பாட்டான் சொத்து  என்று விழித்தெழுந்து உலக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி உரிமையை மீட்டுவந்தோம். வேம்பின் அருமையை மறந்துபோனதன் விளைவுதான் இது. இதே நிலைமை வெகு விரைவில் கறிவேப்பிலைக்கும் வரலாம்!