Monday, 7 October 2013

நபிமார்கள்

உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு முஹம்மது நபி (ஸல்) வரை இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வல்ல இறைவன் அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளான். 
இவர்கள் அனைவரும் ஆண்களாவர்.பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இறைவன் ஒருவனே! அவனையே வழிபட்டு வரவேண்டும். அவனுக்கு எந்த வகையிலும் இணைவைத்தல் கூடாது.அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்படவும், விலக்கியவற்றை தவிர்;ந்து நடக்கவும் மக்களை போதித்து அவர்களை இறைன் பால் அழைப்பதுவே இவர்களின் கடமையாகும்.
‘உலகில் ஒரு இலட்சத்து இருபத்திநாலாயிரம் நபிமார்கள் அனுப்பபட்டுள்ளன.அவர்களில் 313 இரசூல்மார்கள் ஆவார்கள்’ என அஹ்மது, இப்னு ஹிப்பான்,பிதாயா வந்நிஹாயா போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கருத்து வேறுபாடு உள்ளதால் இத்தனைபேர் தான் என வரையறுக்காது ‘ இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை இறைவன் உலகிற்கு அனுப்பியுள்ளான’; என நம்புவதே நம்மீது கடமையாகும்.
இவர்களில் முதல் இறைதூதர் ஆதம் (அலை) அவர்களும், இறுதியானவர் முஹம்மது (ஸல்) அவர்களுமாவர்கள்.இவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை இறைமறை நெடுகிலும் கூறப்பட்டுள்ளன.
1. குர்ஆன் கூறும் 25 நபிமார்கள்
கீழே  இறைதூதர் பெயர்கள், அவை குர்ஆனில் எத்தனை தடவைகள் கூறப்பட்டுள்ளன என்ற விபரங்களுடன் காண்போம்.
இறைதூதர்களின் பெயர்களும், குர்ஆனில் வரும் இடங்களும்.
01. ஆதம்(அலை)-25
02 இத்ரீஸ்(அலை-02
03 நூஹ்(அலை)-43
04 ஹுத்(அலை)-07
05 ஸாலிஹ்(அலை)-09
06 இப்ராஹீம்(அலை)-69
07 லூத்(அலை)-27
08 இஸ்மாயில்(அலை)-12
09 இஸ்ஹாக்(அலை)-17
10 யாகூப்(அலை)-16
11 யூசுஃப்(அலை)-27
12 ஷ{ஐப்(அலை)-11
13 அய்யூப்(அலை)-04
14 துல்கிப்லு(அலை)-02
15 மூஸா(அலை)-136
16 ஹாரூன்(அலை)-19
17 தாவூத்(அலை)-16
18 சுலைமான்(அலை)-17
19 இல்யாஸ்(அலை)-03
20 அல்-யஸவு(அலை)-02
21 யூனூஸ்(அலை)-06
22 ஸக்கரியா(அலை)-08
23 யஹ்யா(அலை)-04
24 ஈஸா(அலை)-25
25 முஹம்மது (ஸல்)-05
மொத்தம் 512 இடங்களில் வருகின்றன. 
2. நபிமார்களில் உலுல் அஸ்ம் 5 பேர்
நபிமார்களிடம் குறிப்பாக உம்மிடமும், நூஹ், இப்றாஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக!(33:7)
என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இவர்கள்’உலுல் அஸ்ம்’ (உறுதிமிக்கவர்கள்,
சோதனைகளை வென்றவர்கள்) என திருமறை விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்;. அவர்கள்:-
 1. முஹம்மது (ஸல்) 2. நூஹ் (அலை),3.இப்றாஹீம் (அலை),4. மூஸா(அலை)2. ஈஸா(அலை) ஆகியோராவர்

No comments:

Post a Comment