Thursday, 31 October 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 02

தொடர்ச்சி…..
3. பித்அத்துகளை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்

ஒரு பித்அத்தை ஒழிப்பதன் மூலம் மிக மோசமான விளைவு ஏற்படும் என்றிருப்பின் அந்த பித்அத்தை எதிர்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதற்கெதிரான போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். இக்கருத்துக்கு ஆதாரமாகக் கீழ்வரும்; நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக தூர்ஸினா மலைக்குச் சென்றிருந்தபோது, சாமிரி என்பவன் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தவர்களை ஒரு காளை மாட்டை வணங்கும் முஷ்ரிக்குகளாக ஆக்கிவிட்டான். இவ்வேளையில் அச்சமூகத்தில் மூஸா(அலை) அவர்களின் பிரதிநிதியாக இருந்த ஹாரூன் (அலை) அவர்கள் அப் பெரும் பாவச் செயலைக் கண்டும்கூட, அதனை உடன் தடுக்காது மௌனம் சாதித்து விட்டார்கள்.
தன் சமூகத்தவர்கள் வழிகெட்டு விட்டதைக் கேள்விப்பட்ட மூஸா (அலை) அவர்கள் கோபாவேசத்துடன் திரும்பிவந்து ஹாரூன் (அலை) அவர்களை நோக்கி கீழ்வருமாறு வினவினார்கள்:

Tuesday, 29 October 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 01

Photo: பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 01
Anñisa | முஸ்லிம் பெண்கள்

நடைமுறையில் பித்அத்களுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? அவற்றை ஒழிக்க முற்படும்போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அணுகு முறைகள் யாவை, என்பன பற்றி ஒரு தாஈ அறிந்திருப்பது அவசியமாகும்.

அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு சாதாரண பித்அத்கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு இடமற்ற உண்மையாகும். ஒருமுறை ஒருவர் தும்மிவிட்டு, 'அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்' எனக் கூறினார். இதனைச் செவிமடுத்த அப்துல்லாஹ் பின் உமர்(றழி) அம்மனிதரை நோக்கி 'அல்லாஹ்வின் தூதர் தும்மினால் இவ்வாறு சொல்வதற்கு எமக்குக் கற்றுத்தரவில்லையே. 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மாத்திரமே கூறுமாறு போதித்தார்கள்' எனக் கூறினார். 
இச்சம்பவத்தைக் குறிப்பிடும் ஷெய்க் கஸ்ஸாலி 'சிலரைப் பொறுத்தவரையில் ஓர் அற்ப விடயமாகக் கருதப்படுகின்ற இந்த நூதனத்தைக் கண்டும் கண்டிக்காமலிருப்பதை இப்னு உமர் (றழி) சரிகாணவில்லை. அம்மனிதர் ஸுன்னாவின் வரம்பை மீறாமல், அதில் எத்தகைய கூடுதலும் குறைத்தலும் செய்யாமலிருக்க வேண்டும், அதற்கு வழிகாட்டுவது தனது கடமையாகும் எனக் கருதினார். அன்று இப்னு உமர் (றழி) இந்த நூதனத்துக்கு இடம் கொடுத்திருந்தால் 
இன்று பித்அத் வாதிகள் தும்மிவிட்டுச் சொல்வதற்கு பல கட்டுரைகளையும் அதற்குப் பதில் சொல்வதற்கு அதைவிட நீளமான கட்டுரைகளையும் கூட உருவாக்கியிருக்கக்கூடும். இத்தகைய சிறிய விவகாரங்களில் ஏற்படும் நூதனங்கள்தான் படிப்படியாகப் பெரிய விடயங்களிலும் நூதனங்களை ஏற்படுத்தத் தூண்டுகோலாய் அமைகின்றன' எனக் குறிப்பிடுகிறார்.

ஆயினும் இஸ்லாமியப் பிரசாரத்தின்போது பித்அத்களை ஒழிப்பதில் கவனத்திற்கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உண்டு. இஸ்லாம், 'இல்ம்' எனும் அறிவாகவும் 'தஃவா' எனும் அழைப்பாகவும் 'தர்பிய்யா' எனும் பயிற்சியாகவும் 'மஃரகா' எனும் போராட்டமாகவும் மனித சமூகத்திற்கு முன்னால் வைக்கப்படுகின்றது. இஸ்லாத்தை எந்த அடிப்படையில் சமூகத்திற்கு முன்வைக்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கான அணுகுமுறைகள் வித்தியாசப்படும்.

இஸ்லாத்தை 'இல்ம்' ஆக வழங்குகின்ற பொழுது கைக்கொள்ளும் வழிமுறைகளைத்தான் அதனை தஃவாவாக வழங்கும் பொழுதும் கைக்கொள்ள வேண்டுமென்பதில்லை. தஃவாவின்போது கைக்கொள்ளும் அணுகுமுறைகளை விட்டும் வித்தியாசமாக 'தர்பிய்யா'வின்போது கைக்கொள்ளும் வழிமுறைகள் அமைய வேண்டி ஏற்படும். தஃவா, தர்பிய்யா, இல்ம் ஆகிய நிலைகளின் பொழுது கருத்திற்கொள்ளாத விடயங்களை, வித்தியாசமான வழிமுறைகளை 'மஃரகா' எனும் போராட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டி ஏற்படும்.

தஃவாவின்போது கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சங்களை - தஃவாவுக்கான முறைகளை இஸ்லாமிய ஷரீஅத் ஒரு தனித் தலைப்பின் கீழ் விளக்குகிறது. இஸ்லாமிய 'பிக்ஹ்'இல் (சட்டத்தில்) இது, 'அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா பித்தஃவா' என்றும் 'அல் ஹிஸ்பா' என்றும் வழங்கப்படுகின்றன. இஸ்லாமிய பிக்ஹ் நூல்கள் இபாதாத், முஆமலாத், ஜியானாத் போன்ற அம்சங்களைத் தனியான தலைப்புக்களின் கீழ் ஆராய்வது போலவே மேலே குறிப்பிட்ட தலைப்புக்களின் கீழ் தஃவா முறை பற்றியும் ஆழமாக விளக்குகின்றன.


இவ்வகையில் தஃவாக் களத்தில் பித்அத்களை ஒழிக்க முற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

   1. நிதானம்
   2. முக்கியமானவற்றிற்க்கு முன்னுரிமை வழங்கல்.
   3. பித்அத்களை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்.
   4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனைவிடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்.
   5. பித்அத்களை ஒழிப்பதைவிட ஸுன்னத்துக்களை உயிர்ப்பிப்பதில் கூடிய கவனம் செலுத்துதல்.
   6. பித்அத்துக்களை ஒழிப்பதுவே முழு இஸ்லாமிய தஃவாவாகும் என்ற கருத்தைக் கொள்ளாதிருத்தல்.
   7. ஹிக்மா எனும் ஞானத்தையும் 'அல்-மவ்இழதுல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கடைப்பிடித்தல்.


   1. நிதானம்

பித்அத் ஒழிப்பின் பொழுது நிதானத்தைக் கைக்கொள்வது முக்கியமான ஓர் அம்சமாகும். பித்ஆ ஹகீகிய்யா குல்லிய்யா எனும் பிரிவில் அடங்குகின்ற மிகப் பாரதூரமான பித்அத்துகளை எதிர்ப்பதிலும்கூட நிதானம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 
ஹஸ்ரத் மூஸா(அலை) அவர்கள் மீகாத்திற்காக (அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக) தன் சமூகத்தைச் சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு செலநடைமுறையில் பித்அத்களுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? அவற்றை ஒழிக்க முற்படும்போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அணுகு முறைகள் யாவை, என்பன பற்றி ஒரு தாஈ அறிந்திருப்பது அவசியமாகும்.

அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு சாதாரண பித்அத்கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு இடமற்ற உண்மையாகும். ஒருமுறை ஒருவர் தும்மிவிட்டு, 'அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்' எனக் கூறினார். இதனைச் செவிமடுத்த அப்துல்லாஹ் பின் உமர்(றழி) அம்மனிதரை நோக்கி 'அல்லாஹ்வின் தூதர் தும்மினால் இவ்வாறு சொல்வதற்கு எமக்குக் கற்றுத்தரவில்லையே. 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மாத்திரமே கூறுமாறு போதித்தார்கள்' எனக் கூறினார்.

Saturday, 26 October 2013

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 03

தொடர்ச்சி…..

5. பாவங்கள், தவறுகள், பிழைகள் ஆகியவற்றைச் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெறாதோரை முற்றாக ஏற்றுப் பின்பற்றுதல்.

ஷீயாக்கள் தங்களது இமாம்களைப் பாவங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகக் கருதி அவர்களை முற்று முழுதாக ஏற்றுப் பின்பற்றியதனால், தங்களுடைய இமாம்களின் சொல், செயல் அனைத்தையும் மார்க்கமாகக் அவர்கள் கருதினர். இதனால் உருவான பித்அத்கள் எண்ணிலடங்காதவை. ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்த பலரும்கூட தங்களது ஆன்மீக வழிகாட்டிகளையும் இமாம்களையும் மேற்குறித்த நிலையில் வைத்து நோக்க முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாகின என்பதை மறுப்பதற்கில்லை.


ஏனெனில், இத்தகையோர் தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முரணாக அமைந்த அனைத்தையும் வழிகேடாகக் கருதியது மாத்திரமல்ல, இஸ்லாத்தில் மூலாதாரங்களுக்கு அக்கருத்துக்கள் முரணாக அமைந்தாலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயங்கவில்லை. 'தக்லீத்' எனும் இமாம்களைப் பின்பற்றும் நிலையை இஸ்லாம் அனுமதித்தாலும், இத்தகைய போக்கை அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் அனுமதிக்கும் 'தக்லீத்' அமைப்பை விளக்கவந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி, ஒருவர் தான் பின்பற்றுகின்ற முஜ்தஹிதான இமாம், சரியான முடிவுகளைப் பெறும் ஆற்றல் படைத்தவராக இருப்பது போலவே பிழையான முடிவுகளுக்கும் வரக்கூடியவர் என்பதை அறிந்த நிலையில் அவரைப் பின்பற்றுவதை இஸ்லாம் அனுமதித்துள்ள 'தக்லீத்'என்றும், தனது இமாமின் கருத்துக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கின்ற நேரத்தில் தக்லீதை விட்டுவிட்டு ஹதீஸை ஏற்றுப் பின்பற்றுவோராகவும் அவர் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனால்தான் எல்லா இமாம்களும் தங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கின்றனர்.

Friday, 25 October 2013

பாவங்கள் சூழ்ந்த நிலை!

இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலனம் செய்து வரும் அல்லாஹ் மனித சமுதாயத்தை பலவீனமான நிலையிலேயே படைத்துள்ளான்.

அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (திருகுர்ஆன் 4:28)


இப்படி பலவீனமான மனித சமுதாயம் நித்தமும் பாவம் எனும் ஆற்றில் நீந்திக் கரைசேர இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நன்மை, தீமைகளை பிரித்தறியக் கூடிய ஆற்றலை மனிதனுக்கு இறைவன் வழங்கியும் பாவ காரியங்களை மிகச் சர்வ சாதாரணமாக, நாம் பாவம் செய்கிறோம் என்ற நாணம் கூட ஏன் எண்ணம் கூட இல்லாமல் செய்து வருவதை நம்மைச் சுற்றியிருப்பவர்களை நோக்கினாலே தெளிவாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நேரான வழியில் நடக்க வேண்டும், பாவங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று முயலும் மனிதன்கூட தன் அரைகுறை ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு எங்கு நோக்கினும் பாவத்தின் ஊற்றுக் கண்களே தென்படுகின்றன.

Thursday, 24 October 2013

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 02


தொடர்ச்சி…..

2. பகுத்தறிவுக்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்தல்

இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் கூறுகின்ற முடிவுகளுக்கு முரணாக, பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனடிப்படையில் முடிவுகளைப் பெற்றபோது பல பித்அத்கள் தோன்றுவதற்கு முஃதஸிலாக்களே பெரிதும் காரணமாக அமைந்தனர். இவர்கள் தமது பகுத்தறிவுக்கு முரணாகத் தெரிகின்ற ஹதீஸ்களை மறுத்தனர். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் காணப்படும் பல அடிப்படைகளையே நிராகரித்தனர். அவற்றிற்கு வலிந்து பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். இவர்களால் உருவான சில பித்அத்தான கருத்துக்கள் கீழ்வருமாறு:-


1 மறுமையில் அல்லாஹ்வைக் கண்களால் காணமுடியாது.
2 ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் உலகிற்கு வரப்போவதில்லை.
3 கப்றில்; வேதனை கொடுக்கப்படுவதில்லை.


மேலும், ஸிராத், மீஸான் போன்ற பகுத்தறிவினால் புரிந்துகொள்ள முடியாத, அகீதா தொடர்பான ஆதாரபூர்வமான பல அம்சங்களுக்கு பகுத்தறிவினடிப்படையில் பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர்.

இத்தகையோர் பற்றி ஷாஹ்; வலியுல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறார்: 'இந்த பித்அத்வாதிகள் பல இஸ்லாமிய சட்டங்களில், அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்று கூறி சந்தேகத்தை ஏற்படுத்தினர். பகுத்தறிவுக்கு முரணான அனைத்தும் மறுக்கப்பட வேண்டும் அல்லது அவற்றிற்குரிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

வீட்டை கட்டுவதற்கு முன்பு அண்டை அயலார்கள் பற்றி அறிதல்

இந்தத் தலைப்பினைத் தேர்வு செய்வதற்கான முக்கியத்துவம் இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில், அண்டை அயலார்கள் ஒருவரது பழக்க வழக்கங்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், ஏனென்றால் வீடுகள் நெருக்கமாக அமைக்கப்படுகின்றன, மக்கள் நெருங்கி வாழும் சூழ்நிலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவை மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவைகளாக இருக்கின்றன.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான்கு விதமான சந்தோஷங்கள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று நேர்மையான அண்டை வீட்டார், இன்னும் நான்கு வகையான கேடுகள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று கெட்ட அண்டை வீட்டார்.
(அபூ நயீம் - அல் ஹில்யா, 8-388, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 887).

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 01

பித்அத்கள் தோன்றுவதற்குக் காரணங்களாக அமைபவை பல. அவற்றைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சிரமமானதாகும். அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது: ''நிச்சயமாக இது தான் நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்றவைகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும்.

 நீங்கள் பரிசுத்தவான்களாவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு நல்லுபதேசம் செய்தான்.''(6:153) இத்திருவசனத்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கும் நபிமொழி மேலும் விளக்குகிறது. 'ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் எமக்கு ஒரு கோட்டைக் கீறிக் காட்டி, 'இதுதான் அல்லாஹ்வின் வழி' எனக் குறிப்பிட்டார்கள். பின்னர் அதன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இன்னும் பல கோடுகளைக் கீறிக் காண்பித்து, 'இவைகள் பல வழிகளாகும்; இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஷைத்தான் இருந்துகொண்டு அதன்பால் அழைத்துக்கொண்டிருக்கின்றான்.' எனக் கூறிவிட்டு மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதினார்கள். இவ்விளக்கத்திலிருந்து அல்லாஹ்வின் வழி - நேர்வழி - ஒன்றாக இருப்பினும், வழிகேட்டினதும் பித்அத்களினதும் வழிகள் பலவாக, வரையறைகளுக்கு உட்படாதவைகளாக இருக்கின்றன என்பதனைப் புரிந்துகொள்ளலாம். ஆயினும், இதுபற்றி ஆழமாக ஆராய்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், பித்அத்கள் உருவாவதற்குரிய பிரதான காரணங்களை விளக்கியுள்ளனர்.

Thursday, 10 October 2013

பழைய சாதத்தின் மகிமை

முதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

 

கூடவே 2 சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்புசக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை நெருங்காது !


பழைய சாதத்தின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியவற்றில் இருந்து சில:

Monday, 7 October 2013

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்.


குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

· பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

· புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.

விதி பற்றிய நம்பிக்கை / ஒரு வரைவிலக்கணம்



இஸ்லாம் என்ற மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களும் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகிவிட முடியாது என்று அதில் ஆழமான நம்பிக்கையையும் வைத்துள்ளோம். அல்லாஹ், மலக்குமார்கள், நபிமார்கள், வேதங்கள், இறுதி நாள், விதி ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவதுதான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றைக்கூட நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும் என்பதும் நாம் அறிந்ததே.

எந்த 6 அம்சம் நம்மை முஸ்லிம் என்று பறைசாற்றுகிறதோ, எந்த 6 அம்சத்தை ஆழமாக நாம் நம்ப வேண்டுமோ, அதில் ஓரம்சம் மிகுதி 5 அம்சங்களையும் பொய் என்று பறைசாற்றுவதுபோன்று மேலோட்டமாகப் பார்த்தால் விளங்கும்.
அதுதான் விதி பற்றிய நம்பிக்கை.

வேதங்கள்

மக்களை நேர்வழியின் பால் அழைப்பதற்காக இறை தூதர்களுக்கு வேதங்களும் ஸுஹ்ஃபுகளும் அவ்வப்போது இறைவனால் அருளப்பட்டு வந்தன.அவற்றுள் சிலவற்றை அருள் மறை அல்குர்ஆன் அறிவித்துள்ளது.
1. தவ்ராத் வேதம் நபி மூஸா (அலை) அவர்களுக்கும், (5:44)
2. ஸபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கும், (17:55,21:105,)
3. இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும், (27:57,5:46)
4. குர்ஆன் வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், (3:4,5:44,5:48,12:2)
(நான்கு வேதங்கள்) அருளப்பட்டுள்ளன. அது போல,

5. நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும்
6. நபி மூஸா (அலை) அவர்களுக்கும் (தவ்ராத் வேதம் அருளப்படுமுன்) ஸுஹ்ஃபுகள் அருளப்பட்டதாகவும். 87: 18-19. 53:36-.37 வசனங்கள் தெரிவிக்கின்றன.

நபிமார்கள்

உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு முஹம்மது நபி (ஸல்) வரை இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வல்ல இறைவன் அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளான். 
இவர்கள் அனைவரும் ஆண்களாவர்.பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இறைவன் ஒருவனே! அவனையே வழிபட்டு வரவேண்டும். அவனுக்கு எந்த வகையிலும் இணைவைத்தல் கூடாது.அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்படவும், விலக்கியவற்றை தவிர்;ந்து நடக்கவும் மக்களை போதித்து அவர்களை இறைன் பால் அழைப்பதுவே இவர்களின் கடமையாகும்.
‘உலகில் ஒரு இலட்சத்து இருபத்திநாலாயிரம் நபிமார்கள் அனுப்பபட்டுள்ளன.அவர்களில் 313 இரசூல்மார்கள் ஆவார்கள்’ என அஹ்மது, இப்னு ஹிப்பான்,பிதாயா வந்நிஹாயா போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கருத்து வேறுபாடு உள்ளதால் இத்தனைபேர் தான் என வரையறுக்காது ‘ இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை இறைவன் உலகிற்கு அனுப்பியுள்ளான’; என நம்புவதே நம்மீது கடமையாகும்.
இவர்களில் முதல் இறைதூதர் ஆதம் (அலை) அவர்களும், இறுதியானவர் முஹம்மது (ஸல்) அவர்களுமாவர்கள்.இவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை இறைமறை நெடுகிலும் கூறப்பட்டுள்ளன.

மறுமை நாள்/இறுதி நாள்

மறுமை நாள்/இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வதன் பொருள்
இந்த உலகிற்கும் உலகிலுள்ள அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.        அந்த தவணை வரும்போது அனைத்தும் அழிந்து விடும். பின்னர் இறந்தவர் யாவரையும் உயிர் கொடுத்து எழுப்பி விசாரணை செய்து அவரவர் நன்மை தீமைகளுக்கேற்ப நீதி வழங்குவான். நன்மை செய்தோருக்கு சுவாக்கமும், பாவம் செய்தோருக்கு நரகமும் கூலியாக வழங்கப்படும். அந்த நியாயத் தீர்ப்பு நாளை நம்புவதற்கே ‘ கியாமத்து நாள்’ இறுதி நாள் எனப்படும்.
பலபெயர்கள்
இறுதி நாள் வரும்போது வானம்,பூமி,சூரியன்,விண்கோள்கள்,பூமியில் வாழும் மனிதர்கள்,உயிரினங்கள்,தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.அந்நாளில் அல்லாஹ் ஒருவன் மடடுமே நிலைத்திருப்பான்.
கியாமத் நாள்,மறுமை நாள்,நியாயத் தீர்ப்பு நாள், யுக முடிவு நாள்,இறுதி நாள், சூர் ஊதப்படும் நாள் என பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. பின்னர் மீண்டும் மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர்.

அல்லாஹ் என்றால் யார்...??? -அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்-

அல்லாஹ் என்றால் யார்...???
-அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்-

நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்காவிட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
நீங்கள்அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும்,இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!

கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமிஉட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம்,வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது
இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?
நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம்,அமர்கிறோம், ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப் படுத்தியவன்

ஈமானின் அடிப்படைகள்

    ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்தாவது: நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும்.
    இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும்.
    எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது நாம் இவ்வுலகில் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.

மலக்குமார்கள்

மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன.

1.வானவர்கள் என்றால் யார் ?
மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்
வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)
இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்.

மருத்துவத்திற்கு பயன்படும் முட்டைகோஸ்

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.