முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக
நம்புதல்.
நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று
கட்டுப்படுதல்
நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல்
பின்பற்றுதல்.
நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல்
அப்படியே பின்பற்றுதல்.
நபியின் செயல்முறைகளுக்கு மேலதிகமாக எதையும்
உருவாக்காமல் தவிர்ந்து கொள்ளல்.
நபியை சகல காரியங்களிலும் முன்மாதிரியாகக் கொள்ளல்.
நபியின் சுன்னாக்களை குறைக்காமல், கொச்சைப்படுத்தாமல்
செயல்படுத்துதல்.
நபியை தன் உயிர், பொருள், பிள்ளை, பெற்றோரை விட
நேசம் கொள்ளல்.
நபி காட்டிய வழியை ஏற்று நபி தடுத்த விடயங்களை
விட்டும் தூரமாகுதல்.
நபி போதித்த மார்க்கத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும்
கடைப்பிடித்தல்.
நபியின் மீது எப்போதும் ஸலவாத்து கூறல்.
நபி எத்திவைத்த குர்ஆனை தினம் தோறும் ஓதுதல்
நபி போதித்த குர்ஆனின் விளக்கங்களைப் படித்தல்.
நபியின் தூய வரலாற்றை குழந்தைகளுக்குக் கற்றுக்
கொடுத்தல்.
நபியுடன் தியாகங்கள் புரிந்த உத்தம ஸஹாபாக்களையும்
குடும்பத்தாரையும் மதித்தல்.
நபியின் பெயரால் கூறப்படும் செய்திகளுக்கு தகுந்த ஆதாரம்
கேட்டல்.
நபியின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களை மட்டும் பின்பற்றல்.
நபிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் ஆதாரமற்ற, போலியான ஹதீஸ்களை
விட்டு விடுதல்
நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவதோ இணையாக
ஆக்குவதோ ஆட்சேபித்தல்.
நபியை சாதாரண மனித நிலைக்கு -கீழ் தரத்துக்கு-
பேசுவதை கண்டித்தல்.
நபியை இறுதி நபியாக அகில மக்களுக்கும் ரஹ்மத்தாக
அனுப்பப்பட்டவர் என உறுதியாக நம்புதல்.
நபிக்கு பின் இன்னுமொருவர் தன்னை நபி என வாதிடுவதையோ
போதிப்பதையோ கண்டால் பலமாக எதிர்த்தல்.
நபியுடைய தூதுத்துவத்தை மனித சமூகத்திற்கு
எத்திவைத்தல்.
நபியுடைய வழிமுறைக்கு மாற்றமாக தோன்றும் அத்தனை
பிரிவுகளையும் விட்டு ஒதுங்குதல்.
நபியை முழுமையாக ஒவ்வொரு வினாடியும் பின்பற்றுவதே
நபிக்கு செலுத்தும் மரியாதையும் கௌரவமுமாகும்.
No comments:
Post a Comment