Thursday, 10 October 2013

பழைய சாதத்தின் மகிமை

முதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

 

கூடவே 2 சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்புசக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை நெருங்காது !


பழைய சாதத்தின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியவற்றில் இருந்து சில:

Monday, 7 October 2013

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்.


குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

· பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

· புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.

விதி பற்றிய நம்பிக்கை / ஒரு வரைவிலக்கணம்



இஸ்லாம் என்ற மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களும் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகிவிட முடியாது என்று அதில் ஆழமான நம்பிக்கையையும் வைத்துள்ளோம். அல்லாஹ், மலக்குமார்கள், நபிமார்கள், வேதங்கள், இறுதி நாள், விதி ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவதுதான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றைக்கூட நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும் என்பதும் நாம் அறிந்ததே.

எந்த 6 அம்சம் நம்மை முஸ்லிம் என்று பறைசாற்றுகிறதோ, எந்த 6 அம்சத்தை ஆழமாக நாம் நம்ப வேண்டுமோ, அதில் ஓரம்சம் மிகுதி 5 அம்சங்களையும் பொய் என்று பறைசாற்றுவதுபோன்று மேலோட்டமாகப் பார்த்தால் விளங்கும்.
அதுதான் விதி பற்றிய நம்பிக்கை.

வேதங்கள்

மக்களை நேர்வழியின் பால் அழைப்பதற்காக இறை தூதர்களுக்கு வேதங்களும் ஸுஹ்ஃபுகளும் அவ்வப்போது இறைவனால் அருளப்பட்டு வந்தன.அவற்றுள் சிலவற்றை அருள் மறை அல்குர்ஆன் அறிவித்துள்ளது.
1. தவ்ராத் வேதம் நபி மூஸா (அலை) அவர்களுக்கும், (5:44)
2. ஸபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கும், (17:55,21:105,)
3. இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும், (27:57,5:46)
4. குர்ஆன் வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், (3:4,5:44,5:48,12:2)
(நான்கு வேதங்கள்) அருளப்பட்டுள்ளன. அது போல,

5. நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும்
6. நபி மூஸா (அலை) அவர்களுக்கும் (தவ்ராத் வேதம் அருளப்படுமுன்) ஸுஹ்ஃபுகள் அருளப்பட்டதாகவும். 87: 18-19. 53:36-.37 வசனங்கள் தெரிவிக்கின்றன.

நபிமார்கள்

உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு முஹம்மது நபி (ஸல்) வரை இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வல்ல இறைவன் அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளான். 
இவர்கள் அனைவரும் ஆண்களாவர்.பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இறைவன் ஒருவனே! அவனையே வழிபட்டு வரவேண்டும். அவனுக்கு எந்த வகையிலும் இணைவைத்தல் கூடாது.அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்படவும், விலக்கியவற்றை தவிர்;ந்து நடக்கவும் மக்களை போதித்து அவர்களை இறைன் பால் அழைப்பதுவே இவர்களின் கடமையாகும்.
‘உலகில் ஒரு இலட்சத்து இருபத்திநாலாயிரம் நபிமார்கள் அனுப்பபட்டுள்ளன.அவர்களில் 313 இரசூல்மார்கள் ஆவார்கள்’ என அஹ்மது, இப்னு ஹிப்பான்,பிதாயா வந்நிஹாயா போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கருத்து வேறுபாடு உள்ளதால் இத்தனைபேர் தான் என வரையறுக்காது ‘ இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை இறைவன் உலகிற்கு அனுப்பியுள்ளான’; என நம்புவதே நம்மீது கடமையாகும்.
இவர்களில் முதல் இறைதூதர் ஆதம் (அலை) அவர்களும், இறுதியானவர் முஹம்மது (ஸல்) அவர்களுமாவர்கள்.இவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை இறைமறை நெடுகிலும் கூறப்பட்டுள்ளன.

மறுமை நாள்/இறுதி நாள்

மறுமை நாள்/இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வதன் பொருள்
இந்த உலகிற்கும் உலகிலுள்ள அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.        அந்த தவணை வரும்போது அனைத்தும் அழிந்து விடும். பின்னர் இறந்தவர் யாவரையும் உயிர் கொடுத்து எழுப்பி விசாரணை செய்து அவரவர் நன்மை தீமைகளுக்கேற்ப நீதி வழங்குவான். நன்மை செய்தோருக்கு சுவாக்கமும், பாவம் செய்தோருக்கு நரகமும் கூலியாக வழங்கப்படும். அந்த நியாயத் தீர்ப்பு நாளை நம்புவதற்கே ‘ கியாமத்து நாள்’ இறுதி நாள் எனப்படும்.
பலபெயர்கள்
இறுதி நாள் வரும்போது வானம்,பூமி,சூரியன்,விண்கோள்கள்,பூமியில் வாழும் மனிதர்கள்,உயிரினங்கள்,தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.அந்நாளில் அல்லாஹ் ஒருவன் மடடுமே நிலைத்திருப்பான்.
கியாமத் நாள்,மறுமை நாள்,நியாயத் தீர்ப்பு நாள், யுக முடிவு நாள்,இறுதி நாள், சூர் ஊதப்படும் நாள் என பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. பின்னர் மீண்டும் மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர்.

அல்லாஹ் என்றால் யார்...??? -அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்-

அல்லாஹ் என்றால் யார்...???
-அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்-

நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்காவிட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
நீங்கள்அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும்,இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!

கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமிஉட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம்,வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது
இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?
நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம்,அமர்கிறோம், ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப் படுத்தியவன்

ஈமானின் அடிப்படைகள்

    ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்தாவது: நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும்.
    இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும்.
    எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது நாம் இவ்வுலகில் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.

மலக்குமார்கள்

மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன.

1.வானவர்கள் என்றால் யார் ?
மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்
வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)
இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்.

மருத்துவத்திற்கு பயன்படும் முட்டைகோஸ்

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.