தொழில் மற்றும் சுற்றுச் சூழல் மருத்துவ சஞ்சிகையில் (Ocupational and Environmental Medicine Journal) வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மை என்னவெனில் ரொட்டி, பன், பிஸ்ஸா, போன்ற பொருட்களை விரைவில் தயாரிக்க அவைகளின் மூலப் பொருளான மைதாவில் ஆல்பா அமைலேஸ் (ALFA AMYLASE) என்ற ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த நொதிப் பொருளின் தொடர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு இரைப்பு, ஆஸ்துமா, கண் எரிச்சல் மற்றும் தோல் சிவத்தல் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள். (ஆதாரம் the sunday review, april 18.1998) தொடர்ந்து இவ்வுணவுப் பொருட்களை உட்கொள்கிறவர்களின் நிலை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்.
அழகு சாதனப் பொருட்களில் இரசாயனம்
பல் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் பற்பசை, கூந்தல் பராமரிப்பிற்காக பயன்படுத்தும் கூந்தல் தைலம், அழகிற்கென பயன்படும் கிரீம் போன்ற அழகு சாதனப் பொருட்களில் அளவுக்கதிகமாக இரசாயனப் பொருட்கள் தான் சேர்க்கப்படுகிறது. இவற்றின் பாதிப்புகளை அறிந்து அவற்றை தவிர்க்கலாமே !
பற்பசையினால் ஏற்படும் ஆபத்துகள்
கி 1203 – அலுமினிய ஆக்ஸைடு. உலோகங்களை பாலிஷ் செய்ய பயன்படும் இரசாயனம் பல்லின் மேல் படியும் கரையை அகற்ற பற்பசையில் சேர்க்கப்படுகிறது. ஆனால் இது பல் எனாமலையும் சேர்த்துத் தேய்த்துப் பல் கூச்சத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* பற்பசைகளில் புளோரைடு (flouride) என்னும் ஒரு வித இரசாயனம் கலக்கப்படுகிறது. இது நாளடைவில் பல் எனாமல் பெயர்ந்து விழ காரணமாகின்றது. நாம் காலையில் எழுந்ததும் இந்த புளோரைடு கலந்த பற்பசையினால் பற்களை துலக்குகிறோம். நம் நாக்கு நமக்கு ஒரு பாதுகாப்பு டாக்டர். இந்த புளோரைடு நம் நாக்கில் பட்டவுடன் இது நம் உடலுக்கு ஒவ்வாத நச்சுப் பொருள் என்று அறிந்து நம் உடலில் பல முக்கிய நொதிகளை செயலிழக்கச் செய்கிறது.
நாக்கில் படுவதற்கே இவ்வளவு விளைவுகள் என்றால் சிறு குழந்தைகள் பல் விலக்குகிறேன்? என்று பாதி பற்பசையை விழுங்கி விடுகிறார்களே அவர்களின் வயிறு என்னவாகும் கொஞ்சம் யோசிப்போம். அது மட்டும் இல்லாமல் நமது இயல்பான நோய் எதிர்ப்புத் திறனும் இந்த புளோரைடு காரணமாக பாதிப்படைகிறது. நமது உடலின் அனைத்து திசுக்களையும் ஒன்றிணைக்க உதவும் கொலஜன் ( collagaen) என்னும் பொருளைப் புளோரைடு சிதைத்து விடுகிறது.
கூந்தல் தைலம்
எண்ணெய் கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோலியம் ஜெல் கலக்கப்படுவது இன்று வெகு சாதாரணமாகிவிட்டது. இதனால் கண் பார்வை கோளாறு, தோல் உரிதல், குடற்புண், முடி உதிர்தல், மலச்சிக்கல்இ மூல வியாதி, கைகளில் வெடிப்பு மற்றும் மாதவிடாய் கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க என்ன வழி என்று கேட்டால் இயற்கை நமக்கு அளித்த எளிமையான தேங்காய் எண்ணெய், மற்றும் மூலிகை எண்ணெய்கள் தாம்.
முகப் பவுடர்.
முகப் பவுடரில் போரிக் அமிலம் என்னும் ஓர் இரசாயனப் பொருளைச் சேர்க்கின்றனர். பலவித ஒவ்வாமை விளைவுகள் இதனால் ஏற்படுகின்றன. இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களுக்கென எந்த விதமான சட்ட விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை. அதனால் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும் மாறிப்போனது இந்தியா.
அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில்தான் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை சொல்லி இருக்கிறது உலக சுகாதார நிறுவனம். முகப்பவுடரில் (TALCOM POWDER) பாதரசம் சேர்க்கப்படுகிறது. பாதரசம் சேக்கப்படும் சோப், பாடிலோஷன், கிரீம் மற்றும் இன்ன பிற அழகு சாதனப் பொருட் களை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
சோப், பாடிலோஷன், கிரீம் போன்றவற்றில் பாதரசம் சேர்க்கப்பட்டிருந்தாலும் கண்ணுக்கு மேல் போடப்படும் மஸ்காராவில் பாதரசம் அதிகம் சேர்க்கப்படுகிறது.
அமெரிக்கா மட்டும் தான் அழகு சாதனப் பொருட்களில் பாதரசத்தை அடியோடு தடை செய்து இருக்கிறது. இதற்காக பல விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்து கண்காணிக்கிறது எப். டி. ஏ. என்ற கண்காணிப்பு அமைப்பு.
இந்தியாவில் அப்படிப்பட்ட தடைகள் எதுவும் இல்லாததால் இங்கு தங்கு தடையின்றி விற்பனையாகிறது இந்தப் பொருட்கள். இந்த அழகு சாதனப் பொருட்களில் எந்த லேபிளும் இல்லை. அப்படியே இருந்தாலும் புரியாத, தெரியாத மொழியில் இருக்கும்.
பாதரசம் கலக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன் பயன்படுத்தும் போது தோலில் தடிப்பு, நிறமாற்றம், கண்களில் எரிச்சல், தலைவலி, மயக்கம், ஹார்மோன் கோளாறு, நுரையீரல் பிரச்சனை, தோலில் ஊடுருவிச்செல்வதால் சிறு நீரகக் கோளாறு, மன அழுத்தம் உள்ளிட்ட மனரீதியான பாதிப்புகளும், நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்படும். சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலம் ஆகியவை மெல்ல மெல்ல செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டு அடுத்த தலைமுறையையே சீரழிக்கும்.
எனவே புரியாத, தெரியாத மொழியில் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் பொருட்களை வாங்காதீர்கள். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். உலகிலேயே மிக மோசமான ஆறு விசயங்களில் ஒன்று பாதரசம். பூச்சிக் கொல்லிகள் மின் குமிழ்கள் உற்பத்தியில் தான் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
கலோமில், மெர்குரிக், குளோரைடு, மெரிகுரியோ பாதரச ஆக்ஸைடு, க்விக் சில்வர், பாதரச குளோரைடு, பாதரச சல்ஃபைடு போன்ற சேர்மானப் பொருட்கள் இருப்பதாக அழகு சாதனப் பொருட்களின் லேபிளில் குறிப்பிட்டிருந்தால் இந்தப் பொருட்களை வாங்க வேண்டாம். தோலின் நிறத்தை மாற்றுவதற்காக சோப், கிரீம் என இயற்கைக்கு மாற்றமாகப் போனால் நோய்தான் வரும்.
தற்காலிக அழகைத் தரும் அழகு சாதனங்களை பயன்படுத்துவதை விட நிம்மதியான தூக்கம், ஆரோக்கியமான உணவு, நல்ல பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கடைபிடிப்பதே அழகை கூட்டும்.
புகையிலை
மேலை நாடுகளில் தோன்றிய பழக்கங்களில் பல அவர்களால் கைவிடப்பட்ட பின்பும் இன்று நம் மக்களிடையே தீவிரமாகப் பரவி வருகின்றன. அவற்றில் புகையிலை முக்கியமானது. இது பீடி, சிகரெட் உருவத்தில் புகைப்பதற்கும், பான்மசாலா மற்றும் வெற்றிலையுடன் மெல்வதற்கும், மூக்குப் பொடி வடிவத்திலும் உடலுக்குள் செல்கிறது.
புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்களில் முக்கியமானது நிக்கோடின்.
இது தவிர ஐம்பது வகையான மிகவும் ஆபத்தான நச்சுப் பொருட்களும் புகையிலையில் உள்ளன.
புகைப்பவர் தனக்கு மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கை பகிர்ந்தளிக்கிறார்.
புகை உடனடியாக சுவாச மண்டலத்தின் மென்படலத்தை ( mucous membrane ) அரித்து விடுகிறது.
நுரையீரல் மற்றும் வாய்புற்று நோய்க்கு புகையிலையே முதல் காரணம்.
இரைப்பையில் புண்களை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு சிகரெட்டும் மனிதனின் பொன்னான வாழ்வின் அரைமணி நேர ஆயுளை குறைக்கிறது.
கருவில் இருக்கும் குழந்தையை தாக்கி வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதைத் தவிர உடலில் காட்மியம் சேர்வதால் இரத்த சோகை, கல்லீரல் நோய்கள், விந்தகச் செயல் இழப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்படுகிறது. எனவே புகையிலை உள்ளிட்ட தீமைகளை ஏற்படுத்தும் எல்லாப் பொருட்களையும் ஒழிப்போம்! புது வாழ்வு பெறுவோம்!
No comments:
Post a Comment