Tuesday, 16 October 2012

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

குழந்தைகளுக்கான முஸ்லிம் பெயர்கள்
Download this book in PDF


இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குபெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும்சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர்பெயர்சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச்சட்டங்களை தெரிந்து கொண்டால் மிக எளிதாகநாம் முடிவெடுத்து விடலாம்நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமானபெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்உங்கள் பெயர்களில்அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதுஅப்துல்லாஹ் (அல்லாஹ்வின்அடிமைமற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமைஆகியவையாகும்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (­லிநூல் : முஸ்லி­ம் (4320)

இறைவனுக்கு இணையானவராக காட்டும் வகையில் பெயர் சூட்டுவதைமிகக்கடுமையாக கண்டித்துள்ளார்கள்மேலும் இவ்வாறு பெயர் வைத்துக்கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும்எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்மறுமை நாளில்அல்லாஹ்வின் கோபத்துக்குரியஅவனிடம் மிகவும் கேவலமான மனிதர்யாரெனில், (உலகில்) 'மன்னாதி மன்னன்எனப் பெயரிடப்பட்ட மனிதர்தாம்.அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்தமன்னன் வேறுயாருமில்லை.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) நூல் : முஸ்லி­ம் (4339) புகாரி (6205)

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் ''அஸீஸ்'' (யாவற்றையும் மிகைப்பவன்என்று இருந்ததுஅவருக்கு நபியவர்கள் ''அப்துர்ரஹ்மான்'' (அளவற்ற அருளாளனின் அடிமைஎன்று பெயர் சூட்டினார்கள்.அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி­) நூல் : அஹ்மத் (16944) 

Monday, 15 October 2012

இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?


Post image for இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும் உரித்தானது!
தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின் காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின் செயல்பாடுகள் மறுபுறம்!

மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!


Post image for மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31)  மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து [...]

வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற


வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக “கண்டதையும்” சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். “கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்” என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.
வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, “பழங்கள் சாப்பிடுகிறேன்” என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி நேரத்தில் செரிமானம் ஆகி விடும். இதையடுத்து, அடிவயிற்றில் உள்ள தசைகளும், குடல் தசைகளும் இயங்கி, மலத்தை வெளியேற்றுகின்றன.

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்


துளசி:-
  • 1. ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
  • 2. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.
வில்வம்:-
  • 1. காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது.
  • 2. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
அருகம்புல்:-
  • 1. எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.

குழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்!


குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்
வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்
வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்
தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்
ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .
துணி diaper சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே வீட்டிலேயே சுத்தமான புது துணியை பயன்படுத்தலாம் .
துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும் .

‘தாயின்  பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.