முன்னுரை
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம்
அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல்
நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர்
தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே
இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!
ஆதம் நபியின் நற்குணம்
முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி
பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம்
நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு
கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)
அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள்
இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை
மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம்
தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும்
பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)
இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு
நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம்
நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை
பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல்
ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில்
ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)
இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்
அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)
தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த
சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும்
நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு
தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு
கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத்
குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.
இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற
காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு
காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!
யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?