Wednesday, 27 June 2012

இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?

- எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி
அன்புக்குரிய பெற்றோர்களே! கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்வி மான்களினதும் பணி இன்றியமையாதது.
கல்வி யின் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய எமது சமூகம் அதனை எப்படி எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
பிரசித்திப் பெற்ற பாடசாலைகளிலும் International Schools களிலும் பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். அத்தோடு மேலதிக வகுப்புகளில் (Tution Class) பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அனுப்பிவைக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகைளின் எதிர்கால முன்னேற்றம் கருதி இரவு பகலாக கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி சம்பாதிக்கிறார்கள். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா என்பதை பெற்றோர்கள் ஒரு முறை சிந்திக்கவேண்டும்.
வளர்ந்து வரும் இளம் சமூகத்தினதும் மாணவ மாணவிகளினதும் செயற்பாடுகள் இன்று பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதை யாவரும் அறிந்ததே. பாடசாலைக்கும் Tution Class க்கும் செல்வதாக கூறிக் கொண்டு தங்களுடைய காதலன் காதலியுடன் தெரு ஓரங்களிலும் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் சினிமா அரங்குகளிலும் சுற்றித்திரிகிறார்கள். குறிப்பாக சனி ஞாயிறு தினங்களில் அதிகமாக இக்காட்சி காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வெளிப்பகுதிகளிலிருந்து கொழும்புக்கு Tution Class வரும் பிள்ளைகளும் இத்தகைய செயல்களில் அதிகமாக ஈடுபாடுகொள்கிறார்கள்.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய கண்ணியமான ஆடை தான் ஹிஜாப் அபாயா என்னும் ஆடை. அந்த ஆடை இன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டுகாதல லீலைகளுக்கு பாதுகாப்பு அரணாக ஆக்கப்படுகிறது. இந்த அபாயா ஆடையை கள்ள உறவுக்காகவும் தங்களை அடையாளம் காணாமல் இருக்கும் பொருட்டும் சிலர் பயன்படுத்துகிறார்கள். Room Services என்ற இடத்திற்கு போய் தவறான செயல்களில் ஈடுபடவும் இவ் ஆடையை (முகமூடி அபாயாவை) பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு நடந்து கொண்ட பல பெண்கள் பிடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
அபாயா அணிந்து காதலனுடன் எமது பெண்பிள்ளைகள் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் Bus-லும் Train-லும் செய்யும் அசிங்கங்களையும் சில்மிஷங்களையும் பார்க்க சகிக்க முடியவில்லை. பலரும் காரித் துப்புகின்ற அளவுக்கும் வேதனை படக்கூடிய அளவுக்கும் நிலமை காணப்படுகிறது. ஒருசிலர் இதனை படம் பிடித்து Websites & YouTube களிலும் போட்டிருக்கிறார்கள். அண்மையில் பம்பலப்பிட்டி கடற்கரைபகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஊனுகளாக வெளியிட்டிருந்தார்கள். அது போலவே களுத்துரை கடற்கரை பகுதியில் பொலிஸாரினால் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது எமது முஸ்லிம் வாலிப பெண்கள் அகப்பட்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே கருகொள்வதும் கருவை கலைப்பதும் என்ற நிலை தோன்றியுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானம் என்று சிந்தித்துப் பாருங்கள்.
பாலினக் கவர்ச்சியில் கட்டுண்டு காதல் மோகத்தில் ஈடுபட்டு கற்பையும் ஈமானையும் இழந்து விட்டு கடைசியில் பெற்றோரையும் எதிர்த்து நின்று மார்க்கத்தையும் தொலைத்து விட்டு போய்விடுகிறார்கள். காதலித்து கைவிடப்பட்ட பெண்களையும் காதல்தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்களையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் தலைமறைவாகிப்போன பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். வாலிபர்களின் அட்டகாசமான செயற்பாடுகள் மற்றும் பாவனைகள் மிகுந்த அதிர்சிசியூட்டக்கூடியதாக மாறியுள்ளன. செல்போன் பாவனைகள் இளம் வாலிப ஆண் பெண்களிடம் ஒழுக்கச்சீரழிவுக்கு வழிகாட்டியாக ஆக்கப்பட்டுள்ளது.
அன்புக்குரிய பெற்றோர்களே! இது ஒரு அபாயகரமான சைக்கினை. முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் ஒழுக்கச் சீரழிவு வேகமாக பரவிவருகிறது.இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய குடும்ப அமைப்பு மற்றும் சமூக ஒழங்கு உடைந்து சிதறுண்டு விடும். அல்லாஹ்வின் தண்டனையும் இறங்கிவிடும். எனவே இச்சீரழிவுகளை தடுத்து நிறுத்தி இளம் சமூகத்தை பண்படுத்தி வழிநடாத்தும் பொறுப்பை பற்றி முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். பள்ளிவாசல் கதீப்மார்கள் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் தங்கள் களத்தை குத்பா மிம்பர்களை பயன்படுத்தவேண்டும் கல்வியை எமது பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும். அதைவிட ஈமான் பற்றிய தெளிவையும் மறுமை பற்றிய அறிவையும் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் விடயத்தில் விழிப்பாக இருங்கள்.அனைத்தையும் இழந்த பின் கண்ணீர் விடுவதில் எந்த பலனுமில்லை. எனவே பிள்ளைகள் சகவாசம் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் போய்வரும் இடங்கள் தூங்கும் நேரங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துங்கள். ஒளிவு மறைவின்றி பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள். ஈமானுக்கு பாதகமான எச்செயலும் கூடாது என்ற அறிவுரையை மனதில் பதிய வையுங்கள். இன்ஷாஅல்லாஹ் உங்கள் முயற்ச்சி வெற்றியளிக்கலாம். ஷஷநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புத்தாரிகள் உங்கள் பொறுப்பை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் என நபி(ஸல்)கூறினார்கள்.(நூல்:புகாரி)
வெளியீடு:
இம்தியாஸ் ஸலபி

No comments:

Post a Comment