Wednesday, 9 January 2013

PDF கோப்பிலிருந்து Ms-Word கோப்பாக மாற்றம் செய்ய


நாம் அன்றாடம் படிக்கும் மென்னூல்கள் பெரும்பாலும் PDF கோப்பு வடிவத்திலேயே இருக்கும். pdf கோப்புகளில் உள்ளதை நம்மால் படிக்க மட்டுமே முடியும். அதிலுள்ளவைகளை நம்மால் வேர்ட் கோப்புகளைப் போன்று மாற்றம்(Edit) எதுவும் செய்ய முடியாது.
சிலநேரங்களில் PDF கோப்புகளில் உள்ள தகவல்கள் நமக்கு வேர்ட் டாகுமென்ட் கோப்புகளாக வேண்டும் என நினைக்கலாம். மேலும் அதில் பதிந்திருக்கும் தகவல்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் நமக்கு இந்த மென்பொருள் உதவிகரமாக இருக்கும்.
மென்பொருளின் பெயர்: PDFZilla
PDFZilla என்ற இம்மென்பொருளைக் கொண்டு 1. PDF to Word ஆகவும், 2. PDF to RTF கோப்பாகவும், 3.  PDF to TXT கோப்பு வடிவிலும் , 4. PDF to Images ஆகவும் , அதாவது படங்களாகவும் , 5. PDF to HTML ஆகவும் , 6. PDF to SWF கோப்புகளாகவும் (Flash File) கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும்.
இம்மென்பொருளை பயன்படுத்துவது மிக எளிது.
முதலில் இந்த இணைப்பில் சென்று மென்பொருளைத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன்

Tuesday, 8 January 2013

திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

சைவமா.. அசைவமா?

ஒரு படம் ஆயிரம் எழுத்துக்களுக்கு சமம் என்பார்கள். தெளிவான குறிப்புகளுடன் படங்களும் சேரும் போது, படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ளுதல் இன்னும் எளிமையாகின்றது. சமையலில் அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் பலர், இங்கே அறுசுவை நேயர்களுக்காக பல உணவுகளைத் தயாரித்து காண்பிக்கின்றனர். செய்முறையின் ஒவ்வொரு கட்டமும் படமாக்கப்பட்டு, அவற்றிற்கான விளக்கங்களுடன் தினம் ஒரு புதுக் குறிப்பு அறுசுவையில் வெளியாகின்றது. இதுவரை வெளியான குறிப்புகள் அனைத்தும் இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் தேவையானப் பொருட்களின் அளவை கூட்டவோ, குறைக்கவோ விரும்பினால், ஒரே விகிதத்தில் அனைத்துப் பொருட்களின் அளவிலும் மாற்றம் செய்யவும்.
தலைப்புவழங்கியவர்கருத்துகள்உணவு வகை
கத்தரிக்காய் வதக்கல்kanimozhi.n(3)கறிவகை
பீட்ரூட் பிரியாணிVanitha Vilvaar...(5)சாதம்
ஹஜ்ஜீர் பணியாரம்halilafarveen(4)இனிப்பு
கமலா தோல் ஊறுகாய்musi(8)ஊறுகாய்
சுவிஸ் சார்ட் பொரியல்uk5mca(4)பொரியல்
கேரட் பனானா மஃபின்ஸ்Vanitha Vilvaar...(9)கேக்
பருத்துறை வடைlalithambiga(12)காரம்
கொடித்தோடை சம்பல்imma(11)சிறப்பு உணவு
கப்சா (அரேபிய உணவு)rasia_nisrina(9)சாதம்
ப்ரான் மொயிலிvithiyabaskaran(7)இறால்
மட்டன் பிரியாணிhalilafarveen(25)சாதம்
கத்தரி மாங்காய் பாஜிuk5mca(18)மசாலா
வெனிலா கேக்Vanitha Vilvaar...(23)கேக்
மெதுவடைswarna vijayakumaar(31)வடை போண்டா
முட்டை குழம்புmusi(23)குழம்பு
ஆம்பூர் சிக்கன் பிரியாணிshabana aynudeen(23)சாதம்
பூண்டு மிளகு குழம்புshamina aziz(29)குழம்பு
நானஹத்தாhalilafarveen(33)பிஸ்கட்
பூசணிக்காய் சாம்பார்Vanitha Vilvaar...(14)சாம்பார்
ஈஸி இட்லி பொடிuk5mca(24)பொடி
குடைமிளகாய் ரைத்தாmusi(33)பச்சடி
மொச்சைக்கொட்டை குழம்புhalilafarveen(27)குழம்பு
வெஜிடபுள் புலாவ்shamina aziz(29)சாதம்
பட்டர்நட் ஸ்குவாஷ் கூட்டுuk5mca(22)கூட்டு
டேட்ஸ் மஃபின்ஸ்Vanitha Vilvaar...(18)கேக்

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

தர்ஹா மாயை?

இன்றைய முஸ்லிம்கள் பெரும் தொகையினர் தர்கா மாயையில் சிக்கி கத்தம் பாத்திஹா, மெªலூது, கந்தூரி போன்ற சடங்குகள் என்று மூழ்கியுள்ளனர். தர்ஹா என்ற பெயரில்  இறந்தவர்களின் அடக்கஸ்த்தலங்கள் இல்லாத ஊரே இல்லை என்ற அளவுக்கு முஸ்லிம்கள் தர்ஹாக்களை கட்டி நிரப்பி இருக்கிறார்கள். ஒரு சில ஊர்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தர்ஹாக்கள் இருப்பதையும் காணலாம். அதே போல் மாதம் ஏதாவது ஒரு அவுலியாவின் பெயரால் மெªலூதோ, பாத்திஹாவோ ஓதத் தவறுவதில்லை.
    இஸ்லாமிய மாதங்களை நபி (ஸல்) கற்றுத் தந்த  முறைப்படி  நமது பெண்கள் சொல்லுவதில்லை. மாறாக ரசூலுல்லாஹி மெªலூது பிறை, அப்துல் காதிர் ஜீலானி மெலலூது பிறை, நாகூரார் மெªலூது பிறை என்று சரளமாக கூறும் அளவிற்கு முஸ்லிம் பெண்களிடம் தர்ஹா மோகம் மலிந்து காணப்படுகிறது.
    இதற்கு காரணம் முல்லாக்கள் தங்களின் சுய நலம் காரணமாக முஸ்லிம் பெண்களை படிப்பறிவு இல்லாமல் ஆக்கியதுதான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? பெண்களுக்கு நாலு எழுத்து எழுதத் தெரிந்தால் காதல் கடிதம் எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தி பெண்களை படிக்காத மக்களாக ஆக்கிவிட்டார்கள். அவர்களின் உள்நோக்கம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் இருந்தால் தான் மூடச்சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு மதி மயங்கச் செய்து அவை மூலம் கை நிறைய பொருள் திரட்டலாம் என்பதே.

Saturday, 5 January 2013

குழந்தைகளை அடிக்கலாமா? (2) ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டும்

பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.
 ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் 'வளர்த்திருக்கிறதைப் பார்' என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?
கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள்.இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.
என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?

குழந்தைகளை அடிக்கலாமா? (1) ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டும்

[ ஒரு சிறுமியை அவள் தாய், 'நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்' என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும்.
இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள்,குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன.
நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம்.]
படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?

Tuesday, 1 January 2013

பழி சுமத்தும் இழி செயல்

மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.
இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

 மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.
புறம் என்றால் என்ன?
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

மண்ணறை விசாரணை!


மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது.
மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!
மறுமையின் முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம்.