Saturday, 21 July 2012

ரமலானும் ஈமானும்……



அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்: ”யார் ரமலானில் நம்பிக்கையுடனும்  நன்மையை எதிர் பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” நூல் : புகாரி 1901

இன்று நம்மில் ஒவ்வொருவரும் வருடந்தோறும் நோன்பு வைக்கிறோம். ஸஹர் நேரத்தில் உணவு உண்கிறோம். பகலில் ஒரு மிடரு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு வைக்கிறோம். ஆனால் நம்பிக்கையோடு நோன்பு வைக்க வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்களே; எந்த மாதிரி நம்பிக்கையை ஒரு விசுவாசி வைக்க வேண்டும்? அந்த நம்பிக்கை நம்மிடம் உண்டா?ஷஅபான் மாதம் நம்மைவிட்டு விடைபெறும் போது நம்முடைய உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சிஊடுருவுகிறது. நோன்பு முடிந்தால் பெருநாள் அப்பொழுது புத்தம் புதிய ஆடைகளில் நாம் வலம் வரலாம். நாவிற்கு சுவையூட்டும் ஆகாரங்கள் உண்ணலாம் என்ற ஆனந்தம் தோன்றக்கூடாது. மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

”ரமலான் மாதம் வந்து விட்டால்சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். நூல் : புகாரி 1898இ 1899

இந்த நம்பிக்கை நம்மிடம் வேண்டும்இ நமது குழந்தைகளிடம் நாம் ”சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் வருகிறது. அந்த சுவனத்தில் பூஞ்சோலைகள்இ நீரருவிகள்இ வித விதமான மலர்களுடன் கூடிய பழங்கள்இ முத்துக்களும் பவழங்களும் பதிக்கப்பட்ட இருக்கைகள் போன்றவற்றை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான். அவனுக்கு பிரியமானவர்களாக நாம் மாறினால் அவற்றை அல்லாஹ் நமக்கு பரிசாக வழங்குவான்” என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

சதா கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்,காலத்தை வீணடிக்கும் இளைஞர், இளைஞிகளிடம் ”ஷைத்தான்கள் விலங்கிடப்படும் ஒரு மாதம் நமக்கு வர உள்ளது. வீணாய்ப்போகும் காரியங்களில் நேரத்தை வீணடிக்காமல் அல்லாஹ் ஷைத்தான்களுக்கு விலங்கிடும் போது இந்த ரமலானிலிருந்து ஷைத்தானியத்தனமான காரியங்களிலிருந்து நீங்களும் விலகியிருங்கள்” என்று நாம் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அதே போல் இல்லங்களில் தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் நல் இல்லத்து மங்கையரிடம் ரமலானின் சங்கையை எடுத்துரைத்து அவர்களின் ஈமானை நாம் வலுப்படுத்த வேண்டும். இதெல்லாம் செய்வதற்கு முன்னால் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினராகிய நாம் அவருடைய பொன்மொழிகள் மீது அதீத நம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது நாம் ஈமானிய வலுவுள்ளோராக ஆவோம். இவ்வாறான நம்பிக்கை ஈமான் நமக்குள் தோன்றும் போது அதன்பிரதிபலிப்பாக நம்மிடம் நல்லமாற்றங்கள் நிகழ வேண்டும்.



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட வில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை. நூல் : புகாரி 1903

சென்ற வருடம் நான் வைத்தது நோன்பா? அல்லது வெறும் பட்டினியா? நாமே கண்டு கொள்ளலாம். கடந்த ரமலான் முடிந்தது.அதன்பின் 11 மாதங்கள் உருண்டோடிவிட்டன. கடந்த நோன்பில் மது பானம்,சூதாட்டம், சினிமா, சிகரெட், அடுத்தவரின் பொருளாதாரம், விபச்சாரம்சம்பந்தமான காட்சிகள் மற்றும் செயல்கள் ஹராமாக லி அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய காரியமாக எனக்குத் தோன்றியது. இதோ இந்த ரமலான் வரை அவற்றை ஹராமாகவேபார்க்கிறேன் என்றால் நான் நோன்பு வைத்தது உண்மையே. அதே போல தொழுகை,திக்ர்,தான தர்மங்கள்,பிறர் நலன் பேணுதல் இன்னும் பல செயல்கள் அல்லாஹ்வுக்கு பிரியமான நன்மைகளைப் பெற்றுத்தரும் காரியமாக இருந்ததால் நான் செய்தேன். இதோ இதைப்படிக்கும் வரை நான் செய்து கொண்டு இருக்கிறேன் என்றால் நான் வைத்தது நோன்பு. இல்லையென்றால்…

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

”நீங்கள் உண்ணாமல், பருகாமல், இருந்ததில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை”

வேண்டாம்: அல்லாஹ்வுக்கு திருப்தியில்லாத காரியம் நமக்கு வேண்டாம்..கடந்தவை கசப்பாகஇருந்தாலும் இருக்கும் காலத்தை இன்ஷாஅல்லாஹ் இனிப்பாக மாற்றுவோம்.

ரமலான் வந்துவிட்டால் பூமியில் மனிதர்களுக்கிடையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதே காலத்தில் வானத்தில் அல்லாஹ்வின் புறத்திலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. என்ன அந்த மாற்றம்?

இவ்வுலகில் ஈமானால் உள்ளத்தை நிரப்பியவர்கள் அல்லாஹ்வின் கட்டளையான ரமலான் நோன்பு நோற்கின்றனர். முற்பகல் நேரத்தில் இருந்து மாலைவரை நோன்பாளிகளின் வாயில்ஒருவித வாடை வீசும். அதைப் பெருமானார்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது ”முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ் விடத்தில் கஸ்தூரியைவிட சிறந்ததாகும்”நூல் : புகாரி 1904

கோடிக்கணக்கான மனிதர்கள் இவ்வுலகில் மூச்சுக்காற்றை வெளியேற்றினாலும் நோன்பாளியின் மூச்சுக் காற்றுக்குத்தான் அங்கேமதிப்பு.கஸ்தூரி என்ற நறுமணப் பொருளைவிட சிறந்த நறுமணப் பொருளாக அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். நோன்பாளியின் மூச்சுக்காற்று வானலோகத்தில் நறுமணமாக வலம் வரும் என்ற நம்பிக்கையுடன் நோன்பு வைப்பவர்கள் நிச்சயம் விரும்புவார்கள். இவ்வாறு ஒரு விசுவாசி நம்பிக்கையோடு நோன்பு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் அளப்பரியது.ஒரு அடியான் பாவமான எல்லாக் காரியங்களையும் விட்டு விலகி அல்லாஹ் என்னைக் கண்காணிக்கிறான். என்னை மறுமையில் விசாரிப்பான் என்று விளங்கி வாழ்வதற்கு ரமலானுடைய நோன்பு மிகவும் உதவியாக உள்ளது. அல்லாஹ்கூறுவதாக நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்: ”எனக்காக நோன்பாளி தமது உணவையும்இ பானத்தையும்இ இச்சையையும் விடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். (என்னிடம்) ஒரு நன்மை என்பது அதைப்போன்று பத்து மடங்குகளாகும்” நூல்: புகாரி 1894

எல்லா நல்லறங்களுக்கும் நன்மையை நிர்ணயம் செய்து அதை மலக்குகள் மூலமாக பதிவு செய்யும் அல்லாஹ்  நோன்புக்கு மட்டும் தானே அதற்குரிய நன்மைகளை நிர்ணயிக்கிறான் என்ற நம்பிக்கையுடன் நோன்பு நோற்க வேண்டும். நாம் வாழும் இவ்வுலகம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அனைவரும் எழுப்பப்படுவோம். நரகவாசிகள் அதன் காவலாளிகளால் அழைக்கப்பட்டு  நல்லோர்கள் ஒன்று சேர்ந்து நிற்கும் நாளில் சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்ற வாசல் உண்டு. அதன் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறுயாரும் நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே ரய்யானில் நுழையும் நம்பிக்கையுடன் நோன்பு வைக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் விட மேலான லி சிறந்த லி நன்மை ஒன்று உண்டு. அதற்காகவே நாம் நோன்பை இந்த ரமலானின் சிறப்புக்கு உரிய ஒன்றாக ஆக்கலாம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். ”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி உண்டு. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி மற்றொன்று நோன்பின் காரணமாக தன் இறைவனை அடியான் சந்திக்கும் நிகழ்ச்சி” நூல் : புகாரி 1904

அந்த நிகழ்வை எந்த வார்த்தைகளைக் கொண்டும் யாராலும் வர்ணித்துக் கூற முடியாது. சொர்க்கமும்இ நரகமும் நெருக்கமாகக் கொண்டுவரப்பட்டுஇ நபிமார்களின் சிபாரிசிற்குப் பிறகுஇ வானவர்களின் அணிவகுப்புக்கு மத்தியில் மனிதர்களுக்கிடையே நீதமாக தீர்ப்பளிக்கப்பட்ட பின்பு அல்லாஹ்வோடு நோன்பாளிகள் சந்திப்பு என்ற செய்தியே மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான். இவற்றின் மீதெல்லாம் நம்பிக்கைவைத்து நன்மையை எதிர்பார்க்கும் நோன்பாளிகளுக்கு நபி(ஸல்) அவர்களின் அடுத்த நற்செய்தி முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். எனவே பாவங்கள் மன்னிக்கப்பட்டு நம்மை பரிசுத்தப்படுத்தும் ரமலானை அமல்கள் மூலம் சிறப்பாக்குவோம். மறுமையில் நாம் அனைவரும் வெற்றிபெறுவோம். இன்ஷாஅல்லாஹ்.

No comments:

Post a Comment