Sunday, 31 March 2013

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்க ு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்...!

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...!

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

Sunday, 17 March 2013

Dr. Zakir Naik talk about Hijab in English

Hijab for Muslim Men முஸ்லிம் ஆண்களுக்கான ஹிஜாப்

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!திருமதி. சகுந்தலா நரசிம்ஹன்

 திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.
சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!
சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.
மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.
"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.
எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!.

Monday, 4 March 2013

சினிமாவின் வளர்ச்சியும் சுன்னாவின் வீழ்ச்சியும் !

நவீனம், நாகரீகம் இன்று மனித வாழ்வில் சொல்ல முடியாத அளவுக்கு ஊடுருவிக் காணப்படுகின்றது. இதில் ஜாதி, இன, மத பேதம் கடந்து அதற்கும் அப்பால் சென்று கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பொருளாதாரத்திற்கும், பொழுது போக்கிற்கும், விளம்பரங்களுக்கும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வெற்றிக் கொடி கட்டிப் பறக்கும் (?) ஓர் ஷாத்தானாக சினிமா உலாவருகின்றது.
இன்றைய உலகில் சினிமா துறையில் முஸ்லிம் அல்லாத அந்நியர்களுக்கு ஓர் சிறந்த அம்சமாகத் திகழும் இந்த சினிமா இன்று அதிகமான முஸ்லிம்களையும் நவீனத்தில் வீழ்த்தி சினிமாவிலும் இழுத்து இஸ்லாத்தை இழிவாக்கி அழிக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதை அறியாத எமது இஸ்லாமிய உள்ளங்களும் பிரபல்யமடைந்துள்ள சினிமா எனும் ஷாத்தானின் வலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். நபி வழியைச் சுமந்து புனித தீனுல் இஸ்லாத்தை மேலோங்கச் செய்த காலத்தையும் சேவையையும் மறந்து விட்டு நபி வழிக்கு நிகரானதாக ஆக்கிவிட்டார்களா என எண்ணத் தோன்றுகின்றது.
அன்றைய ஸஹாபாக்கள் நபிவழிக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அந்தளவுக்கு இன்று சினிமாவுக்கு எமது முஸ்லிம்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகளைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.