நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.
மார்க்கத்தில் போதிய தெளிவு இல்லாமை, சினிமா மற்றும் கேபிள் டி.வி.க்கள் இவற்றின் முலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது, ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடித்து வருவது மிகவும் வருத்தத்தற்குரிய விஷயமாகும். இன்று இத்தகைய தீய செயல்கள் பிரபலமான பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள் போன்ற மீடியாக்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நம்மை நோக்கி வருகின்றன.
மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர முஸ்லிம்கள் ஏன் கல்லூரிகளுக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு அவற்றை உண்மை என நம்பி உயிரினும் மேலான தங்கள் ஈமானை இழந்து விடுகின்றனர். இவ்வகையான ஜோதிடங்கள் நம்மிடையே பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் சில: -