சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. கல்வி தொடர்பாக முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள, www.kalvimalar.com இணைய தளத்தைப் பார்க்கவும். |
Applications are invited for the IDB Scholarship from meritorious but financially needy Muslim students granted admission or intend to seek admission in the academic session 2010-2011 in the first year of degree course in the fields of Medicine and Engineering, (all branches) including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law. Applicants for Bachelor Courses in B.B.A. and LL.B. should have scored minimum 60% marks in English and optional/elective subjects in 10+2 or Qualifying Examination.The scholarship is offered as an Interest-Free Loan to be refunded in installments after completion of the graduation. The applicants should have passed SSC (10+2) with minimum 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics . Application for can also be downloaded from our websiteswww.sit-india. org or www.metdelhi. orgApplication form duly completed in all respects with necessary copies of required documents should reach the MUSLIM EDUCATION TRUST E 3 Abul Fazal Enclave,Jamia nagar, New Delhi 110025 latest by 25th August 2010. |
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி விளையாட்டு – தங்கும் விடுதி2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி, 779 அண்ணா சாலை , எல்.ஐ.சி. எதிரில் சென்னை 600 002 போன் : 2841 2742பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன், ஏழை மாணவர் இல்லம், தொலைபேசி : 2848 1344 |
No comments:
Post a Comment