Tuesday, 25 March 2014

தொழுகையின் சிறப்பும் அதனை விட்டவரின் நிலையும்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9


குழந்தைகளுக்கு தொழுகை
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு  அத்தொழுகை பிரகாசமாகவோ,  ஈடேற்றமாகவோ  இருக்காது.  (மாறாக) அவன் மறுமை  நாளில் காரூன், ஃபிர்அவ்ன்,  ஹாமான்,  உபைபின் கஃப்  ஆகியோருடன்  இருப்பான்  என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

Wednesday, 19 March 2014

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:


சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

பரீட்சை

Sunday, 16 March 2014

அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது

அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம் : இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பையும் போக்கவல்லது

ஆப்பிளைக்கூட வெறுக்கும் பெண்கள் சிலர் உண்டு ஆனால் கொய்யாப்பழத்தை வெறுப்பவர் யாரும் இருக்கமாட்டார் இதை படித்த பிறகாவது இதுவரை நாம் அறியாத ஒரு அபரீத மருத்துவ சக்தி கொய்யாபழத்தில் உள்ளது, பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது உடலில் ஏற்படும் அசதி, சோர்வு, மற்றும் உடல்வலிகளை போக்கும் அருமருந்து, பல நாட்டு மருத்துவர்கள் இந்த கொய்யாபழத்தின் அபரீத மருத்துவ குணத்தை தெரிந்தும் பொதுவாக சொல்ல மறுக்கிறார்கள், அல்லது முக்கியமானவர்களிடம் மட்டும் சொல்லி அதை வெளியே சொல்லாமல் இருக்கவும் சொல்கிறார்கள்,

திரைப்படங்களில் வெந்தயம் போன்றவற்றை தருவது போல் காட்டி வெந்தயம் மாதவிடாய காலங்களில் நல்ல மருந்து என்று நம்பவைக்கிறார்கள், வெந்தயமும் நல்ல மருந்துதான் ஆனால் வெந்தயம் கூழ்மாகி உடலுக்குள் சென்று அதன் வேதிவினைகள் உயிற்சக்திகளாக மாறி உடலுக்கு நலம் தரும் மருந்தாக மாறுகிறது, ஆனால் கொய்யாப்பழம் அப்படி அல்ல. சாப்பிட்ட சில மணித்துளிகளில் இருந்தே தனது பணியை ஆரம்பிக்கிறது.

மாதவிடாய் காலங்களில் ஏன் அசதி, சோர்வு, உடல் வலி போன்றவைகள் வருகிறது?

Tuesday, 4 March 2014

பொறுமையான பேச்சு

அண்டை வீட்டாரின் உரிமைகள் / பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேண வேண்டிய பண்புகள்

மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன ஆறுதல் அடைவதற்கும் மிகப் பெரிய பாலமாக அமைந்துள்ளன. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறன. இந்த உறவுகளை நல்ல முறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்ல நிலையில் வாழ்வான்.
இந்த உறவு முறைகளில் அண்டை வீட்டாருடன் ஏற்படும் உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்ல முறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும். திருக்குர்ஆன், நபிமொழிகளில் அண்டை வீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும்,உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)

அண்டைவீட்டாரின் உரிமைகள்

பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேண வேண்டிய பண்புகள்

ஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் என்ன என்பதையும் பார்ப்போம்.

தொல்லை தருதல்

வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரீ 5187

அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.