Saturday, 21 September 2013
Deathbed of ABDULLAH ibn MASÚD
Islam gives great importance to rights of Parents
[♥] ISLAM is not Just a religion but its a complete way of life. It guides us about all matters of life. Islam gives great importance to rights of Parents.
Our Parents faces so much difficulties for us when we where small. So when they grow old and we are Young its our duty to look after them. treat them respectfully, Obey them, don,t harm them,make dua (Prayer) for them [♥] ....(nida)
Labels:
தந்தையர்,
தாய்,
தாய் தந்தையர்,
பெற்றோரை,
பெற்றோரை பேணி நடப்போம்,
பெற்றோர்
குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?
பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!

Wednesday, 11 September 2013
இரண்டு வயது உள்ள குழந்தையின் மார்க்க அறிவை பாருங்கள்!
இந்த குழந்தை போன்று எல்லா குழந்தைகளும் மார்க்கத்தில் ஆர்வம் வருவதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் தன் பிள்ளைகளின் மீது .
எல்லா பிள்ளைகளும் பிறக்கும் பொது நல்ல பிள்ளைகள் தான் ,ஆனால் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்குது அவர்களின் எதிர்காலாம் !
எல்லா பிள்ளைகளும் பிறக்கும் பொது நல்ல பிள்ளைகள் தான் ,ஆனால் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்குது அவர்களின் எதிர்காலாம் !
பெற்றோரை பேணுவோம்! நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்!
ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள்
தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி
“அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்:
அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா
தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில்
அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதிஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல்குர்ஆன் 31:14
Labels:
தந்தையர்,
தாய்,
தாய் தந்தையர்,
பெற்றோரை,
பெற்றோரை பேணி நடப்போம்,
பெற்றோர்
பெற்றோர்களுக்கு பணிவிடை
பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்
(رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ )
அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவன் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4628)
( الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ)
சொர்க்க வாயில்களில் சிறந்த வாயில் தந்தை ஆவார். நீ விரும்பினால் அந்த வாயிலை பாதுகாத்துக்கொள்! அல்லது வீணாக்கிவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1822, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான்)
( عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا)
அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்;. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)

தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்
ஒரு வீடு என்பது
மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும்
பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித
மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
பெற்றோர்
அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது.
‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ சில
இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் – தந்தை உறவு பற்றி
இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.
தாய்க்கு முதலிடம்:
‘மனிதர்களுள்
யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா.
‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே
கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’
என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க
‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)
ஒரு
குழந்iயின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும்
தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன?
திருக்குர்ஆன் கூறுகிறது: ‘அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று
சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச்
சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள்
ஆகின்றன.’ ( அல் குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு
தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின்
பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம்
வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம்
மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின்
விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து
பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய
தியாகம்!
குழந்தைக்கு
நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல,
நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய்,
தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே
நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி
இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள்
என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு
இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!
Labels:
தந்தையர்,
தாய்,
தாய் தந்தையர்,
பெற்றோரை,
பெற்றோரை பேணி நடப்போம்,
பெற்றோர்
அல்லாஹ்:- பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்
அல்லாஹூ
ஸூப்ஹானஹூ வதஆலா பெற்றோர் இருவருக்கும் நன்மை செய்யும்படி மனிதர்களுக்கு
உபதேசம் செய்திருக்கிறான். இதற்கான காரணத்தையும் வல்ல நாயன்
கூறியிருக்கிறான். இது குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:
நாம்
மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி
வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம்
கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி
மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன்
பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல்
இருக்கிறது.” (அத்தியாயம்: 31, ஸூரத்து லுக்மான், வசனம்: 14). வசனம் 15 ல்
பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
ஆனால்
இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்
கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக
– பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன
செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”
(ஸுரத்து லுக்மான், வசனம்: 15).
Labels:
தந்தையர்,
தாய்,
தாய் தந்தையர்,
பெற்றோரை,
பெற்றோரை பேணி நடப்போம்,
பெற்றோர்
பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்
இன்றைய
கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான
காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம்
கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும்
நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான்
இதற்குக் காரணம்.
தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .
பத்து
மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த
தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில்
கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன்
இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம்
என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை
நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து
தன்னை ஆளாக்குகிறார்கள் .
அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.
அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.
அப்படி
சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில்
லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .
நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?
Labels:
தந்தையர்,
தாய்,
தாய் தந்தையர்,
பெற்றோரை,
பெற்றோரை பேணி நடப்போம்,
பெற்றோர்
பெற்றோரை புறக்கணிக்காதீர்கள், அல்லாஹ் உங்களை புறக்கணிப்பான்
முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.
உம்முடைய
ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று
விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய
வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது
அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை
(நோக்கி) ‘சீ ‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் .
அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)
“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)
“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)
46:15. மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான்.
தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன். (29:8)மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.
மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)
How many Muslim's are like this ?
Labels:
அழிவுப் பாதை,
அறிவுரைகள்,
வழிகேடு பித்அத்,
விழிப்புணர்வு,
வீடியோ
The Power Of Words BISMILLAH ALLAHU AKBAR
வுழு செய்யும் முறையை சரியான முறையில் கற்றுக்கொள்வோம்.
இது எம் வழியல்ல. இதுதான் நபிவழி.
முஸ்லிமுக்கும் காபிருக்கும் வித்தியாசம் தொழுகை.மறுமையில் முதல் கேள்வி தொழுகை பற்றியது.வுழு இன்றி தொழுகை இல்லை..எனவே வுழுவை சரியாக கற்றுக்கொள்வோம்இது வரை செய்தவை அறியாமலாயின் அல்லாஹ் எம்மை மன்னிக்க போதுமானவன். அதற்குரிய ஆயுதம் தௌபா செய்த குற்றத்துக்கு பரிகாரம் தேடுவது)அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையை (பாத்திரத்தில்) நுழைதது தம் தலையைத் தடவினார். இரண்டு கையையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.
Labels:
அறிவுரைகள்,
உபதேசங்கள்,
வீடியோ
Monday, 2 September 2013
குர்ஆன் - பொருள் அட்டவனை
1. அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படுதல்
2. நம் அருகில் சமீபமாக நெருங்கி இருப்பவன்
3. அவன் நிலைத்திருப்பவன்
4. அவன் நீதி வழங்குபவன் அநீதி செய்யாதவன்
5. அவன் வாக்குறுதி மாறாதவன்
6. அவன் மன்னிப்பாளன், பிழைபொறுப்பவன்
7. அவன் அனைத்து பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்
8. அவன் தீயவர்களுக்கு வழங்கும் நரகம்,நரகவாதிகளின்அவலம்
9. அவன் நல்லோருக்கு வழங்கும் சுவனபதியும்,அதன் சிறப்பும்
10. அவன் யாவற்றையும் அறிபவன், பூரண ஞானமுடையவன்
11. அவன் கிருபையாளர்களிலெல்லாம் மேலானகிருபையாளன், மன்னிக்கும் கருணையாளன், யாவரையும் மிகைப்பவனும் வல்லமை மிக்கவனுமான கருனையாளன்
12. அவனே வணக்க வழிபாட்டுக்கு உரியவன்
13. அவனே படைத்து பரிபக்குவப்படுத்துபவன் பாதுகாப்பவன்
14. அவனே யாவரையும், யாவற்றையும் படைப்பவன் உருவாக்குபவன்
15. அவனது அருட்கொடைகள், பாக்கியங்கள், நற்பேறுகள்
16. அவனது அழகிய திருநாமங்கள்
17. அவனது அருள்பற்றி நம்பிக்கை இழத்தல் கூடாது
18. அவனையே யாவும், யாவரும் துதிசெய்கின்றன. அவனையே துதிப்பீர்களாக
19. அவனுக்கு படைப்பது எளிது
20. அவனுக்கே புகழ் அனைத்தும்
21. அவனிடமே யாவும், யாவரும் மீளவேண்டும்
22. அவனிடமிருந்து பாவிகளுக்கு வரும் வேதனை, தண்டனை, அழிவு ஆகியன

Subscribe to:
Posts (Atom)