Saturday 26 October 2013

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் 03

தொடர்ச்சி…..

5. பாவங்கள், தவறுகள், பிழைகள் ஆகியவற்றைச் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெறாதோரை முற்றாக ஏற்றுப் பின்பற்றுதல்.

ஷீயாக்கள் தங்களது இமாம்களைப் பாவங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகக் கருதி அவர்களை முற்று முழுதாக ஏற்றுப் பின்பற்றியதனால், தங்களுடைய இமாம்களின் சொல், செயல் அனைத்தையும் மார்க்கமாகக் அவர்கள் கருதினர். இதனால் உருவான பித்அத்கள் எண்ணிலடங்காதவை. ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்த பலரும்கூட தங்களது ஆன்மீக வழிகாட்டிகளையும் இமாம்களையும் மேற்குறித்த நிலையில் வைத்து நோக்க முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாகின என்பதை மறுப்பதற்கில்லை.


ஏனெனில், இத்தகையோர் தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முரணாக அமைந்த அனைத்தையும் வழிகேடாகக் கருதியது மாத்திரமல்ல, இஸ்லாத்தில் மூலாதாரங்களுக்கு அக்கருத்துக்கள் முரணாக அமைந்தாலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயங்கவில்லை. 'தக்லீத்' எனும் இமாம்களைப் பின்பற்றும் நிலையை இஸ்லாம் அனுமதித்தாலும், இத்தகைய போக்கை அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் அனுமதிக்கும் 'தக்லீத்' அமைப்பை விளக்கவந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி, ஒருவர் தான் பின்பற்றுகின்ற முஜ்தஹிதான இமாம், சரியான முடிவுகளைப் பெறும் ஆற்றல் படைத்தவராக இருப்பது போலவே பிழையான முடிவுகளுக்கும் வரக்கூடியவர் என்பதை அறிந்த நிலையில் அவரைப் பின்பற்றுவதை இஸ்லாம் அனுமதித்துள்ள 'தக்லீத்'என்றும், தனது இமாமின் கருத்துக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கின்ற நேரத்தில் தக்லீதை விட்டுவிட்டு ஹதீஸை ஏற்றுப் பின்பற்றுவோராகவும் அவர் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனால்தான் எல்லா இமாம்களும் தங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கின்றனர்.

6. ஷரீஅத்தில் சட்ட மூலாதாரமாகக் கொள்ள முடியாத ஒன்றை ஏற்றுச் செயற்படல்

கனவு, கராமத்துக்கள் போன்றன ஷரீஅத்தில் சட்ட மூலாதாரங்களாகக் கொள்ளப்பட முடியாதவைகளாகும். சிலர் இத்தகையவற்றை அடிப்படையாக வைத்து வெளியிட்ட கருத்துக்களினாலும் பல பித்அத்கள் உருவாகின.


7. சில ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டமை

மார்க்கத்தில் நூதனங்களைப் புகுத்த விரும்புவோர், குறிப்பாக கீழ்வரும் இரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி நல்ல செயல்களை (அவற்றுக்கு மார்க்கத்தில் ஆதாரங்கள் இல்லையெனினும்) அங்கீகரித்து வணக்கங்களாகக் கருதுவது பிழையானதல்ல என்று அன்றும் இன்றும் கூறிவருகின்றனர். அவ்விரு ஹதீஸ்களும் கீழ்வருமாறு:-

1 'எவர் ஒரு நல்ல வழிமுறையை உருவாக்குகின்றாரோ அவருக்கு அதற்குரிய கூலியும் இறுதி நாள் வரை அதனை எடுத்து பின்பற்றி நடப்போருக்கான கூலியும் கிடைக்கும்.'
(முஸ்லிம்)

2 'முஸ்லிம்கள் நல்லதாகக் கருதுகின்ற அனைத்தும் அல்லாஹ்விடத்திலும் நல்லதாகவே இருக்கும்.'
ஆதாரம்: அஹ்மத், அல்-பஸ்ஸார், அத்தபரானி, அல்- பைஹகீ)

உண்மையில், இவ்விரு ஹதீஸ்களும் எவ்வகையிலும் மார்க்கத்தில் புதியன புகுவதற்கு ஆதாரங்களாக அமையக்கூடியவையல்ல. எந்தவொரு நல்ல வழிமுறையாக இருந்தாலும், அதற்கு குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ ஓர் அடிப்படை இருத்தல் வேண்டும். ஒரு நல்ல வழிமுறை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தெரியாமற்போக முடியாது.


குர்ஆனிலோ ஸுன்னாவிலோ அது இடம்பெறாமல் இருக்கவும் முடியாது. எனவே, ஒரு நல்ல வழிமுறையை வகுக்கின்றபோது குர்ஆனையோ ஹதீஸையோ அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். இதுவே முதலாவது ஹதீஸுக்குரிய சரியான விளக்கமாகும். கீழ்வரும் ஹதீஸ்கள்கூட இவ்வடிப்படையிலேயே விளக்கப்படல் வேண்டும்.


'எவர் ஒரு நேர்வழியின் பால் அழைக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய கூலியும் அதனைப் பின்தொடர்ந்தவருக்குக் கிடைக்கும் கூலியும் கிடைக்கும்' (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், நஸாயி, திர்மிதி)

'ஒரு நன்மையான விடயத்தைக் காண்பித்துக் கொடுத்தவர் அதனைச் செய்தவர் போலாவார்.' (அல்-பஸ்ஸாhர்,அத்தபரானி).

இரண்டாவது ஹதீஸைப் பொறுத்தவரையில் அது ஒரு நபி மொழியல்ல. ஒரு ஸஹாபியான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (றழி) அவர்களின் கருத்தாகும். இக்கருத்தை கூறி, தீனில் ஒன்றைக் கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ உம்மத்தினருக்கு அவர் அனுமதி கொடுத்திருக்க முடியாது. ஏனெனில், இந் நபித் தோழர் மார்க்க விவகாரங்களில் சுயவிருப்பு வெறுப்புகளுக்கும் மனோ இச்சைக்கும் இடம்கொடுக்காதவர்.

உண்மையில், ஸஹாபாக்களினதும், பிற்கால முஜ்தஹித்களதும் இஜ்மாஃ எனும் ஏகோபித்த முடிவுகளின் தூய்மையை எடு

No comments:

Post a Comment