முன்மாதிரி முஸ்லிம்

 விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்
    முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
    உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான்  இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார். இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார். இது அவரது ஈமானைப் பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.
    வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
    இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)
    இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்
    உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார். மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார். அல்லாஹ், அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
     ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் எற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்அன் 4:65)
     ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக எற்று பூரணமாக அடிபணிவதாகும். இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது. இது தனி முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.
    தன் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை அறிவார்
    ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
    தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு விளைவுகளை எற்படுத்தினாலும் சரியே. அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார்; கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.
    அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்
    உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன் ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.
    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் ஆச்சரியமானதுதான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே. அவருக்கு மகிழ்ச்சி எற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் எற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.” (ஸஹீஹுல் புகாரி)
    இதற்குக் காரணம், முஸ்லிம் அல்லாஹ் விதித்த விதியை ஈமான் கொள்வது ஈமானின் முக்கியமான பகுதி என்பதை உறுதி கொண்டிருப்பதுதான். அவருக்கு எது கிடைக்க வேண்டுமென்ற விதி இருக்கிறதோ அது அவரை விட்டுத் தவறிவிடாது. எனெனில், அது அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்டது; அதை எதிர்கொள்வதை தவிர்த்திட முடியாது. அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்பவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மகத்தான நற்கூலியைப் பெற்றுக்கொள்கிறார். அல்லாஹ்விடம் ஈடேற்றமடைந்த, அடிபணிந்த மூமின்களின் பட்டியலில் இடம் பெறுவார்.
     இவ்வாறாக அவரது அனைத்து விஷயங்களும் நன்மையாகவே அமைகிறது. மகிழ்ச்சியில் உபகாரியான, மகத்துவமிக்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். துன்பத்தில் அல்லாஹ்வின் அணைக்கு அடிபணிந்து பொறுமையைக் கைக்கொள்கிறார். அல்லாஹ் விதித்ததை ஏற்று திருப்தி கொள்கிறார். இந்த இரு நிலைகளும் அவருக்கு மிக்க நன்மையானவையே. அல்லாஹ்வையே எதிர்நோக்குவார்
    சில சந்தர்ப்பங்களில் இறையச்சமும் பணிவும் அறிவாற்றலும் நிறைந்த மூஃமினுக்கு மறதியின் நிழல்கள் அவரது இதயத்தை மூடிக்கொள்ளும். அதனால் அவரது பாதங்கள் தடுமாறும், அல்லது இறையச்சமும் அறிவாற்றலும் நிறைந்த மூஃமினுக்கு சற்றும் பொருத்தமற்ற குறைகள் எதேனும் ஏற்படும். எனினும், அவர் வெகு சீக்கிரத்தில் தனது மறதியிலிருந்து மீண்டு, தடுமாற்றத்தை சரி செய்து, நிகழ்ந்த தவறுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வார். அஞ்சி மன்னிப்பு கோரியவராக அபயமளிக்கும் தனது இரட்சகனின் பாதுகாப்பின் நிழலில் எதுங்கிக் கொள்வார்.
    நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் உசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (அல்குர்அன் 7:201)
    அல்லாஹ்வின் நேசமும் அவனது அச்சமும் நிரம்பிய இதயத்தில் மறதி நீடிக்காது. அவனது ஏவலையும் நேர்வழியையும் புறக்கணிக்கும் இதயங்களில்தான் மறதி நீடிக்கும். அல்லாஹ்வுக்கு அடிபணிதல், மன்னிப்புக் கோருதல் மற்றும் தவறுகளுக்கு பச்சாதாபப்படுவதற்காக எல்லா நிலைகளிலும் உண்மை முஸ்லிமின் இதயம் விரியத்திறந்திருக்கும்.
    அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்
    முஸ்லிம், தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடவேண்டும். அவரது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும். மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டிவிடுகிறான்.” (ஸூனனுத் திர்மிதி)
     இந்நிலையில், முஸ்லிம் தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்தி எனும் தராசில் நிறுத்துப் பார்க்கிறார். அல்லாஹ்வின் திருப்தியின் தட்டு கனமானால் அதை ஏற்று திருப்தியடைகிறார். தராசின் தட்டு மறுபக்கம் சாய்ந்தால் அதை அலட்சியப்படுத்தி விடுகிறார். இவ்வாறே அவரது நேர்வழியின் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
     அவரது பார்வையில் நேரிய, நடுநிலையான பாதை தென்படுகிறது. எனவே அவர் பலவீனமான, பரிகாசத்திற்குரிய முரண்பாடுகளில் வீழ்ந்துவிட மாட்டார். ஒரு விஷயத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, மற்றொரு விஷயத்தில் முரண்படுதல்; சில நேரங்களில் ஹலாலாக ஆக்கிக் கொண்டதை மற்றொரு நேரத்தில் ஹராமாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் முஸ்லிமிடம் எற்படாது. ஏனெனில், அவர் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளவராவார். எனவே அவரிடம் இவ்வாறான முரண்பாடுகளுக்கு இடமில்லை.
    சிலர் மஸ்ஜிதுகளில் இறையச்சத்துடன் தொழுவார்கள். ஆனால் அவர்களை கடைவீதியில் வட்டி வாங்குபவர்களாக காணமுடிகிறது. அல்லது குடும்பம், கடைவீதி, கல்விக் கூடங்கள், சங்கங்கள் இவற்றில் எதிலுமே அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மாட்டார்கள். இதற்குக் காரணம் இம்மார்க்கத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையே.
     அவர்கள் ஒவ்வொரு செயலையும் தங்களது திருப்தியின் தராசைக் கொண்டு அளவிடுகிறார்கள். இதனால்தான் அவர்கள் முஸ்லிம்களிடையே காணப்பட்டாலும் பெயரைத் தவிர இஸ்லாமில் அவர்களுக்கு எந்தப் பங்குமிருப்பதில்லை. இது தற்காலத்தில் முஸ்லிம்களை எதிர்நோக்கியுள்ள மாபெரும் சோதனையாகும்.
    கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவார்
    உண்மை முஸ்லிம், இஸ்லாமின் அனைத்து கடமைகளையும் அலட்சியம், மறதி மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி பூரணமாக அழகிய முறையில் நிறைவேற்றவேண்டும். அவர் ஐந்து நேரத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவார். எனெனில், தொழுகை மார்க்கத்தின் தூணாகும்; அமல்களில் மிக உன்னதமானதாகும். அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார். அதை வீணடிப்பவர் மார்க்கத்தைத் தகர்த்தவராவார்.
     இப்னு மஸ்வூது(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், “அமல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “தொழுகை, அது உரிய நேரத்தில் (நிறைவேற்றுவது)” என்று கூறினார்கள். “”பிறகு என்ன?” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “பெற்றோருக்கு உபகாரம் செய்தல்” என்று கூறினார்கள். “பிறகு என்ன?” என்றேன். “அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
     தொழுகை சிறப்படையக் காரணம் அது அடியானுக்கும் அவனது இரட்சகனுக்குமிடையே தொடர்பை எற்படுத்துகிறது. தொழுபவர் உலகின் அனைத்து ஈடுபாடுகளிலிருந்தும் தன்னை துண்டித்துக் கொள்கிறார். தனக்குரிய அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறார். தொழுகையின் மூலம் நேர்வழியையும் உதவியையும் பெற்றுக் கொள்கிறார். நேர்வழியின் மீது உறுதியாக நிலைத்திருப்பதை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்.
    தொழுகை, சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமலாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது முஸ்லிம் தனது மறுமை பயணத்திற்காக இறையச்சம் என்ற கட்டுச் சாதத்தைத் தயார் செய்வதற்குரிய செழிப்பு மிக்க வழியாகும். அது தூய்மையான மதுரமான நீரூற்றாகும். அந்தத் தூய்மையான நீரால் முஸ்லிம் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்.
    அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: “உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஒடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் எதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “எந்த அழுக்கும் (அவர் மீது) இருக்காது” என நபித்தோழர்கள் கூறினர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக்கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஐந்து நேரத் தொழுகையை தொழுபவர், உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஒடும் அழமான ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை குளிப்பவரைப் போன்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கூறினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான்:
    பகலின் இரு முனைகளாகிய காலை, மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள்! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். (இறைவனை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். (அல்குர்அன் 11:115)
    “”அம்மனிதர் (இந்த வசனம்) எனக்கு மட்டுமா?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “எனது உம்மத்தினர் அனைவருக்கும் (பொருந்தும்)” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “பெரும்பாவங்கள் நிகழாதவரை ஐந்து நேரத் தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். அதுபோன்றே ஒரு ஜுமுஅவிலிருந்து மறு ஜுமுஅவரை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்: “”எந்தவொரு முஸ்லிம் அவருக்கு பர்ளான தொழுகை கடமையாகும்போது அழகிய முறையில் உளூச்செய்து உள்ளச்சத்துடன் அதன் ருகூவுகளைப் பேணித் தொழுவாரானால் அது பெரும்பாவங்களைத் தவிர அவர் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாகும். இது எல்லா காலத்திற்கும் உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகளை விவரிக்கும் நபிமொழிகளும், சம்பவங்களும், தொழுபவர்கள் அடைந்து கொள்ளும் நன்மைகளும் ஏராளம். அவை அனைத்தையும் குறிப்பிட இங்கே பக்கங்கள் போதாது. முடிந்தளவு இறையில்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் முதல் ஜமாஅத்தை அடைந்துகொள்ள இறையச்சமுடைய முஸ்லிம் பேராவல் கொள்ளவேண்டும்.

கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவார்
    முஸ்லிம் ஜகாத்தை நிறைவேற்றுவார். ஜகாத் அவர் மீது கடமையானால் அதைஇறையச்சத்துடனும் நேர்மையுடனும் கணக்கிட்டு, மார்க்க நெறியின்படி உரியவர்களுக்குக் கொடுத்து நிறைவேற்றுவார். தொகை ஆயிரக்கணக்கில்,இலட்சக்கணக்கில் அவர் மீது கடமையானாலும் அதன் ஒரு பகுதியைத் தடுத்து வைத்துக் கொள்வதற்கான எந்த முயற்சியிலும்இறங்காமல் பூரண திருப்தியுடன் அதை நிறைவேற்றுவார்.
    ஜகாத் என்பது நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரம் சம்பந்தபட்ட ஒரு வணக்கமாகும். உண்மை முஸ்லிம் மார்க்கம் தெளிவுபடுத்தியதைப் போன்று பூரணமாக ஜகாத்தை நிறைவேற்றுவதில் அலட்சியம் செய்யமாட்டார். பலவீனப்பட்ட ஈமானும் குறுகியஇதயமும் உடையவருக்கு மட்டுமே ஜகாத்தைப் பூரணமாக வழங்குவதில் சிரமம்இருக்க முடியும். அத்தகையோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஜகாத்தை பூரணமாக நிறைவேற்றும் வரை அவர்களுடன் போரிட்டு அவர்களது உதிரத்தை பூமியில் ஒட்ட மார்க்கம் அனுமதிக்கிறது.
    முதலாவது கலீபா அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் மார்க்கத்தை முழுமையாக ஏற்காது தடுமாறிக் கொண்டிருந்தவர்களிடம் கூறியது என்றென்றும் நினைவுகூரத் தக்கதாகும். “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக்கும் ஜகாத்துக்குமிடையே பிரித்துப் பார்ப்பவனோடு நிச்சயமாக நான் போரிடுவேன்.”
    தொழுகை மற்றும் ஜகாத்துக்குமிடையே உள்ள உறுதியான தொடர்பை மிக ஆழமாக அறிந்ததனால்தான் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள்இவ்வாறு சத்தியமிட்டார்கள். திருமறையின் பல வசனங்களில் தொழுகை ஜகாத்இணைத்தே கூறப்பட்டுள்ளன.
    இன்னும் எவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து வருகின்றனரோ…. (அல்குர்அன் 5:55)
    நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (அல்குர்அன் 2:43)
    எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்து தொழுகையைக் கடைப்பிடித்தும் ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ…. (அல்குர்அன் 2:277)
    உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்தமற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் “நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும்.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத்தேவையுமில்லை.” (ஸஹீஹுல் புகாரி)
    தன்னை நிழலிட்டுள்ளஇம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல.இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியான அல்லாஹ்வின் கூலி மகத்தானது, பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்துஇரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத்தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோஇச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்.” நோன்பாளிக்குஇரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது þறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    þதனால் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்தியஇம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஒதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும்இரவுகளில் தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபடவேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக þருந்தார்கள். அதிலும் ரமழானின்இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.
    அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: “நபி(ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழுஇரவும் வணங்குவார்கள், குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள், தங்களது ஆடையைஇறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். “ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறி அந்தஇரவில் நின்று வணங்க ஆர்வ மூட்டுவார்கள். மேலும் கூறினார்கள்: “ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படைஇரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
    மேலும் கூறினார்கள்: “எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    þதனால்தான் மகத்துவமிக்கஇம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புரிவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது.இம்மாதஇரவுகளில் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, பஜ்ரு நேரம் உதயமாவதற்கு சற்றுமுன் சில கவளங்களைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, பஜ்ருத் தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.
    þறையச்சமுள்ள, மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் தராவீஹ் தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகுஇரவுத் தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஸஹ்ருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் பஜ்ருத் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்லவேண்டும்.
    ஷஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள்இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை வலியுறுத்தி, “ஸஹர் செய்யுங்கள்! நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத்இருக்கிறது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    காரணம் என்னவெனில், ஸஹர் நேரத்தில் விழித்தெழுவதுஇரவில் நின்று வணங்க வாய்ப்பை எற்படுத்தும். பஜ்ரு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது.இதை நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்.
    ஜைதுஇப்னு ஸப்பித் (ரழி) அவர்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்குச் சென்றோம்” என்று கூறினார்கள். ஒருவர் “அந்த þரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (þடைவெளி)இருந்தது?” என்று கேட்டார். “50 ஆயத்துகள் (ஒதும் நேரம்)” என ஜைது (ரழி) பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    இறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நபிலான நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் (துல்ஹஜ் பிறை 9) மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.
    þது குறித்த நபிமொழிகள்:
    அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, “அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    þப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்; அதைப் பிறருக்கும் ஏவினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது: “அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்” எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    þப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் வரும் ஆண்டு உயிருடன் þருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
     அவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அந்த நோன்பின் மாண்பைப்பற்றிஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும்.இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது,இரண்டு ரக்அத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    அபூதர்தா (ரழி) அவர்கள் கூறியதாவது: “எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவதுஇன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    அப்துல்லாஹ்இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13, 14, 15வது நாட்களைக் குறிக்கும். அதனை அய்யாமுல் பீழ் என்று கூறப்படும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான அதாரங்களும் உள்ளன.
    முஅதத்துல் அதவிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா?” என்று கேட்டேன். அன்னையவர்கள் “ஆம்!” என்றார்கள். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்?” எனக் கேட்டேன். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    மார்க்கத்தின் நெறிகளைப் பேணிக்கொள்ளும் முஸ்லிம், ஹஜ்ஜுக்குச் சென்றுவரும் வசதியைப் பெற்றிருந்தால் அதன் மீது தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அந்தப் பரிசுத்த ஆலயத்துக்குச் செல்லும்முன் ஹஜ்ஜின் சிறிய, பெரிய அனைத்து சட்டங்களையும் முழுமையாக அறிந்து,இந்த மகத்தான கடமையின் தத்துவமென்ன என்று விளங்கி அதன் கிரியைகளைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மனதின் சலனங்களிலிருந்து அகன்று, ஈமானின் நிம்மதியைப் பெற்று, இஸ்லாமின் மறுமலர்ச்சியை உணர்ந்து கொள்வார்.

 அங்கீகரிப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு தனது ஊர் மற்றும் குடும்பத்தினரிடம் திரும்புகிறவர் அவரின் தாய் அவரை பெற்றெடுத்த தினத்தில் இருந்ததுபோல் பாவங்கள் நீங்கியவராக திரும்புகிறார். பைத்துல்லாஹ்வை மையமாகக்கொண்டு உலகின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த மகத்தான மார்க்கத்தின் மாண்புகளைப் புரிந்து, தனது இதயத்தை ஈமானால் நிரப்புகிறார்.
    எனெனில், ஹஜ் என்பது முஸ்லிம்களின் உலகளாவிய மாநாடாகும். ஹஜ்ஜைத் தவிர வேறு எங்கும் இம்மாதிரியான மாநாட்டை உலகம் கண்டிராது. ஹாஜிகள் பல்வேறு இனம், நிறம், மொழியுடையவர்களாக இருந்தும் எவ்வித ஏற்றத் தாழ்வுமின்றி மிகப் பெரியவனான ஏக இறைவனாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் மற்றும் தல்பியாவை முழங்குகிறார்கள்.
    அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்
    இவ்வுலகில் தனக்கு அருளப்பட்ட அனைத்தும் தனது இரட்சகனை வணங்குவதற்காகத்தான் என்பதில் முஸ்லிம் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பார்.
    (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
    இப்பிரபஞ்சத்தைச் செழிப்பாக்குவதிலும், புவியில் அல்லாஹ்வின் எகத்துவ கலிமாவை உறுதிப்படுத்துவதிலும், வாழ்வில் இஸ்லாமிய நெறிமுறையைக் கொண்டுவருவதிலும் அவன் எடுக்கக்கூடிய எவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சியிலும் அல்லாஹ்வை வணங்குவதே அவனது நோக்கமாக இருக்க வேண்டும். நாம் அல்லாஹ்வை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்க வேண்டும். அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்விடம் மனிதன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி தனது அனைத்து செயலிலும் அவனது திருப்தியையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். இறைவழியிலேயே தனது செயல்கள் அனைத்தும் அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    முஸ்லிம் செய்யும் இறைவணக்கங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்புவியில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதும் அவனது வழிமுறையை வாழ்வில் பின்பற்றுவதும்தான். இவ்வாறு, தனிமனிதரின் குடும்பம், சமூகம், நாடு என வாழ்க்கையின் அனைத்திலும் அல்லாஹ்வின் மார்க்கமே ஆட்சி செய்யவேண்டும்.
    மனித இனம் மற்றும் ஜின் வர்க்கத்தை எந்த இலட்சியத்துக்காக அல்லாஹ் படைத்தானோ, அந்த மகத்தான இலட்சியத்தை உறுதிப் படுத்துவதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் தனது இறைவணக்கங்கள் குறையற்றதாக அமையும் என்பதை முஸ்லிம் உணர்ந்துகொள்ள வேண்டும். மனித, ஜின் வர்க்கத்தை அல்லாஹ் படைத்தது (இஃலாவு கலிமதில்லாஹ்’) புவியில் அல்லாஹ்வின் கலிமாவை உயர்ந்தோங்கச் செய்வதற்காகத்தான். எனெனில் அதன்மூலமே மனிதகுலம் அல்லாஹ்வை வணங்குகிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்.
    (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
    இதுதான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் பற்றிய நேரான பார்வையாகும். இக்கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது முஸ்லிம் இறைத்தூதைச் சுமந்தவன் என்று விளங்கிக் கொள்ளலாம். மேலும் முஸ்லிம், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும். அந்தத் தூதுத்துவத்தையும், அவனது கட்டளைகளையும் ஏற்காதவரை அவனுடைய இஸ்லாம் பூரணத்துவம் பெறாது. தனது நடைமுறை வாழ்வில் அதை உறுதிப்படுத்தி மனத்தூய்மையுடன் செயல்படுத்தாத வரை அவனது வணக்கங்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்பட்டதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
    இந்தத் தூதுத்துவம்தான் முஸ்லிம் தன்னை இஸ்லாமைச் சேர்ந்தவன் என்று சொல்வதற்குரிய சரியான அடையாளமாகும். அதுமட்டுமே அல்லாஹ்வின் பாதையில் போராடும் வாய்மைமிக்க முஸ்லிம்களின் அந்தஸ்தில் அவரை சேர்ப்பிக்கிறது. அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகோலுகிறது. மேலும் மனிதன் இப்புவியில் படைக்கப்பட்டதற்கான, ஏனைய படைப்பினங்களைவிட மேன்மை பெற்றதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறது.
    அதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தாம் அவர்களைச் சுமந்து செல்லும்படி செய்கிறோம். நல்ல அகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்அன் 17:70)
    வசந்தகால தென்றலை எதிர்கொள்வது போல் உண்மை முஸ்லிம் இந்தத் தூதுத்துவத்தை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வதில் எவ்வித புதுமையும் இல்லை. அதன் உயர்வுக்காக தனது அனைத்து முயற்சிகளையும் செல்வங்களையும் நேரத்தையும் அர்ப்பணிப்பார். அதுதான் அவரது தனித்தன்மையான வாழ்வுக்கும் அல்லாஹ்வை நெருங்கி இருப்பதற்கும் அடையாளமாகும். அதைத்தவிர வாழ்வில் எந்த சுவையும் கிடையாது. அதுவன்றி வாழ்வதில் அர்த்தமேயில்லை. அதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து முன்னேறிச் செல்வதைத் தவிர அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்கான வழி எதுமில்லை.
    மார்க்க அழைப்புப் பணியே உண்மை முஸ்லிம் நிலைநாட்ட வேண்டிய அமல்களில் மகத்தானதாகும். அல்லாஹ்வின்பால் நெருக்கி வைக்கும், அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும் உன்னதமான நற்செயலாகும். எனவே உண்மை முஸ்லிம் இந்த அழைப்புப் பணிக்கு உதவுவதிலும் இதன் மகத்தான இலட்சியங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதிலும் தொடர்ந்து முயலவேண்டும். அதைத் தவிர வேறெந்த இலட்சியத்தையும் நோக்கமாக கொள்ளக்கூடாது.
    அதிகமாக குர்அன் ஒதுவார் 
    ஈமான் என்ற இந்த உயரிய அந்தஸ்தை அடைவதற்காக முஸ்லிம் பரிசுத்த திருக்குர்அனின் நிழலில் இளைப்பாறுவதை வழமையாக்கி நேர்வழியின் தென்றலை சுவாசித்து நன்மையின் உச்சத்தை அடைவார். அதன் வசனங்களை இறையச்சத்துடன் இரவு பகலில் அதிகமதிகம் ஒதி அவைகளை ஆழ்ந்து சிந்திப்பார். அதற்காக குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குவார். தனது இரட்சகனுடன் உரையாடி, அவனின் வேத கருத்துக்களை ஏற்று, இதயத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு தனது ஈமானையும் மன நிம்மதியையும் அறிவாற்றலையும் அதிகரித்துக் கொள்வார்.
    அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூர்வதால் (உண்மை விசுவாசிகளின்) இதயங்கள் நிச்சயமாக நிம்மதியடையும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்ளும். (அல்குர்அன் 13:28)
இறையச்சமுள்ள முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அழகிய முறையில் குர்அனை அணுக வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”திருக்குர்அனை ஒதுகின்ற மூமினின் நிலை ஆரஞ்சுப் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்அன் ஒதாத மூமின் பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று. (அனால்) அதற்கு வாசனை கிடையாது. நயவஞ்சகனாக இருந்து கொண்டு, குர்அனையும் ஒதி வருகிறவனின் நிலையானது துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு. நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்அனை ஒதாமலிருப்பவனின் நிலையானது குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “”நீங்கள் குர்அனை (அதிகமதிகம்) ஒதுங்கள். அது அதை ஒதியோருக்கு மறுமை நாளில் சிபாரிசு செய்யும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
     மேலும் கூறினார்கள்: “”குர்அனை நன்கறிந்து ஒதுபவர் மறுமை நாளில் மிக கண்ணியமான நல்லோர்களுடன் இருப்பார். குர்அனை ஒதும்போது சிரமத்துடன் திக்கித் திக்கி ஒதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    இதற்குப் பிறகும் ஒர் உண்மையான முஸ்லிம் திருக்குர்அனை ஒதி அதன் கருத்துகளைச் சிந்திப்பதிலிருந்து அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்ன? ஆழ்ந்த இறைநம்பிக்கை, நிரந்தரமான நற்செயல்கள், எப்போதும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்நோக்கல், அல்லாஹ்விடம் தனது அடிமைத்தனத்தையும் உறுதிப்படுத்துதல் ஆகியவையே ஒரு முஸ்லிம் தனது இரட்சகனுடன் கொள்ளவேண்டிய தொடர்பாகும்.
     (எனக்கு வழிப்பட்டு என்னை) வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
 
இந்த அங்கீகரிப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு தனது ஊர் மற்றும் குடும்பத்தினரிடம் திரும்புகிறவர் அவரின் தாய் அவரை பெற்றெடுத்த தினத்தில் இருந்ததுபோல் பாவங்கள் நீங்கியவராக திரும்புகிறார். பைத்துல்லாஹ்வை மையமாகக்கொண்டு உலகின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த மகத்தான மார்க்கத்தின் மாண்புகளைப் புரிந்து, தனது இதயத்தை ஈமானால் நிரப்புகிறார்.

No comments:

Post a Comment